எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உங்களை மறப்பேனா அப்பா...

நான் கண்ட உலகின் தலை சிறந்த உழைப்பாளி நீங்கள் தானே...கடல் தாண்டி சென்று உங்கள் கால்கள் எவ்வளவு உழைத்திருக்கும்,தனிமையில் உங்கள் மனம் எவ்வளவு வலித்திருக்கும்...நான் அறிவேன் அப்பா ஒருமுறை என் தோளில் சாய்ந்து சொன்னீர்கள் அசதியாய் வந்து படுப்பேன் அலைப்பேசியில் உன் முகம் பார்ப்பேன் அடுத்த நொடி அதிகநேர(OT) வேலைக்கு சென்று விடுவேனென...
**என் தேவைகள் தீர்க்க தேய்ந்த உங்கள் செருப்பிற்கும் முத்தமிடுகிறேன்...**
உழைப்பாளர்கள் கொண்டாடப்படும் மாதத்தில் குவைத்தில் உழைக்கும் என் அப்பாவுக்காக...

மேலும்

அருமை தோழி... 28-Aug-2020 3:50 pm
பிரசவம் பொது தாய் அனுபவித்த வழியை விட பிள்ளைகளை மகிழ்ச்சியை காண முடியாத தந்தையின் வலிதான் அதிகம் 26-Nov-2016 11:06 am
நன்றி 26-Nov-2016 7:33 am
என் தந்தையை அறிவு புகட்டிய தெய்வமாகிய அவர்கள் கண்ட கனவை நனவாக்கி வருகிறேன் மலரும் அந்த நாள் இனி வருமா? 24-Nov-2016 12:08 pm

ஹயாக்ஸ்-க்கு வாழ்த்துக்கள்.

மேலும்

இந்த உலகத்தில் வாழ உனக்கு ஒரு நிமிடம் பாக்கியுள்ளது என்ன செய்ய போகிறாய் என கேட்டால் வைரமுத்து அவர்களை பார்க்கும் முயற்சியை தொடர போகிறேன் என்பேன்...இந்த நிமிடம் அலைப்பேசி முகப்பில் இருக்கும் அவரது புகைப்படம் கண்டு கண்ணீர் வழிகிறது அது ஏக்கமா? அல்லது அவர் எழுத்தின் தாக்கமா?அறிய முடியாமல் நான்...

மேலும்

உம் ஆசை வெகு விரைவில் நிறைவேறட்டும்... உம் கண்ணீர் அவரது மொழிகளின் பாதிப்புகள் , நானும் அவர் மீது பைத்தியமாய் இருப்பவள்தான்... 07-Jun-2015 2:25 pm
நிச்சயமாக சந்திப்பேன்...நன்றி நண்பர்களே... 02-Feb-2015 7:09 am
அவரது 60 தாவது பிறந்த நாளன்று வைரக்கரங்களை நான் தொடும்பொழுது.....நெஞ்சுக்குள் ஒரு எரிமலை...வெளியே மகிழ்ச்சிப் பனிமலை...கண்களில் ஏதோ காந்த சக்தி...புவி ஈர்ப்பையே மிஞ்சும் அது...நறும் சொற்கள் அரும்பிக்கொண்டே ....வற்றாத வார்த்தைகளும்...வாடாத கற்பனைகளும்...விரைவில் சந்திக்கப் பாருங்கள்.. 02-Feb-2015 6:50 am
வார்த்தைக்குள்.. வைரம் வைத்தவர், வாழ்வதற்கு தைரியம் விதைத்தவர். எல்லோருடைப மனககடலிலும் எதார்ததம் என்ற முத்தை எடுக்க தெரிந்தவர். அவரை சந்திப்பது சாகா வரம் என்றால்.. அவரோடு சமகாலத்தில் வாழ்வது கூட சரித்திரம் தான். 02-Feb-2015 6:19 am

மேலே