எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர் ராம்வசந்த் அவர்களின் "அக்கரைச் சீமை அழகி" கவிதை ... ஜன்னலில் வெளிவந்துள்ளது... வாழ்த்துக்கள் ராம்....

மேலும்

// இங்கேயே வெட்டிச் சுத்துச் சுத்தாதீங்க! . // ராம்வசந்த் ம் இதையே தான் என்னிடம் சொல்லுகிறார் .......! எனக்குத் தான் சோம்பேறித்தனமாக இருக்கிறது ..... 01-Jul-2015 10:18 am
ஏ, இன்னும் அதையே சொல்லிக்கிட்டிருக்காதீங்கையா! அவர் ஒரு ஜன்னலைப் பிடிச்சிக்கிட்டாரு; நீங்களும் ஓடிப்போய் ஆளாளுக்கு ஒரு தூண், உத்திரம், நிலை, கதவுன்னு எதையாவது பிடிச்சுக் கோங்கையா. இங்கேயே வெட்டிச் சுத்துச் சுத்தாதீங்க! ... அவருக்கு உதவணும்னா, உற்சாகப் படுத்தணும்னா இங்க பாராட்டி என்ன செய்ய? அங்க ஜன்னல்ல வாசகர் எதிரொலின்னு ஒரு பக்கம் இருக்கு; அங்க போய்ச் சொல்லுங்கையா! .... 01-Jul-2015 9:33 am
ஒரு படைப்பாளனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் அது எந்த மூலையில் இருந்தாலும் சென்று சேர்ந்து விடும் என்பது இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன்... சிகரம் தொடும் தூரத்தில் நீங்கள் இங்கே உலவி கொண்டிருந்தாலும் இப்போது உங்களுக்கு அருகில் சிகரம் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது... அடுத்தடுத்த இதழ்களில் தங்கள் கவிதை வெளி வருவது பெரு மகிழ்ச்சியை தருகிறது... நம்மோடு இருந்த ஒரு நண்பர் இப்போதும் ஊடகங்களில் வளர்ந்து வருகிறார் என்று நினைக்கும் போது அளவற்ற ஆனந்தம் அடைகிறேன்... இது தங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமாகவே கருதுகிறேன்... இது ஒன்றும் குலுக்கல் சீட் இல்லை திறமைக்கு கிடைத்த பரிசாகவே இதை பார்க்கிறேன்... இன்னும் உயர பறக்க சிறகுகளை தயார் படுத்தி கொள்ளுங்கள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Jul-2015 12:58 am
ஒரு படைப்பாளனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் அது எந்த மூலையில் இருந்தாலும் சென்று சேர்ந்து விடும் என்பது இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன்... சிகரம் தொடும் தூரத்தில் நீங்கள் இங்கே உலவி கொண்டிருந்தாலும் இப்போது உங்களுக்கு அருகில் சிகரம் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது... அடுத்தடுத்த இதழ்களில் தங்கள் கவிதை வெளி வருவது பெரு மகிழ்ச்சியை தருகிறது... நம்மோடு இருந்த ஒரு நண்பர் இப்போதும் ஊடகங்களில் வளர்ந்து வருகிறார் என்று நினைக்கும் போது அளவற்ற ஆனந்தம் அடைகிறேன்... இது தங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமாகவே கருதுகிறேன்... இது ஒன்றும் குலுக்கல் சீட் இல்லை திறமைக்கு கிடைத்த பரிசாகவே இதை பார்க்கிறேன்... இன்னும் உயர பறக்க சிறகுகளை தயார் படுத்தி கொள்ளுங்கள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Jul-2015 12:57 am

உனக்கு கோபம்
வரும்பொழுதல்லாம்
மிக நெருங்கி சொல்கிறேன்
உனக்கு கோபம்
வந்திருக்கிறது..
--கனா காண்பவன்

மேலும்

கோபத்தில் உன்னழகு ஒரு சுற்று கூடித்தான் போகிறது .. இப்படி பேசித்தான் தோழரே , இதுவரைக்கும் பல ; சண்டைகளை , சமாளித்து வருகிறது ஆணினம் .. இனி , இப்படியே கூறலாம் .. 19-Jun-2015 12:52 pm
நல்லாஇருக்கு 19-Jun-2015 10:08 am
அழகா இருக்கு.. 19-Jun-2015 9:31 am

கிள்ளி பார்க்காதீர்கள்
வாழ்க்கை கலைந்துவிடும்...

