எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இங்கே  பகிர்விற்கும்  கருத்திற்கும்  அளிக்கப்படும்  மதிப்புகள்  எந்த   மனிதருக்கும்  அளிக்கப்  படுவதில்லை. என்றைக்கும்  பதிவிடுவோர்  கருத்துக்களை   பதிவோர்  பல   நாள்   தொடர்ச்சியாக   காணவில்லையெனில்  அவர்களைப்   பற்றி   விசாரிப்போம்  என்ற   எண்ணம்   கூட  இல்லாதவர்கள்  எப்படி   மனிதனாக   இருக்க   முடியும்  அதிலும்   கவிஞர்களாக   இருக்க   முடியும். மற்றவர்களின்   வலியியைப்  பிழிந்து   கவிதை   சாறு   எடுத்து   தங்கள்   படைப்புக்களுக்கு   கரு   கொடுக்கும்  அற்பர்களை  என்னவென்று  சொல்வது? ஒரு   நல்ல   கவிஞன்  என்பவர்   எழுதித்   தான்   தன்னுடைய  திறமையை   வெளிப்படுத்த   வேண்டும்   என்றில்லை  மற்றவர்களின்  உணர்வுகளை  மதித்து   மனித   மாண்புடன்  வாழ்ந்தாலே   போதும். 

குற்றுயிராய்  
கிடப்பவனின்   
குருதி  ஊற்றி  எடுத்து  
தன்  எழுதுகோலுக்கு  
உயிர்  கொடுக்கும்  
ஜடங்களாய்  போன  
பிரம்மாக்களை  என்ன  சொல்வது?

மேலும்

தங்களின் மூலமே செய்தி அறிந்தேன் மிகவும் வருத்தமாக உள்ளது. நீங்கள் சொல்வது சிந்திக்க வேண்டிய ஒன்று நண்பரே. மிகவும் வருந்துகிறேன். 29-Jul-2016 4:20 pm
குட் 29-Jul-2016 1:04 pm
உங்கள் கண்டனத்தை காகிதத்தில் எழுதி வாசலில் தொங்க விடுங்க அதுக்கு பதில் சொல்லும் அவசியம் எனக்கில்லை 29-Jul-2016 1:03 pm
இங்கே கருத்திற்கும் மதிப்பெண்ணுக்கும் மட்டுமே இடம் 29-Jul-2016 1:01 pm

  என் உயிரினும் மேலாய் மதிக்கும் அன்பு அம்மா Shyamala Rajasekar அவர்களின் மூத்த மகன் திரு.ராஜ்குமார் அவர்கள் கடந்த பதிமூன்று தினங்களுக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தார் அவருக்கு முப்பத்து ஆறு வயது மனைவி மற்றும் இரு குழந்தைகள் உண்டு அம்மாவால் இச்செய்தியை நண்பர்கள் எவருக்கும் அறிவிக்க முடியவில்லை இன்று எனக்கு எஸ் எம் எஸ் மூலம் தெரிவித்தார். அன்னாரின் ஆன்மா ஷாந்தியடையவும் அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தார் ஆறுதல் அடையவும் இறைவனிடம் வேண்டுங்கள்.  

மேலும்

அன்பு நிறை கவிஅம்மாக்கு அடியேனின் வணக்கம் பல. நான் நீண்ட இடைவெளிக்கு பின் தளத்தில் வந்தேன். அம்மாவின் அன்பு மகன் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இறைவா அன்னாரை இழந்தோர் இதயம் வலிமையாக்கு.! இதை தாங்கும் சக்தியை அதிகமாக்கு.! உங்கள் துக்கத்தில் ஒருவனாய் குமரி கவி சஹானா அவர்களே தளத்தில் பழைய நட்புக்களின் பதிவைதேடினேன். உங்கள் பதிவுகள் தேடியபோதுதான் இந்த துயர செய்தி கண்ணில் பட்டது. நீங்கள் நலம் என்று நம்புகிறேன். 04-Aug-2016 6:12 pm
அன்னாரின் பிரிவால் துயருறும் சியாமளா அம்மா மற்றும் அவர் குடும்பதினர் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனைகளும்.. 20-Jul-2016 11:53 pm
மரபு கவிதை மாதரசி மகனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் 20-Jul-2016 10:44 pm

வஞ்சப் புகழ்ச்சி  அணிக்கும் 

தற்புகழ்ச்சி  அணிக்கும் 
மட்டுமே  இங்கு இடம்...........
.........கவிஞன் 

மேலும்

நண்பர்களுக்கு  வணக்கம்  சிறிது  காலம் எனது  கணினி  பழுதின்  காரணமாக   எழுதாமல்  இருந்த  நான்  மறுபடியும்  எனது  "மங்கையர்க்கரசி" என்ற  சிறுகதை  மூலம்  எனது  எழுத்துப் பயணத்தை  துவக்கியுள்ளேன்.  என்பதை  மகிழ்வுடன்  தெரிவித்துக்  கொள்கிறேன்.

