எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கருப்பு பணம் ஒழிப்பு ... பினாமி சொத்துக்கள் முடக்கம் 

இதுவரையில் நேர்மையாக இருப்பவர்கள் 
ஏமாளிகளாகவும் ... திறமையற்றவர்களாகவும்... 
வாழத்தெரியாதவர்களாகவும்...
இந்த சமுதாயத்தால் ஏளனமாக பார்க்கப்பட்டனர்.....

இப்பொழுது நேர்மையானவர்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்....

அரசியல் கொள்ளையர்கள்... வியாபார கொள்ளையர்கள்..கல்வி கொள்ளையர்கள்... 
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்...இன்னும் பலர் ... 
நேர்மையற்றவர்கள் அனைவரும் 
கார் பங்களா என்று சொகுசு வாழ்க்கை 
வாழ்த்து வருகின்றனர் ...

நேர்மையாக இருப்பவன் சாதாரண வீட்டில் வாழ்த்துக்கொண்டு சாலையில் நடந்து செல்கிறான்...

இது மாற வேண்டும் .... மாறும் ... எனக்கு நம்பிக்கை இருக்கிறது .... அதற்கான விதையை நம் பிரதமர் விதைத்திருக்கிறார்... நாம் தான் அதை வளர்க்க வேண்டும் ... வாழ்க பாரதம் ...  

மேலும்

HIOX நிறுவனத்திற்கு என் இனிய வாழ்த்துக்கள்..தங்களது நிறுவனம் மென்மேலும் வளரட்டும் .... சேவை தொடரட்டும் 

மேலும்

காதலித்து பிரிந்து சென்றவளிடம் மன்னிப்பு கேட்டு எழுதிய( நீயென்னை மன்னித்து விடாதே) கவிதைக்கு 140 பார்வைகள் அது சிறந்த கவிதைகள் பகுதியின்கீழ் பதியப்பட்டிருந்தது . சிசு கொலை, பெண்கல்வி, வரதட்சணை,பெண்ணடிமை, வன்கொடுமை பற்றி எழுதிய (நிறுத்துங்கள் ... அப்புறம் கவிதை எழுதலாம்) கவிதைக்கு 20 பார்வைகள் அதற்கு எந்த சிறப்பும் இல்லை ... என்ன காரணம் ... யாராவது கருத்து பகிர்ந்தால் நன்றாக இருக்கும்... கவிதையின் வீச்சு காரணமாக... பதிவேற்றிய நேரமும் நாளும் காரணமா... அல்லது வேறு காரணங்களா...

மேலும்

அனுபவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆழமான அழகான பதில். மிக்க நன்றி திரு ஆசை அஜீத் அவரகளே . உங்களது வெற்றிப் பயணமும் தொடர எனது வாழ்த்துக்கள் 14-Jul-2015 12:22 pm
அதெல்லாம் அப்படிதான் நீங்க அதுக்கெல்லாம் வருத்தப்பட்டா உங்கள் பொன்னான நேரம் தான் வீண். தரமான பதிப்பிர்க்குண்டான அங்கீகாரம் கிடைத்தே தீரும் சற்றே காலதாமதம் ஆகலாம் அவ்வளவே ... எழுதிட்டே போயிட்டிருங்க , இதுல எல்லாம் கவனம் செலுத்தினால் எழுதும் பாதையில் தடை தோன்றலாம் .. நேரடி உதாரணம் பல கண்டமையால் சொல்கிறேன் !! 01-Jul-2015 11:19 am

என் கவிதைள்.. தொலைந்தவர்களுக்கும் தொலைத்தவர்களுக்கும் தேடிகொண்டிருப்பவர்களுக்கும்..

மேலும்


மேலே