எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.


-----------------------------------------
துன்பமும் தோல்விகளும் நாம் விரும்பாமலே நம்மைத்தேடி வந்ததைப்போல், நாம் விரும்பிய மகிழ்ச்சியும் ஓர்நாள் வந்தே சேரும். நம்பிக்கையுடன் நடைப்போடுவோம்...!!! 


மேலும்

நல்ல எதிர்பார்ப்பு. விடியட்டும். 05-May-2022 6:38 pm

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

 

1. WhatsApp      -      புலனம்

2. youtube          -      வலையொளி

3. Instagram      -      படவரி

4. WeChat          -        அளாவி

5.Messanger    -        பற்றியம்

6.Twtter              -        கீச்சகம்

7.Telegram        -        தொலைவரி

8. skype            -          காயலை

9.Bluetooth      -          ஊடலை

10.WiFi            -          அருகலை 

11.Hotspot        -          பகிரலை

12.Broadband  -        ஆலலை

13.Online          -        இயங்கலை

14.Offline            -        முடக்கலை

15.Thumbdrive  -        விரலி

16.Hard disk      -        வன்தட்டு

17.GPS                -        தடங்காட்டி

18.cctv                -        மறைகாணி

19.OCR              -        எழுத்துணரி

20 LED              -        ஒளிர்விமுனை 

21.3D                  -        முத்திரட்சி

22.2D                -        இருதிரட்சி

23.Projector      -        ஒளிவீச்சி

24.printer          -        அச்சுப்பொறி

25.scanner        -        வருடி

26.smart phone  -      திறன்பேசி

27.Simcard          -      செறிவட்டை

28.Charger          -        மின்னூக்கி

29.Digital            -        எண்மின்

30.Cyber            -          மின்வெளி

31.Router          -        திசைவி

32.Selfie            -        தம் படம் - சுயஉரு - சுயப்பு

33 Thumbnail              சிறுபடம்

34.Meme          -        போன்மி

35.Print Screen -          திரைப் பிடிப்பு

36.Inkjet            -          மைவீச்சு

37.Laser            -          சீரொளி


மேலும்

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது..சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது..அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் போகவில்லை.. சிறிது காலத்தில் இறந்தும் போனார்..பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது..அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது...ஆனால் அவரின் மன உளைச்சலும்..பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது....

உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி....அதே மரத்தால் செய்யப்பட்ட  எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்...

மாவீரனுக்கும் சரி..சாதாரண எலிக்கும் சரி...பதட்டமும் மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...

மேலும்

ஆம் நட்பே.. 22-Jul-2018 11:11 am
நல்ல சிந்தனை 22-Jul-2018 10:46 am

இமயம் உன் காலடியில்
உலகம் உன் கைப்பிடியில் என்றீர்கள்....

       உலகை உலா வர
       உறுதிகொள் என்றீர்கள் .......

பண்பை பாடமாக்கி
அன்பை அருமருந்தாக்கீனீர்.....

     ஏட்டுச்சுரக்காய் போதாதென்று
      உன்னில் உன்னைத்தேடு என்றீர்கள்.....

சோதனையுற்ற பொழுதெல்லாம்
சாதனைப் பட்டியல் வாசீத்தீர்கள்.....

      தரணியில் தலைநிமிர்ந்து வாழ
      தாய்த்தமிழ் கற்றுத்தந்தீர்கள்......

அன்பை ஆயுதமாக்கு-அறிவை
விரிவு செய் -உலகே
உன்னை உற்றுநோக்குமென்றீர்கள்!!!

[ அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும்  இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ]



மேலும்

நன்றிகள் அய்யா ... தங்களின் வரவிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி .... 07-Sep-2015 9:20 am
அடக்கத்த்தோடு ஆரவாரமில்லாத ஆசிரியர் செய்யும் பணிகள் பலப் பல. நன்றியும் பாராட்டும் உமக்கு. 07-Sep-2015 3:54 am
நன்றிகள் அண்ணா .... 06-Sep-2015 4:16 pm
அருமை தங்கையே 06-Sep-2015 11:16 am

ஏப்ரல் 25 உலக மலேரியா தினம்

மலேரியாவினால் ஏற்படும் பாதிப்பை விளக்கி உலகம் முழுவதும் ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினம் (World Malaria Day) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்தத் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

உலகளவில் அணு ஆயுதம் தயாரிப்பில் பல நாடுகள் போட்டி போட்டு வரும் நேரத்தில் சிறிய அளவிலான உருவம் கொண்ட கொசுவை ஒழிக்க இன்னும் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் விளைவுதான் மலேரியா என்கிற கொடிய காச்சல்.

சர்வதேச அளவில் சுமார் 105 நாடுகளில் கிட்டத்தட்ட 330 கோடி பேர் மலேரியாவின் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்திரு (...)

