எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவலம் காணுமிடம் கவிதை வரமறுத்து...
என்னில் கண்ணீர் மட்டும் பழமையை
ருசித்து கசந்து விடையாகிறது ...
அங்கே ஆலமர விழுதுகள்
தூளி ஆடிட சிறார்கள் இன்றி
மண்ணில் விழுந்து விம்மி அழுகிறது..
மாமர காய்களெல்லாம்
களவுக்கொள்ள விடலைகள் இன்றி
வாடிகுதித்து தற்கொலை செய்கிறது...
ஓங்கிய பனைமர நுங்குகளை
வண்டி உருட்டிட சிறுவர்கள் இன்றி
மண்ணில் புதைந்து மறுபிறவி தேடுகிறது...
காளையர் வியர்வையில் குளித்திட ஏங்கும்
இளவட்ட கல்கள் மாடுகள் பெய்திட
கட்டுதறியாகி கண்ணீர் விடுகிறது...
திண்ணைகள் இல்லா வீடுகள் எல்லாம்
தாயம் தட்டாங்கல் ஆட்டம் அறியாது
கைதிகள் தஞ்சமாகும் சிறையாய் போகிறது..
பதுமைகள் கைப்படாத பல்ல (...)

மேலும்

நஞ்சை புஞ்சை விற்றெடுத்த
நட்டு நகை அடகு வைத்து
பூர்வீக வீடு உடைத்து
நகரத்திலே வசதி என்று
கோடியிலே வீடு கட்டி
குருதி வற்றும் நாள்வரையில்
சொர்க்கம் உணரும் மாந்தர்களே..
பாசநேசம் பறிகொடுத்து
பாதியிலே நோய்பிடித்து
இன்பம் பறிக்கும் இறுதி நாள்வரவே
வாழ்ந்த வாழ்க்கை நரகம் என்று உணர்வீரோ..??
செல்வம் என்று கோடி சேர்க்க ஓடிடும் என்னினமே
பிறந்த மண்ணை விட்டு சென்றாலும் விற்றுவிடாதே..
தள்ளாடி தடிபிடிக்கும் நாள்வரவே தஞ்சம்புக
தாய்மடி போல் அரவணைக்கும் இடம்வேண்டும்..
ஆறடி மண்ணின் அருமை உணராத மாந்தர்களே
மின்சார தகனமேடை கதியென்று மாண்டிடாதீர்..
...கவிபாரதி...

மேலும்

முகம் காட்டுமிடம்
அழகாம்
பேசுமிடம்
இனிமையாம்
எழுதினால்
கவிதையாம்..
இவை சுமக்கும்
பொய்களை நம்பும் மக்கள் ஏனோ
உண்மையை காணுமிடம் மட்டும்
பைத்தியக்காரத்தனம் என்கிறார்கள்??
உணர்வுகள் கசந்து போகும் எண்ணம் வேண்டாம்
எனக்காய் இசைந்து பேசும் கூட்டம் வேண்டாம்
சீற்றம் மறைத்து சிறுத்து ஒளிரும்
சிமிழி நெருப்பு நான்...
மாற்றம் தேடி காட்டு தீயாய்
உருமாறி பதர் எரிக்கும் நாளும் வரும்...
ஊர் அடித்து உலையில் போடும் ஆளும் நானில்லை
உணர்வு கொன்று உறங்கி கிடக்க பிணமும் நானில்லை..
...கவிபாரதி...

மேலும்

கச்சையோடு வீதி வந்து
பிச்சை என்று கதறியவன்
வாய்மொழிந்த
பொய்கள் கூட
மறந்திடலாம்...
இச்சைகொண்டு
மேடை போடும் பச்சோந்திகள்
முன்மொழிந்த
வேஷம் ஒன்றும்
மறக்குதில்லையே...
பசிக்காக சொற்பமாய் பறிப்பவன்
திருடன் என்றால்
வசதிக்காக ஏழை வயிறடித்து
பறிப்பவனை என்ன சொல்லலாம்...???
ஊர் தூங்க திருடியவன்
சிறையிலிருப்பது நலமென்றால்...
உலகம் பார்க்க திருடுபவனை .
ஊர் வாழ்த்துவது தான் சிறப்போ..???
வீழ்த்திடுவோம் வீழ்த்திடுவோம்
மீட்சி தேடி விழித்திடுவோம்..!!
..கவிபாரதி...