மேலும்

இருள் விலக இரு வரி ! வாழ்க வளமுடன் 18-Jun-2015 4:50 am
சூப்பர்... 17-Jun-2015 11:21 pm
நன்றி தேவ்.. மிக்க நன்றி.. 17-Jun-2015 11:05 pm
தொடுவேன் தொடரும் என நம்புகிறேன்... நன்றி ஐயா.. 17-Jun-2015 11:03 pm

கரிச்சா மண்ட
சட்டித் தலையன்
கொத்துன கல்லு
முள்ளு மண்ட
எதற்கும் கவலைப்படாமல்
ஒரு முறையாவது
வெட்டிவிட வேண்டும்
அம்மா சொல்வது போல
அரை சென்டிமீட்டருக்கு
சற்றே அதிகமாக முடியை...
--கனா காண்பவன்

மேலும்

நான் முடிவெட்டிக் கொண்டு வரும் ஒவ்வொரு முறையும் அப்பாவிடம் திட்டு வாங்குவதை ஜாலியாக நினைத்துப் பார்க்கிறேன் ...இந்தக் கவிதையைப் படித்து விட்டு ... 11-Jun-2015 6:27 pm
அதோடு அடுத்த தடவையாவது சுத்துற நாற்காலியின் மெத்தையில் உட்காரணும் ...ஒவ்வொரு தடவையும் அதனை மேல் பலகை போட்டு உக்கார வைக்கிறாரு இவரு..எப்போதான் நான் பெரியவங்க மாதி உக்கார்றது! 11-Jun-2015 9:51 am
கவனிச்சாச்சி கவனிச்சாச்சி.. (மெதுவா பேசுங்கய்யா பயம்மாாாா இருக்குல்லா..) 10-Jun-2015 1:31 pm
அது என்னப்பா .... கொஞ்சம் நீளமா ? வாய்க்கி மேல ஒத்தையா புருவம் இருக்கு... கண்ணுக்கு மேல 2 மீசை இருக்கு கொஞ்சம் கவனிங்க ......... 10-Jun-2015 1:19 pm

அதிகம் தெரியாதவனாக நடிக்கவாவது முயற்சி செய்யுங்கள்... விவாதங்கள் ஆரோக்யமாக இருக்கட்டும்... பல முறை என் கனவில் வருவது ஒன்றே ஒன்று தான் ... "நான் யார் என்று காட்டும் முயற்சியிலேயே நான் யார் என்பதை மறந்துவிடுகிறேன்..."
இப்படிக்கு,
ஒரு கோமாளி
ஒரு லூசு
ஒரு பைத்தியம்
ஒரு கவிஞன்
ஒரு அரைகுறை
.... எதுவாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள்....

மேலும்

நமது நியாயமான விருப்பங்கள் கேலிக்குள்ளாக்கப்படும் பொழுது கோபம் வருவது இயற்கை தாகு. உங்களுடைய படைப்பு அட... என்று நான் முகிழ்ந்தோ வியந்தோ அனுபவித்தோ " அருமை " எனப்பாராட்டும் பொழுது எனக்கு ஒரு திருப்தி. இந்தத் தளத்தில் நாம் பலபேர் இன்னும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டது கிடையாது என்பது மட்டும் சத்தியமான உண்மை. நமக்குள்ளிருக்கும் ஒரு பரஸ்பர புரிதல்களை..... உங்களுடைய படைப்போ அல்லது அதில் அவரும் என்னுடைய கருத்தோ பிடிக்காத சிலர் கணினித் திரைக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு எதையோ டைப்பிறுக்கி (டைப் + கிறுக்கி ) அவைகளை காயப்படுத்தி விளையாடுவது என்பது ஒரு விதமான மனோவியாதி என்று மட்டுமே வரையறுக்க. இங்கும் பல மனோவியாதிக்காரர்கள் திரிகிறார்கள்.. சொல்லலாம். அவர்களுக்குப் பொழுதுபோவதற்காக எதையோ எழுதி சீண்டிப் பார்க்கும் அவர்களை சிரித்துக்கொண்டே கடந்து போவது நலம். இதையே இன்றைய எண்ணமாகவும் பதியப் போகிறேன்.... 10-Jun-2015 6:37 am
எனது நோக்கம் நிறுத்துவது.. இனி இம்மாதிரி நடக்கக் கூடாது என்பது.. உங்களதும் அதுவாக இருக்கும் என நம்புகிறேன்... மிக்க மகிழ்ச்சி.. 09-Jun-2015 10:18 pm
தவறு இருப்பின் மன்னிக்கவும்... அப்படியே ஆகட்டும் ஐயா.. பிற மற துற.. என்பதை கடைபிடிக்கிறேன்.. 09-Jun-2015 10:02 pm
புள்ளே. நீ எழுதிக்கொண்டு மட்டும் இரு ....பிற மற ..துற 09-Jun-2015 9:50 pm

ஒரு
காதல் கவிதை.

