எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  தோழர்களே, இந்தவார ஆனந்தவிகடனில்  "லட்டு மாதிரி இருப்பது...", "உயிர்த் தீ" என்ற எனது இரு கவிதைகள் வெளியாகியுள்ளன.ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கும் கவிதைத் தேர்வுக் குழுவுக்கும் என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் கவிதை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!   


லட்டு மாதிரி இருப்பது ....

காலையில் வேலைக்குக் கிளம்புகையில்  
இரண்டரை வயது எதிர்வீட்டுச் சுட்டி  
‘அங்கிள், லட்டு மாதிரி இருக்கீங்க!’ என அதிரடித்தாள்.  
‘நான் பெரிய லட்டு, நீ சின்ன லட்டு’ என்று  
சொல்லிவிட்டு வரும் வழியில்,  
பருத்த உடலா,  
மஞ்சள் சட்டையா  
என் கொஞ்சல் பேச்சா  
லட்டு என்றிடக் காரணம் தேடிக் குழம்பி,  
லட்டுகள் உருளும் சாலையில் ஓடி  
லட்டைக் குடித்து  
லட்டை உண்டு,  
லட்டுகள் எரியும் மாலைப் பொழுதில்   
 வீடு திரும்பும் வரை,   
 சின்ன லட்டு சொன்னதுதான் மனதில் ஓடியது.   
 லட்டு மாதிரி இருக்கிற பெண்ணால்   
 யாரையும் லட்டாக்கிவிட முடிகிறது.       

 உயிர்த் தீ   

 தொலைக்காட்சியின் குழப்பமான காட்சிகளை   
 பார்க்கப் பிடிக்காமல் சட்டென்று ரிமோட்டால்   
 அணைத்த அந்தக் கணத்தில்தான்   
 அவளுக்கு அந்த எண்ணம்   
 முதன்முதலாக வந்தது....   
 உந்திச் சுடர் பற்றி எரியும்   
 அந்தத் தீபத்தை   
 ஒரு நொடியில் ஊதி அணைத்துவிட்டால்   
 எந்தக் காட்சியையும் பார்க்கத் தேவையிராது.       

-சேயோன் யாழ்வேந்தன்

மேலும்

அருமை நண்பனே. 02-Feb-2018 5:14 pm
நன்றி தோழரே! 27-Apr-2016 4:09 pm
அருமையான வரிகள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 11-Apr-2016 5:56 pm

தோழர்களே, இந்தவார ஆனந்தவிகடனில் (20.1.16) "மனசுக்குள் பனித்துளி”என்ற எனதுகவிதை வெளியாகியுள்ளது.ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கும் கவிதைத் தேர்வுக் குழுவுக்கும் மிக்க நன்றி! என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் கவிதை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! 

மேலும்

ஒரே பதிப்பு என்று தான் நினைத்தேன் அண்ணா .. கோவைக்கு தனி பதிப்பு என்பது இப்போது தான் அறிந்து கொண்டேன்.. ஏற்கனவே தோழி கிருத்திகா வின் கவிதை வந்து இருந்தபோதும் இந்த குழம்பம் தோன்றியது எனக்கு .. தெளிவுபடுத்திமைக்கு நன்றி அண்ணா.. இத்தோடு இன்று அண்ணனின் கவிதையும் கண்டத்தில் நீண்ட நாள் காத்திருந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானது அண்ணா.. இன்னும் சிலரின் கவிதைகளும் இடம் பெற வேண்டும் என எதிர்பார்கிறேன் .. நன்றி அண்ணா 21-Jan-2016 2:08 pm
நன்றி தோழர்! 21-Jan-2016 11:41 am
நன்றி தோழர்! 21-Jan-2016 11:41 am
கவிதைக்கும் தோழருக்கும் என் வாழ்த்துகள் 21-Jan-2016 10:18 am

கணையாழி ஜனவரி 2016 இதழில் வெளிவந்தஎனது “கறுப்பு வெள்ளி” என்ற கவிதையை, எழுத்துத் தள தோழர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.கணையாழி ஆசிரியர் குழுவுக்கும்,எழுத்துத் தோழர்களுக்கும் நன்றி! 