மேலும்

நன்றி தோழி .. 26-Apr-2015 8:36 pm
மிக நல்ல பகிர்வு சுடர்.................. 25-Apr-2015 9:08 pm
அச்சச்சோ அதெல்லாம் இல்ல சகோ ..இருந்தாலும் ஒரு விழிப்புணர்வுக்கு தான் .... 25-Apr-2015 8:40 pm
நன்றி நந்தினி ... 25-Apr-2015 8:37 pm

கணித மேதை சகுந்தலா தேவி நினைவு தின சிறப்பு பகிர்வு :

ஐன்ஸ்டீனை விஞ்சிய சகுந்தலா!

அந்தரத்தில் வித்தை காட்டும் ஒரு சர்க்கஸ் கலைஞனுக்குப் பெண்ணாகப் பிறந்த சகுந்தலா, “அப்பா எனக்கும் எதாச்சும் சொல்லித்தா !” எனக் கேட்டதும் கார்டுகளை வைத்து மேஜிக் செய்வதைச் சொல்லித்தர ஆரம்பித்தார். கொஞ்ச நேரம் தான் எல்லா கார்டுகளையும் மனப்பாடமாக ஒப்பிக்க ஆரம்பித்தாள். அப்பா அசந்து போனார் - காரணம் அந்தச் சுட்டிக்கு வயது மூன்று.

இனிமேல் சர்க்கஸ் வேண்டாம் என முடிவு செய்து கொண்டு அந்தத் தேவி பாப்பாவை தெருத்தெருவாகக் கூட்டிப்போய் அவளின் அதிவேக கணக்கு போடும் ஆற்றலை உலகுக்கு காட்டினார். ”சின்னப்பெண்ணுக்கு இவ்வளவு அ (...)

மேலும்

நன்றி நட்பே ... 22-Apr-2015 8:36 am
வரவில் மிக்க மகிழ்ச்சி அண்ணா ...நன்றி .... 22-Apr-2015 8:36 am
நல்ல பகிர்வு ....நன்றி 22-Apr-2015 1:11 am
நல்ல பதிவு சுடர் .....! கணித மேதை சகுந்தலா தேவி பற்றி ஒரு நாளிதழில் முன்னர் படித்தது ......! இப்போது மறுபடியும் படிக்க வாய்ப்பு ....! புதிய தகவல்கள் அறிந்து கொள்ளமுடிந்தது ..... தொடருங்கள் ..... 22-Apr-2015 1:01 am

மின்சார சிக்கனம்

மேலும்

நன்றி டா .... நலம் டா .... நீ நலமா டா ??? 20-Apr-2015 1:23 pm
பயனுள்ள தகவல் அக்கா ... நன்றி அக்கா நலமா ? வரது இல்லையா தளத்துக்கு .. 20-Apr-2015 10:26 am

முதல் வெற்றி .....

மேலும்

சகோ சொன்னால் உண்மையே ,....... 19-Apr-2015 10:09 pm
ஆம் தோழி....... 19-Apr-2015 10:09 pm
உண்மை உண்மை உண்மை .. 19-Apr-2015 9:35 pm
உண்மையான வரிகள் மா... 19-Apr-2015 7:15 pm

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்......

பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்

பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்

காகிதம் - 2-5 மாதங்கள்

கயிறு - 3-14 மாதங்கள்

ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்

உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்

டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்

தோல் காலணி - 25-40 ஆண்டுகள்

நைலான் துணி - 30-40 ஆண்டுகள்

தகர கேன் - 50-100 ஆண்டுகள்

அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்

பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்

டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன் (...)

மேலும்

ம் ம் நன்றி டா நந்தினி ..... 15-Apr-2015 9:08 pm
நன்றிகள் நட்பே ..... 15-Apr-2015 9:07 pm
பயனுள்ள தகவல் அக்கா .. நன்றி 02-Apr-2015 4:58 pm
நல்ல தகவல், மிக அவசியமான தகவல்...... அரசின் காதுக்கு அழுத்தமாய் கூரவேண்டியத் தகவல், ஒவ்வொரு தனி மனிதனும் தெரிஞ்சுகொள்ளவேண்டிய தகவல். இந்த தகவலை அறியத்தந்தற்கு மிக்க நன்றிகள் தோழி....... 01-Apr-2015 9:22 pm

4,000ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்களிடம் காணக்கூடிய கிருமி மைக்ரோபாக்டீரியம் டியூபர்கலோசிஸ். எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளின் முதுகெலும்புத் தொடரை ஆராய்ந்தபோது அதில் டி.பி. கிருமி இருந்திருக்கிறது. பொதுவாக ஆசியர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் டி.பி. கிருமி எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. இதனால் பல நூற்றாண்டுகளாக இந்தக் கிருமி நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.
மார்ச் 24-ம் தேதி உலக காசநோய் தினம். ஒவ்வோர் ஆண்டும் ஒன்பது மில்லியன் (90 லட்சம்) காச நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இவர்களில் 30 லட்சம் பேர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் போய்விடுகின்றனர். இந்த 30 லட்சம் பேரைக் கண்டறிந்து, சி (...)

மேலும்

மேலும்...

மேலே