எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண்கள் நீர் மழை பொழிய
புண்கள் ரத்த துளி சொறிய
என் பண் சொற்கள் தொடர் புரிகின்றது

குழந்தைகளை நோக்கி கூர்மையான குண்டுகள்
தூங்கும் நேரத்தில் சிரசு ஆனது துண்டுகள்
வாழ தடம் தேடும் மழலை வண்டுகள்

சொந்த மண் தான் எந்தன் சொர்க்கம்
வாழா வெட்டி ஆகிவிட்ட எங்கள் வர்க்கம்
உயிரில்ல ஜனத்துக்கும் எம் கதை கேட்க வேர்க்கும்.

பள்ளிகளில் பல்லாங்குழி ஆடவா குழி தோண்டுகிறாய்
வெள்ளி நிற புகை போட்டு குளிர் காய்கிறாய்
கள்ளி பூவையும் கதிரவன் காட்டமல் கரித்துவிடுகிறாய்

கரம் கொடுங்கள்!! எங்கள் குரல் கேட்க..
கூக்குரல் அல்ல!! எங்கள் குழந்தைகளும் மண்ணில் மருக அல்ல!
பருக தண்ணீர் இல்ல... !!! இரு விழி கொண்டு (...)

மேலும்

கிராமத்து மரத்திற்காக பட்டணத்தில் விதைக்க பட்ட விதை !!!

பனை மரத்தை வெட்டிய, பணத்தை கொண்டு பட்டணம் புறப்பட்டு
பணக்காரன் ஆக பாடு படும் பாவம் இவன்

கருங் குயிலின் கானத்தை காதுகளில் கண்டவன் இன்று
கரும் புகையின் கலவரத்தை முகத்தினால் முகர்கின்றான்

கிராமத்து மரத்திற்காக சென்னையில் விதைக்க பட்ட விதை
இன்று வேர் விட முடியாமல் தவிக்கின்ற கதை

கணித வாத்தியாரின் கண்டிப்புக்கு கலவரம் கொண்டவன் இன்று
முதலாளிகளின் காரி உமிழ்தலுகும் கன்னம் குழிவிழ சிரிக்கின்றான்

அம்மாவின் சமையலுக்கு ஐந்து நிமிடம் பொறுகாதவன்
அம்மா மெஸ் வாசலில் அரை மணி நேரம் பொறுக்குகின்றான்

கிழவி சுட்ட பணியாரத்துக்கு வாயை ம (...)

மேலும்


மேலே