வேண்டாம்..

எல்லாமே அவளால்
மொக்கை என்று
சொல்லப்பட்டவை...
--கனா காண்பவன்
(ரொம்ப பழசு.. என்றைக்கோ பதிந்தது)

மேலும்

அப்ப நால்லாத்தான் இருக்கும் கவி. (ஏன்ன அவங்களுக்கு அவங்கள பத்தி எழுதினா பிடிக்காத மாதிரியே நடிப்பாங்க... 😀) 08-Jun-2015 11:10 pm

உன்னை பார்த்தவுடன்
பதட்டம் வரும்.
நீ நெருங்கி கடந்த பின்
இப்படித்தான்
கவிதை வரும்,,..!!
--கனா காண்பவன்

மேலும்

அவங்களிடம் பேசி இருந்தா இந்த கவிதை வந்து இருக்காது... 😀 08-Jun-2015 11:13 pm

ஹாய் சொல்லி
நகர்ந்தேன்
சாக்லேட்டை காட்டி
கையை ஆட்டி
கவிதையை தந்துவிட்டு
சென்றது குழந்தை..
--கனா காண்பவன்

மேலும்

முதலிலிருந்து---2

ஆதாமின் தோளில்
ஏவாள் சாய்ந்திருந்தாள்.
மண்வாசம் நாசியை
தழுவும் வரை
குளிர் காற்று
தேகம் தீண்டும் வரை
ஒரு பூ உதிர்ந்து
மேல் விழும் வரை
உடையற்றும் ஒன்றும் தோனவில்லை..

இப்போது
ஒரு முத்தம் தர
ஆதாம் எத்தனிக்க
அவர்களின் குழந்தை
முன்னே தவழ்ந்து வந்தது.

முதல் முறை
சிரிக்கப் பழகினார்கள்
முதல் மனிதனும்
முதல் மனுசியும்.
--கனா காண்பவன்

மேலும்

அருமை... ஆதாம் கனவில் வந்து சொன்னானா? இல்லை அந்த ஆதாமே நீதானா? 05-Jun-2015 12:22 pm
நன்றி தர்மன்.. 05-Jun-2015 11:32 am
நன்றி ஐயா... 05-Jun-2015 11:32 am
(போங்கண்ணே இது எப்டிணே எரியும்.... என்னண்ணே ஒடச்சிபுட்டிடீங்க...??? ) நன்றி சரவ்... முயற்சிக்கலாம்.. 05-Jun-2015 11:32 am

முதலிலிருந்து--1

ஏவாள் தன் குழந்தைக்கு
பாலூட்டி முத்தமிட்டு
தூங்கவைத்து அழுகை நிறுத்த
செய்பவற்றை எல்லாம் பார்த்திருந்த
ஆதாம் நினைத்திருப்பான்
நான் மூன்றாவது மனிதனாகவே
இருந்திருக்கலாம்..
--கனா காண்பவன்

மேலும்

நன்றி தோழர்.. 04-Jun-2015 4:25 pm
திடீரென்று ஏவாள்களின் ஞாபகம் வந்தது.. ஆதாம்களை பற்றி எழுத நினைத்தேன்.. இப்போதைக்கு எண்ணத்தில் போட்டு வைத்தேன் ஒருமையில்.... மிக்க நன்றி சரவ்.. 04-Jun-2015 4:24 pm
ஆமாம் நண்பரே.. மடிதூங்க மார்தூங்க அடிக்க அனைக்க கெஞ்ச கொஞ்ச அந்த மூன்றாம் மனிதனாகிய மழலையால்தானே முடியும்... 04-Jun-2015 11:19 am
நிகழ் வக்கிரங்களை இவ்வளவு சூசகமாக சொல்லமுடியுமா வியக்கிறேன் 04-Jun-2015 11:14 am
மேலும்...

மேலே