எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எண்ணம்தான்வாழ்க்கை

__________________________

எண்ணம்தான்வாழ்க்கைநமதுவலிமையான  எண்ணம்

நமதுவாழ்க்கையைஉருவாக்கும்இன்றுநம்பிக்கையுடன் 

எதுநடக்கும்என்றுநம்புகிறீர்களோஅதுநிச்சயம்நாளை

நடக்கும்  என்பதேஉண்மை அப்துல்கலாம்

மேலும்

மனிதவெடியால் மரணித்தவர்கள்
மனிதர்கள் மட்டுமல்ல! மனிதமும் தான்! 

மேலும்

எண்ணங்கள் அழிவதில்லை 




————————————-


நீரு பூத்த நெருப்பாய்


நித்தம் நித்தம் கொல்லும்


நினைவுகள் அலை அலையாய்


நிற்காமல் வந்து பாயும்!


மனமென்னும் மணலில்


மாற்றயியலாமல் பின்வாங்கும் !


மனத்தில் எழும் எண்ணங்கள்


அலையெனின் ஏன் நினைவுகளை


அழிப்பதில்லை?

மேலும்

                   சின்ன  சின்ன ஏமாற்றங்கள்.


                 —————————————-




       சின்ன சின்ன ஏமாற்றங்கள் நம்மைச்


       சிதற. செய்யும்  ஏமாற்றங்கள்!




        அடுத்த வீட்டிற்கு  மட்டும்  கடிதம் போடும்


         அஞ்சலக அலுவலர்  நம் வீட்டைகத் தாண்டும் போது


        அடையும்  ஏமாற்றம் !


       


        கொழுகொழுவென அன்னைக்  கையில் அழகாய் சிரிக்கும்


         குழந்தை நம் கையில் வந்தவுடன் அழும்போது


         ஏற்படும் ஏமாற்றம்!




          லாட்டரி சீட்டில் நம் எண்ணிற்கு அடுத்த எண்


          லட்சணமாய் நாளேற்றில் அச்சேறி


          ஏற்படுத்தும் ஏமாற்றம் !




          மூச்சு வாங்க ஓடிவந்தும் நாம் பிடிக்க முயன்றும்


          முடியாமல், நகர்ந்து ஓடும் பேருந்தை பின்னால் நின்று


          பார்க்கும்  ஏமாற்றம் !




           அன்புடன்  பறித்துச்  சென்ற  ரோஜா மலர் 


           அவளிடம்  கொடுக்க  எண்ணி  எடுக்கையில்


            இதழ்களெல்லாம்  உதிர்ந்து வெறுமையாக -அவன்


             இதயம்  துடிக்கும்    ஏமாற்றம்!




           இவை எல்லாம்   சின்ன சின்ன ஏமாற்றங்கள் தான் 


             எனினும் ,


             நல் ஆட்சி மலரும் என ஓட்டுக்களை அளித்து 


             கல்லாக காத்திருக்கும்  மக்களுக்கு 


             ஒவ்வொரு  முறையும் ஏற்படுவது


             சின்ன சின்ன ஏமாற்றந்தானா?







மேலும்

ஹைக்கூ


 கூரையானது கூரைச் சேலை
மழைக் காலத்தில்.

மேலும்

போற்றுதற்குரிய ஹைக்கூ :-------கூரையானது கூரைச் சேலை மழைக் காலத்தில்.... பாராட்டுக்கள் தொடரட்டும் நம் நட்பு இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 23-Jan-2019 5:27 pm

எண்ணங்கள் -


--------------




எப்பொழுதும் என்னுடனேயே இருக்கின்றாய் 


எங்கு நான் சென்றாலும். 




உறங்கும் போது கனவாக 


உறங்கா போது நினைவாக! 




நான் சோர்ந்து ஓய்வெடுத்தாலும் 


நீ  மட்டும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறாய்! 




என்னுள் இரண்டற கலந்தாய் 


என் பலமும் பலவீனமும் நீ தானே! 




கடந்து வந்த பாதைகளை 


கட்டாயம் எடுத்து வருகிறாய்! 




இவற்றிலிருந்து என்னை 


இனிதாக விடுபடமுடியாமல் செய்கின்றாய்! 




என்னுள்ளே ஓடும் இறையுணர்வை மட்டும் 


என்னுள்ளேயே விட்டுவிட்டு 




மற்ற பயனற்ற யாவற்றையும் 


மறக்காமல் எடுத்துச் சென்றுவிடு! 




என் வியப்பெல்லாம் ஒன்றே ஒன்றுதான் 


என் முடிவுக்குப் பின் நீ எங்கிருப்பாய்! 




Shantha Venkatakrishnan

மேலும்

போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் நம் நட்பு இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 23-Jan-2019 5:25 pm

மேலே