மேலும்

மிகவும் நன்றி 28-Oct-2015 1:22 am
நன்றி 28-Oct-2015 1:22 am
தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும் அக்கா. wel கம் back 27-Oct-2015 7:09 am
நண்பரே. வணக்கம் தாங்கள் கணினி பழுது பற்றி இனி கவலை வேண்டாம் தபாலில் அனுப்ப முயற்ச்சித்திருக்கலாம் உங்கள் படைப்புகள் எங்களுக்கு கிடைக்காததற்கு வருந்துகிறேன் வெற்றி அடைய படைப்புகள் இனி தொடர தமிழ் அன்னை ஆசி வேண்டுகிறேன் நன்றி t 27-Oct-2015 6:55 am

எங்கே போய்விட்டீர்கள் என் அன்பு நட்புக்களே...........???
நட்டாற்றில் நிற்பது போல் தோன்றுகிறது!!!!!!

மேலும்

நன்றி ராஜா........... உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி ............... 21-Apr-2015 7:12 pm
அந்த ஆத்துக்கு ஏன் போனேள்.. தளத்துக்கு வாரும்.. 21-Apr-2015 7:02 pm
கொஞ்சம் கண்ண திறந்து பாருங்க... இல்ல இல்ல கண்ணை மூடிப் பாருங்க நட்பே..! 21-Apr-2015 6:47 pm

வாழ்க்கையைக் கற்கிறேன் என் மகளிடமிருந்து........

என் மகள் சிறுகுழந்தையாய் இருக்கும் பொழுது எதற்காவது அடம் பிடித்து அழுதால் , என் மகளிடம் “நீ இப்படி அழுதுகொண்டிருந்தால் உன்னை மறுபடியும் எடுத்த இடத்திலேயே கொண்டு போய் விடுவோம்” என்று அவள் அப்பா கூறுவார். அவள் “என்னை எங்கிருந்து எடுத்தீர்கள்?” என்று கேட்பாள். அதற்கு அவர் “உன்னை நாங்கள் அம்பத்தூர் குப்பைத்தொட்டியிலிருந்து எடுத்தோம், நீ எங்கள் மகள் இல்லை உன் அம்மா, அப்பா வேறு யாரோ!” என்று கூறுவார். இது சாதாரணமாக சில குடும்பத்தில் நடக்கும் உரையாடல் தான் ஆனால் அதன் பின்பு நடக்கும் சம்பவம் தான் கொடுமை....

இன்று தற்செயலாக நானும் என் மகளும் உரையா (...)

மேலும்

வாழ்த்துக்கள்................. 23-Mar-2015 7:52 pm
நிச்சயமாக ......... நன்றி தோழமையே....... 23-Mar-2015 7:52 pm
மிக முக்கியம். அவர்கள் கவனிக்கவில்லை என்று எண்ணி நாம் பேசும் வார்த்தைகளிலும் கவனம் தேவை. 22-Mar-2015 7:49 am
அருமையான பயனுள்ள செய்தி ..... குழந்தைகளிடம் குழந்தையாக இருக்க வேண்டும் என்பதை உரைக்கிறது இந்த எண்ணம் ..எனக்கு இந்த மாதிரி அனுபவம் ஏற்பட இன்னும் மூன்று ஆண்டுகள் தேவைப்படும் ... 21-Mar-2015 11:45 pm

பெண்கள் தினத்தை முன்னிட்டு #தமிழ்குஷி இணைய வானொலியில் எனது உரை இன்று இரவு பத்து மணிக்கு மறு ஒலிபரப்பு கேளுங்கள் நட்புக்களே.....
கீழ் காணும் இணைப்புகளில் கேட்கலாம்............
இன்று சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி,
நான் நமது அன்பான நண்பர்களுடன்
பங்குபெறும் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
தமிழ்க்குஷி இணைய வானொலியில்..
கேட்டு மகிழுங்கள்..., நன்றி !!!!!!
Sumathi Srri Naan Raajamagal Madhuram Prabhakar Uma Bharathi Vidhya Gurumoorthy Latha Arunachalam Sahana Dhas Thenammai Lakshmanan தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் விழுதுகள் Anitha N Jayaram Mohana Opesh TamilKushi FM Sumitha Ramesh
ONLY on TamilKushi (...)