கறுப்பு வெள்ளி 

அந்தப் புதன்கிழமை என் நண்பனின்
யாதுமாகிய காதலிக்குத் திருமணம்.
முகூர்த்த நேரத்தில் மலைக்கோட்டை மீதேறி
அந்தத் திருமண மண்டபத்தை
வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளுடன் பேசிய அலைபேசியை
ஒரு பாறையில் மோதிச் சிதறிடச் செய்தான்.
இறங்கி வருகையில் ஒவ்வொரு படியிலும் நின்று
சங்கல்பம் எடுப்பதுபோல் எதையோ முணுமுணுத்தான்.
திரும்பி வருகையில் திருச்சி சாரதாஸில்
 அம்மாவுக்கு நூல்புடவை வாங்கினான்.
என்னிடம் பைக்கைப் பிடுங்கி
ஜோடியாக நடப்பவர்கள் மீது
மோதுவதுபோல்  நெருங்கி கிறீச்சிட்டு நிறுத்தினான்.
‘பிளஃபி’ என்று அவள் பெயர்வைத்த
அவனுடைய செல்ல நாய்க்குட்டியை
அது திரும்பி வரக்கூடாதென்று 
நாற்பது மைல் தள்ளி, விட்டு வந்தான்.
என்னதான் காதலிக்குத் திருமணம் என்றாலும்
இப்படியெல்லாமா செய்வார்கள்?
அந்தக் கறுப்பு வெள்ளிக்கிழமையில்
எதுவும் செய்யாமல் நான் என்னவோ
அமைதியாகத்தான் இருந்தேன்.
(நன்றி: கணையாழி)

மேலும்

நன்றி தம்பி! 11-Jan-2016 4:28 pm
நன்றி தோழர்! 11-Jan-2016 4:27 pm
நன்றி தோழர்! 11-Jan-2016 4:27 pm
நன்றி தோழர்! 11-Jan-2016 4:26 pm

ஆனந்தவிகடனில் (30.12.15) "திருடன் விளையாட்டு" “நிலாக்கனவு” என்ற எனது இரு கவிதைகள் வெளியாகியுள்ளன, தோழர்களே!

மேலும்

நன்றி தோழர்! 28-Dec-2015 9:10 pm
நன்றி தோழர்! 28-Dec-2015 9:09 pm
நன்றி தோழர்! 28-Dec-2015 9:09 pm
நன்றி தோழர்! 28-Dec-2015 9:09 pm

ஆனந்தவிகடனில், எழுத்துத் தளத் தோழர் தர்மராஜ் பெரியசாமியின்  (தர்மன்)  உணர்வுப் பூர்வமான கவிதை இந்த வாரம்  வெளிவந்துள்ளது.  தோழருக்கு  நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!


மனம் பிறழ்ந்தவன்கவிதை: தர்மராஜ் பெரியசாமிந்நீள் தெருவின் கடைக்கோடியில் வசிக்கும் என் சகோதரியின் வயதையொத்த அவள்எங்கள் வீட்டைக் கடக்கையில்மெல்லியதாய்ப் புன்னைகைப்பாள் என்னிடம்.முழுச் சந்திரன் முழுமை பெறும் நாளில்உக்கிரத்தை அடையும் அவள்மனம் பிறழ்ந்தவளெனக் கேட்டறிந்தவன்.ஒரு மாலையின் எதிர்பாரா மழையில்அவள் வீட்டுத் திண்ணையில் தன்னிச்சையாய்ஒதுங்கிய என்னை உள் அழைத்து

நனைஞ்சுட்டியா தம்பி?’ என வாஞ்சையாகத்தாவணித் தலைப்பில் தலைதுவட்டிநடுங்குமிந்த உடலுக்கும் உள்ளத்துக்கும்தேநீரையும் அன்பையும்கதகதப்பாய்த் தந்துவிட்டு புன்னகைக்கிறாள்.பரவசம் படரும் அத்தருணத்தில்அவளெனக்கு சகோதரி என்பது மட்டும்போதுமானதாய் இருந்ததுஅக்கணத்தை முழுவதுமாய் அனுபவிக்க.

மேலும்

வாழ்த்துக்கள் தொடருங்கள் மேலும் 06-Dec-2015 11:52 pm
அண்ணன் ஜின்னா அவர்களுக்கு என் அன்பான நன்றிகள். தொடர் ஊக்கத்திலும் அன்பிலும் பெரு உவகை கொள்கிறேன் அண்ணன்.. மிக்க நன்றி... 06-Dec-2015 10:38 pm
மிக்க நன்றி தோழமையே... 06-Dec-2015 10:34 pm
மிக்க நன்றி குமரேசன் அண்ணன் அவர்களே.. ஊக்கத்திற்கும் அன்பிற்கும் என் தாழ்மையான நன்றிகள் சகோ... 06-Dec-2015 10:34 pm

ஆனந்த  விகடன் 26.11.15 சொல்வனத்தில் தோழர் கனாக் காண்பவன் கவிதையுடன் சேயோன் யாழ்வேந்தன் கவிதை.


கவிதைகளை எழுத்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.  கனாக் காண்பவனுக்கு வாழ்த்துகள்!

நடு விழா! என்னைக் கொன்று
அழைப்பிதழ் அடித்தார்கள்என்னைக் கொன்று இடம்
அமைத்தார்கள்என்னைக் கொன்று மேடை
சமைத்தார்கள்என்னைக் கொன்று
இருக்கை செய்தார்கள்என்னை நட உன்னை
அழைத்தார்கள்
!

