எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வேதனைகள் உன்னால் என்றால்

அழுவது கூட சுகம் தான்
காயங்கள் உன்னால் என்றால்
வலிகளும் இதம்தான்
வெற்றிகள் உனக்கு என்றால்
தோல்விகளும் பூ மாலை தான்
உயிர் பிரிவது உனக்காக என்றால்
மரணம் கூட வரம் தான்

மேலும்

வேதனைகள் உன்னால் என்றால்

அழுவது கூட சுகம் தான்
காயங்கள் உன்னால் என்றால்
வலிகளும் இதம்தான்
வெற்றிகள் உனக்கு என்றால்
தோல்விகளும் பூ மாலை தான்
உயிர் பிரிவது உனக்காக என்றால்
மரணம் கூட வரம் தான்

மேலும்

பெண் விடுதலையை ஏட்டினில்

எழுதினான் பாரதி
உண்மை நிலை என்ன 
தன் மனைவியை 
கொட்டடியில்  கட்டி விட்டு
பாராளும் பெண்ணை
பாராட்டுகிறது ஆண்சமூகம்
காதலொருவனை கைபிடித்து 
என்றான் பாரதி
வீணாய் போனவனாயினும்
வீட்டுக்காரன் என்பான்
வீதியிலே பெண்ணீயம்
பேசுவான் வீட்டுக்குள்ளே
குய்யோ முறையோ என்பான்
ஆண்மையின் அர்த்தம் 
புரியாத ஆண்மகன்

மேலும்

உனக்காய் நான் சிந்தும்

கண்ணீர் உன்னை சுடும்
என்பதால் கண் தாண்ட
மறுக்கின்றது

மேலும்

உன் கன்னத்தின்

சிவப்பை கண்டு
நாணி தலை கவிழ்ந்ததோ
அந்தி வானம்

மேலும்

உன்னோடு வாழ்வது

வரம் என்றால் உன்
நினைவுகளோடு
வாழ்வது தவம்
அதனால் என்ன
நான் தவம் 
செய்பபவளாகவே
இருக்கிறேன்


மேலும்


மேலே