மேலும்

கண்டிப்பாக செய்கிறேன் சந்தோஷ்! வெகு சீக்கிரம் யூடியூபில் பதிவேற்றம் செய்ய முயல்கிறேன்....... 09-Mar-2015 10:39 am
உங்கள் அலைபேசி வாழ்த்தை என்னால் படிக்க இயலவில்லை எனது கைப்பேசியில் தமிழ் எழுத்துக்கள் படிக்கும் வசதி இல்லை. நிஜமாய் எழுத்து.காமிற்கு கோடிமுறை நன்றி சொல்லணும். உங்கள் பாராட்டிற்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன். உங்களைப் போன்றவர்களால் தான் என் திறமைகள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன. நன்றி 09-Mar-2015 10:38 am
நேற்று இரவு கேட்டவுடன் தங்களுக்கு அலைபேசி மூலம் வாழ்த்தினாலும் .... நம்மை எல்லாம் ஆளாக்கிய , அங்கீகாரம் அளித்த , ஓரளவு உயர்வதற்கு ஏணிப்படி போல அமைந்திட்ட , நம்மை நமக்கே அடையாளம் காட்டிய , நாம் அனைவரும் இணைவதற்கு காரணமாய் இருந்த இந்த எழுத்து தளத்தின் மூலம் வாழ்த்தினை பதிவு செய்வதில் மகிழ்கிறேன் சஹானா . ஆரம்பமே அருமை. இனிமையான குரல் . ஆணித்தரமாய் அழுத்தி கூறிடும் உங்கள் பாங்கு , நல்ல கருத்துக்கள் அடங்கிய உங்கள் உரை மிகவும் அருமை , பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் . என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . வாழ்க நூறாண்டு . 09-Mar-2015 6:59 am
வாழ்த்துகள் சஹானா..! ஒலிப்பதிவை எழுத்து தள எண்ணத்தில் பதிவேற்ற வாய்ப்பு இருப்பின் ... பதிவு செய்யலாம் சஹா.! 08-Mar-2015 10:55 pm

பெண்ணியம் என்பது வெறும் பேச்சுக்கு மட்டும் தான். இன்னும் அடிமைத்தனம் இருக்கிறதா என்ற கேள்விக்கு என்னிடம் பதில்.............? ஆனால் அடிமைத்தனம் என்பதையும் அன்புடன் ஏற்றுக்கொண்டாலே குடும்பம் என்பது கோவிலாகும் ஒவ்வொரு பெண்ணுக்கும். நாம் நாமாக வாழ்ந்தாலே பல பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளிதான்..........பெண்கள் அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்......

மேலும்

குடும்ப பொறுப்புகளையும் சிலர் அடிமைத்தனம் என்று தானே நினைக்கிறார்கள் 08-Mar-2015 8:56 pm
அனைத்துவித அடிமைத்தனத்தை பொறுத்துதானா ? 07-Mar-2015 10:06 pm
நன்றி........... 07-Mar-2015 9:16 pm
குடும்பம் வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்............. சந்தோஷ் 07-Mar-2015 9:16 pm

சுடச் சுட சேமியா உப்புமாவுடன் ஒரு காலை வணக்கம்.............
என் மகளுக்கு இன்று தமிழ் முதல் தாள் தேர்வு, நானே “தொடக்கக் கல்வித் துறை”யை “தோட்டக் கல்வித்துறை”ன்னு படிக்கிறேன். அவள் தேர்வு எழுத என் மனசு படபடக்கிறது...... கடவுளே நீதான் காப்பாத்தணும் என் நாவிலிருந்து தமிழையும் கூடவே என் மகளையும் தான்.............

மேலும்

நன்றி 05-Mar-2015 6:14 pm
நன்றி 05-Mar-2015 6:14 pm
கண்டிப்பா இறைவன் துணை இருப்பார்மா...கவலை வேணாம்..... 05-Mar-2015 1:46 pm
காப்பாற்றுவான், கவலைப் படாதீர்கள்! 05-Mar-2015 9:18 am
மேலும்...

மேலே