எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாக்களிப்போம்!  வாய்ப்பளிப்போம்!  
தேர்ந்தெடுப்பதென்பது 
நமக்கு புதிதல்ல... 
எதையும் தேர்ந்தெடுக்காமல் 
எடுத்ததுமல்ல... 

குழந்தை பருவத்தில் 
பொம்மைகளை 
தேர்ந்தெடுத்தோம்!  
பிள்ளைப் பருவத்தில் 
நண்பர்களை 
தேர்ந்தெடுத்தோம்! 
மாணவ பருவத்தில் 
பாடங்களை 
தேர்ந்தெடுத்தோம்! 
அடுத்தடுத்த பருவங்களில் 
அருமையாக 
தேர்ந்தெடுத்தோம்! 


இப்படி தேர்ந்தெடுத்தே 
பழக்கப்பட்ட நாம் 
இந்த தேர்தலில் 
நம்மை ஆள போகிறவரை
தேர்ந்தெடுப்போம்! 

அற்பமாய் விலை பேசாமல் 
சொற்பமாய் எதையும் கேட்காமல் 
விருப்பமாய் வாக்களிப்போம்! 
விறுவிறுப்பாய் வாக்களிப்போம்! 

பாமரனாகட்டும், 
படித்தவனாகட்டும், 
ஆணினமாகட்டும், 
பெண்ணினமாகட்டும், 
இவையல்லாத 
இடையினமாகட்டும் 
உங்கள் வாக்குரிமை 
முழுமையாகட்டும்! 

அதன் மூலம் 
அனைவருக்கும் 
சம உரிமையாகட்டும்!  
ஐநூறுக்கு ஆசைப்பட்டு 
ஐந்தாண்டுகளை 
அடகு வைக்க வேண்டாம்! 
இலவசத்திற்கு ஆசைப்பட்டு 
இருப்பதையும் 
இழந்து விட வேண்டாம்! 
வாக்களிக்கமாட்டோமென்று 
நம்மை நாமே 
இழிவு படுத்த வேண்டாம்! 
தேர்தலை புறக்கணித்து 
நம்மை நாமே 
புறக்கணிக்க வேண்டாம்! 

வாக்களிக்க மறுத்தால் 
வாடிபோகும் ஜனநாயகம்! 
தேர்தலை புறக்கணித்தால் 
தேய்ந்தே போகும் நம் ஜனநாயகம்!  

சிந்திக்க வேண்டுகிறேன்... 
உரிமையை அறிந்து 
கடமையை உணர்ந்து 
கண்டிப்பாய் வாக்களிக்க 
கடமை பட்ட அனைவரையும்
கேட்டுக் கொள்கிறேன்... 
தேர்தலில் வாக்களிப்போம்! 
வாக்களிப்பதில் சதம் அடிப்போம்! 
நம் ஓட்டு!  நம் உரிமை!  
வாக்களிப்போம்! வாய்ப்பளிப்போம்!  
                                   -ப. யாசர் அராபத் 
                            

மேலும்


மேலே