எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிக்பாஸ்#3 


U P S C , IAS , IPS போன்ற தேர்வுமுறைகளில் மாற்றம் கொண்டுவருகிறது மத்திய அரசு. 100 நாட்கள் பயிற்சி முகாம்களின் பயிற்சியை வைத்து தேர்வு செய்யப்படுகிறது, அதாவது தேர்வு எழுதி அதில் முதலாம் மாணவன் இறுதி மாணவராக தேர்வு செய்யப்படலாம், அது அங்கு உள்ள தேர்வு அதிகாரிகளின் மனநிலை பொறுத்தது விரைவில் இந்தியா வல்லரசு ஆகிவிடும் நம்புங்கள்.. 

மேலும்

ஏனோ எத்தனை காதல் கவிதை எழுதினாலும் அவ்வப்போது பொதுநலத்தோடு கவிதைகள் எழுதும் மகிழ்ச்சி இடை இணையற்றது.. காதல் கவிதைக்கு கிடைக்கும் வரவேற்பு நலன் சார்ந்த கவிதைக்கு கிடைப்பதில்லை. இருப்பினும் அதில் ஓர் அத்மதிருப்தி..!!! காதல் கவிதைக்கு 1000 பார்வை வந்தாலும் நலன்சார்ந்த கவிதைக்கு 100 பார்வை தொடும்போது தரும் உணர்வுப்பூர்வமான

மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. 😁😁😁😁மேலும்

                                                           கருத்தாடல்கள்

        ஏனோ தெரியல இல்ல இது எனக்கு மட்டும் உள்ள பிரச்சனையானும் 
புரியல, எப்பவாது ஓர் கவிதை எழுதுவேன், அதை நம் தளத்தில் பதிவிடுவேன், பதிவிட்டு சில மணித்துளிகள் கழித்து மீண்டும் தளத்தினுள் நுழைந்து பார்ப்பேன் இது பதிவிட்ட சில நாட்களுக்கு தொடரும்,, தகவல் ஏதேனும் இருந்தால் என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை, , பசியில் உள்ள குழந்தைக்கு தாய்பால் கிடைத்த மகிழ்ச்சி இருக்கும், ஆனால் அது எல்ல நேரங்களிலும் நடந்ததில்லை, பல நேரம் பசியால் வாடிய அனாதை குழந்தையாகவே தளத்தை மூடிவிடுவேன். எனக்கும் தெரியும் அனைத்து கவிதைக்கும் படித்து கருத்திட நேரம் இல்லை ஏனென்றால் என்னாலும் அனைத்துக்கும் கருத்திட முடியவில்லை..

     பல நேரங்களில் பதிவைதிறந்து பார்வையாளரின் எண்ணிக்கையை பார்பேன், அது கணிசமாக இருக்கும் போது புட்டிபாலில் பசியாறிய குழந்தையாக உணர்வேன், பல நேரம் படித்தவர்களுக்கு என் கருத்து பிடிக்கவில்லையோ எனவும் எண்ணியதுண்டு, எனக்கும் தெரியும் நான் கலைஞன் அல்ல கவிஞன் என்று.. கவிஞன் பாராட்டைவிட கருத்து எத்தனைப் நபருக்கு பதிந்தது என்பதே அவன் சிந்தை ஆனால் நானோ கவிஞன் என்பதற்கு முன்பு மனிதனாச்சே ஆதலால்தான் இப்படி உணர்கிறேன் என்று தோன்றுகிறது.

    உண்மையில் நம்மில் பலர் கவிதையின் தலைப்பை கவிதையின் அளவிற்கு ஆழமாக சிந்திப்பது இல்லை எனத் தோன்றுகிறது, நான் எழுதிய சில மொக்க கவிதைக்கு நல்ல தலைப்பை வைப்பேன் அதன் பார்வையின் அளவு சற்று அதிகமாகவே இருக்கும். நல்லதோ கெட்டதோ கருத்திட நானும் முயற்சிக்கிறேன், சில கருத்துகள் பல முறை என் தூக்கம் தொலைத்து பேனாவின் முனையை கடிக்க வைத்துள்ளது, நானும் சிலரின் தூக்க தொலைக்க முயற்ச்சிக்கிறேன்..

                                     சிறு பிள்ளையாய்
                                        உங்கள் 
                                        தௌபீஃக்


மேலும்

நன்றி கருத்திடலுக்கு 26-Feb-2019 11:40 am
தேடல் தான் வாழ்க்கை.......வாழும் வரை அனைவரும் தேடுகிறோம் ஏதோ ஒன்றை ...கருத்து வந்தாலும் வராவிட்டாலும் எழுத்தாளரின் பணி எழுதுவது ...அதை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள் .....நிச்சயம் வெல்லுவிர்கள் ...வாழ்க்கையில் ........வாழ்த்துக்கள் ... 26-Feb-2019 10:43 am
நன்றி கீர்த்தி தினா, அணைத்து கலைஞர்களுக்கும் உள்ள தேடல்தான் 30-Apr-2018 3:12 pm
அதே தேடல் தான் 30-Apr-2018 12:09 pm

மேலே