மேலும்

மகிழ்ச்சி பொங்கி
வான் கிண்ணம் நிறைந்து
சொரிந்த நீர் மண்ணிற்கு உயிராக
மரம் யாவும் நனைந்து சொட்டுவிட
மனம் கண்ட இனிமை மறவாமலிருக்குதே
இன்று.....................................??
சூழ்ச்சி தாக்கி
கதறி விடும் கண்ணீர் துளிகள் கூட
கண்மூடி திறக்கும் தருணமதில்
வறட்ச்சி முழுங்கி மண்ணிற்கு பயனற்று
கானலாய் மறையும் காட்சி காணுமிடம்....
என் நெஞ்சம் பொறுக்குதில்லையே
மண் கண்ட பஞ்சம் அது நாம் அண்டை
தஞ்சம் வரும் நாட்கள் கூட வெகு தூரம் இல்லையே...!!
...கவிபாரதி...

மேலும்

நம்மில் வேரூன்றிய வேற்றுமைகளை வேரறுத்து
களைந்திட இன்றே விழித்தெழுவோம் வீரமாக...
நாளைய தலைமுறை ஒற்றுமை பேணிட
தெளிந்த பாதை காட்டிடுவோம் முன் சென்று...
நானும் நீயும் மனிதனாய் இருக்கும் போது
நமக்குள் எதற்கு நூறு பேதங்கள்...??
சாதிகள் கொண்டு நாம் துலங்கி தெரிந்தால்
சகதியினுள் புரளும் பன்றிகளாய் தெரிவோம்..
நாமும் மதம் தலைக்கேறி அரக்கர்கள் ஆனால்
சாக்கடையினுள் நெளிந்திடும் புழுக்களாய் தெரிவோம்..
காசு பணம் வசமிருக்க வசதியாகலாம்
மனதில் நல்ல எண்ணம் இருக்க நிம்மதியாகலாம்..
ஒப்பனை பூசி திரைமுன் நடிப்பவன் நடிகன் என்றால்
இயல்பாய் வாழ்வினில் நடித்திடும் நாமோ என்னவாவோம்??
உழைப்பவன் எவனும் நமக்கு (...)

மேலும்

அருமையான எண்ணங்கள் வரிகளில் பளிச்சிடுகிறது நன்றி விஜயலெக்ஷ்மி 06-Mar-2015 9:45 pm

என் இதயத்திடம்
வெறுக்கிறேன் நீ
செத்துபோய்விடு என்றேன்..
இதயமோ அன்று சிலிர்ப்புடன்
சிரித்தார் போல் துடித்தது...
உனக்காக வாழ்கிறேன் என்று..
அதே இதயத்திடம்
நான் செத்துபோவதாய் சொன்னேன்
எனக்கு முன்பாக ரணம் கொண்டு
மரண படுக்கையில் இடம் பிடித்துவிட்டது...
இன்று உணர்கிறேன்
என் இதயமும் நீயும் நிகர் என்று..!
..கவிபாரதி

மேலும்

என் வலியின் நிமிடங்களை
பொறுத்துகொள்கிறேன்...
மரணம் என்னை
விரும்பாததால்..
உன் பிரிவின் தருணத்தால்
எனை வெறுத்துபோய்விடுவேன்...
மரணத்தை நான் விரும்பி..!
உன் நிகர் காண
மரணம் கூட
நான் விரும்பும்
தேடல் தான்...!
என்னில் யாவும் ஆனாய் நீ....!
...கவிபாரதி...

மேலும்

என் நிழல் கூட
பிரிய உணர்ந்தேன்
இருண்ட இரவில்...!
செவி வரிடிடும் வார்த்தைகள்
கரைந்திடும் என்றும் அறிந்தேன்..
மனம் தீண்டும் நிசப்தத்தில்..!
நிறுத்தி வைத்த நினைவுகளுடன்
இந்த நாளும் கடந்து போகிறது....!
காலம் காட்டும் முடிவு நோக்கி..!
..கவிபாரதி..

மேலும்

திருமணம் என்னும் ஒர் வழி பயணத்தில்
திருப்பங்கள் நூறு வந்து போகலாம்..
தன்னடக்கமாய் நேர்வழி நடந்தால்
தகர்ந்திடாது இல்லற இன்பம்...!
முப்பது அறுபதில் அடங்கி போகலாம்
ஆசையும் மோகமும் அரைகுறையாய்...
அதையும் தாண்டி அனுபவத்தில் இருக்கிறது
ஆயிரம் ஆயிரம் வாழ்க்கை தடங்கள்..!
இயல்பாய் தெரியும் வாழ்க்கையில்
இன்னல்கள் வீசிபோக வெற்றிடம் அதிகமாகும்
அதை நிரப்பிட எண்ணங்கள் தட்டிதடுமாறிடும்
அன்று தான் மனம் நட்பை தேடி அலைந்திடும்...!
உறவுகளை இழக்கும் இடம் ரணமானாலும்
புது உறவுகள் முளைக்கும் இடம் விழித்தேயிரு...
ஒருவனுக்கு உன் அந்தரங்கம் தெரிந்தால்
அவனும் உன்னை அடிமையாக்கும் எதிரியாவான்..!
...கவிபார (...)

மேலும்

மேலும்...

மேலே