மேலும்

நன்றி தோழர்! 20-Nov-2015 5:59 pm
அருமையான படைப்பு தோழரே..... தொடருங்கள். 20-Nov-2015 1:42 pm
நன்றி தோழர்! 20-Nov-2015 12:57 pm
நன்றி தோழர்! உங்கள் கவிதை இன்னும் உயரம் எட்டும்! 20-Nov-2015 12:57 pm

காப்பியடிக்கும் எழுத்தாளர்கள்(?)

அச்சு இதழ்களிலேயே காப்பியடித்த படைப்புகள் வெளிவரும்போது, இணையத்தில் சொல்ல வேண்டுமா என்ன?  நிறையப் படைப்புகள் எங்கோ படித்த மாதிரியே இருக்கிறதே என்று மனதைக் குடையும்.  அப்படி மனதை குடைந்த 'எழுத்து'ப் படைப்பு இது.  இது யாருடையது என்று கொஞ்ச நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன்.  இணையத்தில் தேடியதில் கிடைக்கவில்லை.  சமீபத்தில் ஒரு தொகுப்பில் பார்த்ததில், அது "விக்கிரமாதித்தன் நம்பி" அவர்களின் கவிதை என்று தெரிந்தது.  எழுத்துக் குழுமம் இதுபோன்று பிறரின் படைப்புகளை அச்சு அசலாக அப்படியே பதிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா?  வெறுமனே இந்த ஒரு படைப்பை நீக்கினால் போதாது.  பதிந்தவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

கண்ணாடி கலைஞர்கள்முன்னாடி 

இருந்து சாதகம் செய்த இசையரசு கண்ணாடி 

முன்நின்று 

பாவனைகள் வளர்த்திய கலைக்குரிசில் கண்ணாடி 

பார்த்து 

அபிநயிக்கும் கலையரசி கண்ணாடி 

ரசித்துவாழும் 

கன்னிப்பெண்கள் கண்ணாடி 

பதித்த 

பள்ளியறை கட்டுவித்த பேரரசு கண்ணாடி 

கண்டுகண்டு 

காதலுறுகிறார்கள் கலைஞர்கள் கண்ணாடி 

காலங்காலமாக 

கமுக்கமாக ·        
VAZHKKAIதிருத்து | நீக்குஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க·        
எழுதியவர் : கிருஷ்ணன் BABU·        
நாள் : 7-Dec-13, 12:54 pm·        
சேர்த்தது : KRISHNAN BABU·        
பார்வை : 19மேலும்

புடிங்க சார் ... புடிச்சு ஜெயில்ல போடுங்க 14-Nov-2015 7:53 pm
நடவடிக்கை என்றால் அதிகபட்சமாக உறுப்பினரின் கணக்கை தான் முடக்கம் செய்யும் அதிகாரம் எழுத்து தளத்திற்கு இருக்கும் . வேறு வேறு புது பெயரில் உள் நுழைந்து இதையே அவர்கள் செய்யக்கூடும். எந்த தளமாக இருந்தாலும் திருட்டு படைப்புகளை ஒழிக்க Digital Millennium Copyright Act (DMCA) எனும் இணையதள காப்புரிமை விதியின் படி , படைப்புக்கு உரிமையுடைவர்.. DMCA இணையத்தளத்தில் தெளிவான ஆதராமான புகாரளித்தால்.. தக்க நடவடிக்கையாக படைப்பு பதிவாகியுள்ள பக்கம் அல்லது பிளாக்கரை தடைச்செய்வார்கள். புகார் வழிமுறையும் எழுத்து தளம் ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறது. மாற்றான் பிள்ளைகளுக்கு கண்டவரெல்லாம் எப்படி அப்பன் ஆககூடும் என்பதை திருடி பதிவு செய்வோர் உணர வேண்டும். திருட்டுப் புத்தியுடைவர்களுக்கு இத்தகைய உணர்வு இருக்குமா என்பது சந்தேகமே தோழர். 14-Nov-2015 4:38 pm

ஆனந்தவிகடனில் (18.11.15) சொல்வனத்தில் "சிறுவர்களின் வீடு" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.  ஆனந்தவிகடனுக்கு நன்றி!


