எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படர்மேக...
பனி தூறல் தூரிகை யின்றி
கண்ணாடியில் காரிகை தீட்ட...
கண்களும் கண்ணாடியின் உள்புறத்தில்
ஒருமனதாய் காரிகை மீது காதல் கொள்ள...
மோகமும் ஒன்றுடன் ஒன்று கூடாமல் 
மணிக்கணக்கில் சற்று தள்ளியே நிற்க... ஆதலால்
தூது ஒன்றை மென் காற்றில் அனுப்பினேன்
மென் காற்றும் அவளது மேனியில்
வருட வருட வெட்கத்தில் ஒழிந்தால்
தூதும் சொல்ல வந்ததை சொல்லாது
இப்போது தூரமாய் நின்றது...
நெடுநேரமும் நீண்டது...
பனி மேகமும் கலைந்தது...
தூறலோ சுட சுட ஓய்ந்தது...
காரிகையின் முகமும் மெல்ல மெல்ல
கண்ணாடியில் மறைந்தது கண்களின்
காதலை அறியாததாய்...

மேலும்

🤰அமைதியாக நூலகத்தினுள்  அமர்ந்திருக்கிறாள் 
புத்தகமாய்....💌
புத்தகத்தை திறந்து படிக்க ஆசை தான்...👀
ஆனால் 🤔சிறு தயக்கம் அவற்றில் அவளது
😍அன்பு 😠கோபம் 🙋விருப்பு 🤦வெறுப்பு இவை
யாவையும் ✍️வடித்தவள் ❣️காதல் எனும் வரும் பொழுது
👤இவனை பற்றியும் 📕அப்புத்தகத்தின் எதாவது ஓர் 📄பக்கத்தின் ஓரத்தில் 📝வரைந்திருப்பாளா என்று?????
💃உரியவளே உண்மையைச் சொல்  ஊமையாய் நூலகத்தினுள் 👉நீ உனை பற்றி படிக்க விருப்பம் இருந்தும் உன் விருப்பத்திற்காக நூலகத்தின் வெளியே ஒருதலைக் காதலாய் 👉நான்🕺

மேலும்

இருள் சூழும் மாலை பொழுதில் 
மழை பொழிந்து வெறித்தது எங்கள் வீட்டை விட்டு யாவரும் வெளிச்சத்தை நோக்கி பறந்து மாய்ந்து கொண்டிருந்தனர் ஒன்றன் பின் ஒன்றாக இரையாக கெளரவ படைகளைப் போல் நிமிடத்திற்கு நிமிடம் இது யாவையும் பார்த்து கொண்டிருந்த அந்த கூட்டத்தின்‌ தளபதி உலகம் விடிந்தது சுதந்திரம் பிறந்தது என்று தானே அனைவரையும் அந்த மின்விளக்கின் சுடர் ஒளியை சுற்றி ஆனந்தத்தை களியுங்கள் என்று அனுப்பி வைத்தேன் செவ்வானம் தோன்றியும் வீட்டிற்கு யாரும் திரும்பியபாடில்லையே வன்னம் கடைசியில் சுடரை நோக்கி பறந்து கோ-வும் இரையானது 
                                                            ‌-- ஈசல்‌ 

மேலும்

முத்தமிழ் சித்தரித்த உடையே...
முக்கனி தேன் சிந்தும் சிரிப்பே...
மூதுரை செப்பும் சிவந்த திருமேனியே...
முத்திரையில் முத்தமிடும் என் சித்திரமே...
கலையில் நீ அழகிய ஓவியமே...
விழியோரம் கவிபாடும் கலையெனும் சிலையே...
அன்பெனும் மொழியே...
இன்பத்தின் ஒளியே....
நீ அனைவருக்கும் இன்பத்தின் ஒளியே... (பல்லவி)

முத்தமிழ் பாடும் சிறு பாவை விழியோ
யாவரும் அறிந்த பாரதி கண்ட
யாவரும் அறிந்த பாரதி கண்ட
புதுமை முத்தமிழ் பாடும் சிறு பாவை விழியோ
இ சொற்றொடர் கொய்து
நாவினால் மொழிந்தால்
யாவரும் இ சொற்றொடர் கொய்து
நாவினால் மொழிந்தால் 
நல் உறவும் அறமும்
உள்ளத்தில் பெருகும்.
முத்தமிழ் பாடும் சிறு பாவை விழியோ...(அனுபல்லவி)

மேலும்


மேலே