சந்திர மௌலீஸ்வரன்-மகி வரைந்த ஓவியங்கள் (Oviyangal)

Art Work Submitted by சந்திர மௌலீஸ்வரன்-மகி


கணினித் திரையில் சுட்டியின் துணையுடன் கையால் வரையப் பட்ட கோட்டு ஓவியம். இயற்கைச் சூழலில் அமைக்கப்பட்ட வீடு.

மேலும்

மிக்க நன்றி, திரு. கவின்சாரலன்! இந்த ஓவியம் சுட்டியால் வரையப் படும்போது, ஒரே தொடர்க் கோட்டால் வரையப் படவேண்டும் எனும் விதியுடன் துவக்கப் பட்டது. ஆனால் சுட்டி, தன் இயக்கக் குறைகளால் ஆங்காங்கே மிகவும் மெல்லிய கோடுகளைச் செருகி விட்டது. அவை, அச்சில் வரவில்லை. மிக்க நன்றி, வணக்கம்! 17-Oct-2021 11:27 am
கோட்டு ஓவியம் அல்லது வரி ஓவியம் --அதுவும் கணினித் திரையில் ---அருமை பாராட்டுக்கள் மேலும் வரையுங்கள் 09-Sep-2021 7:10 pm

"இயற்கைப் பண்ணை - மகிழ்ச்சியான சேவல் கோழிக் குடும்பம் !"

இப்படம் "கோரல் டிரா 12" "வரைகலை மென்பொருள்" கொண்டு சுட்டியால் வரையப் பட்டது. ஒரு முப்பரிமாணக் கூம்பு வடிவத்தை மட்டும் பயன்படுத்தி, கோரலின் பல்வேறு கருவிகளின் துணையால் தொகுக்கப் பட்ட படம்.
துவக்கத்தில் ஒரு வட்டத்தை மட்டும் வரைந்து கொண்டு, அதைப் படிப்படியாகத் திருத்தி அமைப்பதால் உருவானது இப்படம்.
பதிவேற்றும் வசதிக்காக இது ஜேபிஜி கோப்பு வடிவமாக இங்குள்ளது.

மேலும்

சந்திர மௌலீஸ்வரன்-மகி ஓவியங்கள் (Oviyangal)மேலே