எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பே நீ 
எங்கு இருக்கிறாய்
உன் முகம்
பார்க்க 
நான்
காத்து இருக்கிறேன்
உன் முகம்
தெரியும் வரை
என் மனம்
தெளிவதில்லை
மழையடிக்கும் நேரத்தில்
மின்னலைப் போல்
உன் நினைவுகள்
என்னைச் சுற்றும்
மரங்கள் ஆடும் நேரத்தில்
வீசும் காற்றைப் போல்
என் மனம்
உன்னைத் தேடும்
நான் உன்னைப்
பார்க்கும் வரை
தண்ணீர் இல்லாத
மீனாக வாடியிருக்கிறேன்
உன் முகம்
பார்க்க 
துடித்துக் கொண்டிருக்கிறேன் 
தோட்டத்தில்
பூ மட்டுமே அழகு
என் மனதில்
நீ மட்டுமே அழகு
பூக்காத மரத்தைப் போல்
நான் இருக்கேன்
பூவாக நீ வந்து
அழகு படுத்த வா அன்பே
நிழல் இல்லாதக்
காட்டைப் போல் 
நான் இருக்கேன்
இருள் கொண்ட 
மேகமாக 
வா அன்பே
நொருங்கியக் கண்ணாடியாக
இருக்கும் என் மனதில்
முகம் பார்க்க
வா அன்பே
என் மனதில் உள்ள
ரோஜாத் தோட்டத்தில்
பூப்பரிக்க
வா அன்பே
அன்பே நீ எங்கு
இருக்கிறாய்
உன்னைக் காணும் வரையில்
நான்
காத்து இருக்கிறேன்...

மேலும்

இயற்கைக்காதல் கவிதை இலக்கியம் தமிழ் அன்னை ஆசிகள் தொடரட்டும் தமிழ் இலக்கிய படைப்புகள் 17-Aug-2017 4:15 am

மேலே