சிறுவர்களின் வீடு சுற்றுச்சுவரில்
ஒரு சிறுவன்பச்சிலையால் ஸ்டம்ப்
வரைகிறான்.வாசலில் ஒரு சிறுவன்பாண்டி விளையாடுகிறான்.முற்றத்தில் ஒரு
சிறுவன்மழையிலாடுகிறான்.கூடத்தில் ஒரு
சிறுவன்பல்லாங்குழி விளையாடுகிறான்.சமையலறையில் ஒரு
சிறுவன்சாமிக்குப் படைப்பவற்றை
ருசிபார்க்கிறான்.கழிப்பறையில் ஒரு
சிறுவன்கதவைத் திறந்துவைத்துப்
போகிறான்.குளியலறையில் ஒரு
சிறுவன்சத்தமாகப் பாடுகிறான்.படுக்கையறையில்
ஒரு சிறுவன்அம்மாவின்மேல்
கால்போட்டுத்தூங்குகிறான்....ஞாபகங்களால் வேய்ந்த
என் வீட்டில்சிறுவர்கள் மட்டுமே
வசிக்கிறார்கள்!

-சேயோன் யாழ்வேந்தன்

(நன்றி: ஆனந்தவிகடன் 18.11.15)

மேலும்

மிகவும் ரசித்தேன் கவிதை. தர்மனிடமும் அதைப் பகிர்ந்துகொண்டேன். ஒரு நல்ல படைப்பாளியின் ஒரு நல்ல படைப்பை இப்படித் திருடி, பெருமை தேடுவதை என்னவென்று சொல்வது? வருந்துகிறேன் தோழர்! 14-Nov-2015 2:50 pm
வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழமையே! 14-Nov-2015 2:47 pm
வாழ்த்துக்கு நன்றி தோழர்! 14-Nov-2015 2:47 pm
நல்ல படைப்பு! வாழ்த்துக்கள் தோழரே! 14-Nov-2015 5:19 am

28.10.15 ஆனந்தவிகடனில் ராம்வசந்த் மற்றும் எனது கவிதை ஒரே பக்கத்தில். 

பூம்பாவாய்
பூம்பூம் மாடு வாசலில் நிற்கிறது.அதன் அலங்கார உடை கண்டுஅறியாதார் அதிசயிப்பர்.கொம்புகளின் கூர்மைகுத்திக் கிழிக்குமோ என்றுகுழந்தைகள் அஞ்சும்.பூம்பூம் மாட்டுக்காரன் வந்துவிட்டால்செய்கிற வேலையை விட்டுவிட்டுஓடிவந்து பத்து ரூபாய் கொடுப்பாள்.நான் அந்த மாட்டுக்குஇரு வாழைப்பழங்கள் கொடுப்பேன்அவளிடம் கேட்டுக்கொண்டு!நன்றி: ஆனந்த விகடன்

மேலும்

நன்றி தோழர்! 28-Oct-2015 2:45 pm
நன்றி தோழர்! 28-Oct-2015 2:45 pm
நன்றி தோழர்! 28-Oct-2015 2:45 pm
நன்றி தோழர்! 28-Oct-2015 2:44 pm

ஆனந்தவிகடனில்"வடைமழை" என்ற எனது மூன்றாவது கவிதை வெளியாகியுள்ளது. ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கும் கவிதைத் தேர்வுக் குழுவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!  எனக்கு ஊக்கமளித்து வரும் எழுத்துத் தள கவிதைத் தோழர்கள் அனைவருக்கும் நன்றி!


வடை மழைவயற்காட்டிலிருந்து
திரும்பும்போது

கணக்கு வைத்திருக்கும் மளிகைக் கடையில்தேன் மிட்டாயோ
வரிக்கியோமறக்காமல் வாங்கி
வருவார் அப்பாவானம் இருட்டிக்கொண்டுமழை வரும் அறிகுறி
தெரிந்தால்உளுந்தை ஊறவைத்துவிடுவாள்
அம்மா.மழை வரும் நாளில்
கண்டிப்பாகவடை சுடுவாள் என்றுதூறலோடு ஓடிவருவார்
அப்பா,அன்றைக்கு மட்டும்
வெறுங்கையோடு.‘என்ன வாங்கி வந்தேப்பா?’
என்றுஓடிவரும் பிரியாக்குட்டியிடம்அம்மா சொல்வாள்‘இன்னைக்கு உங்கப்பாஉனக்கு மழை வாங்கி
வந்திருக்கார்’ என.அதையும் நம்பிவிடுவாள்மின்னல் கண்ணைப்
பறிக்கும் என்ற பயமின்றிஜன்னல் வழியே கைநீட்டிமழை வாங்கிக்கொள்ளும்
பிரியாக்குட்டி.

மேலும்

தங்களின் அன்பான வாழ்துக்கு நன்றி தோழர்! 12-Oct-2015 11:42 am
வாழ்த்துக்கள் தோழரே...!!! 09-Oct-2015 10:49 pm
தங்களின் அன்பான வாழ்துக்கு நன்றி தோழர்! 09-Oct-2015 4:25 pm
தங்களின் அன்பான வாழ்துக்கு நன்றி தோழர்! 09-Oct-2015 4:25 pm
மேலும்...

மேலே