படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)
இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.
ஆரியக் குமரியின் இதம்தரும் அணைப்பில் விகார மகாதேவியும் வெட்கத்தில் நாண கிளுகிளுப்பில் அவன்....! உப்பிப்போன வயிறு திடீர் செழுமையை அகிலத்துக்கு பறைசாற்ற வெற்றிலையின் உபயத்தால் உல்லாசத்தில் நரியன்....! துட்டுக்கு மெட்டெழுதி துயரத்தைக் காசாக்கி வலியின் சுவடறியா வாய்மையைத் துறந்த கற்பனைக் கவிஞனவன்......! ஆட்டுக்கல்கூட அறியா அஞ்ஞானப் பரம்பரை புலமையை அடகுவைத்த மடமையின் காரியத்தால் நவீன சாதனங்களுடன்..... ..! வாழ்க்கை என்று புரியும்..... ஆரியக் குமரிகள் சலிக்கும் போதா....அன்றி அடியிலுள்ள மண்டையோடுகள் முதுமையில் உறுத்தும்போதா..! கலைமகள் சபித்த நாவில் அழுக்கேறிய மூளையில் இறுதிவரை எதுவுமே புரியாமலும் போகலாம்..! சிந்தனைகள் மரத்து சிங்கத்தின் குகையில் அடிமையாய் நிற்கும்போது தொலைந்துபோன அடையாளம் கண்முன்னே விரியும் கலங்கலாக.!!? ================== தோழி துர்க்கா
வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 1829
தன்மானம் உனக்கில்லை ஆனால் நெஞ்சு நிமிர்த்தி விறைப்பாக நடக்கிறாய் பெயரால் தமிழன் என்று......! உன்னினப் பெண்ணை மாற்றினத்தான் வேட்டையாட வேடிக்கை பார்த்தே காரியத்துடன் கைகொடுத்தாய்.! சந்தர்ப்பம் கிடைக்காமல் சகதிக்குள் விழுந்தாய் அறியாமை கொண்டு நீயும் நெருப்பெடுத்தாய்..! கொள்கை எதுவுமின்றி சிந்தையில் அழுக்குடனே சாக்கடைப் பன்றிபோல் அடிக்கடி நிலைமாறினாய்.! தட்சணா மூர்த்தி போல் தெற்கில் இருந்துகொண்டு நேரடிப் பாதிப்பு பற்றி தொடர்பின்றி கதையளக்கிறாய்.! தாயென்று சொல்லியே சால்வையில் தொங்கும் நீ வாழும் வாழ்க்கையில் அர்த்தம் ஏதுமுண்டோ..!!! ====================== தோழி துர்க்கா
வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 1825
அதிர்கிறது சர்வதேசம் காணாமல்போன விமானத்தைத் தேடி...! அறியாத மனிதரில்லை பேசாத வாயில்லை வேண்டாத தெய்வமில்லை.! இறுதிப் போரை நிறுத்த கொட்டும் பனியிலும் ஆர்ப்பாட்டங்களிலீடுபட்ட புலம்பெயர் தமிழரால் அதிராமல், அசையாமல் தானிருந்தது சர்வதேசம் .......! அமெரிக்கக் கப்பலுக்காய் நப்பாசையுடன் காத்திருந்தே நம்பிக்கையிழந்து உயிரைவிட்ட ஈழத்தமிழனின் கூடுகளும் ஆதாரத்திற்கு இன்றங்கில்லை.! ஆனாலும் எஞ்சியுள்ள தமிழன் உளமுருகி வேண்டுகின்றான் காணாமல்போன பயணிகள் உயிர்தப்ப வேண்டுமென ...........! உலக மக்களுக்காய் கண்ணீர் விடுபவனுக்கு கண்ணீர் விட யாருமில்லை.... கொள்ளி வைக்கத்தான் உலகமெங்கும் ஆட்களதிகம்...!! ====================== தோழி துர்க்கா
வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 1833
தெற்கிலிருந்து வன்னிக்கு ஒரு பயணம் உல்லாசப் பயணிகளுடன்...! தமிழ்சுமந்த வீர மண்ணில் பார்க்கும் இடமெல்லாம் பேரினவாதத்தின் மொழிகள்... எம்முறவுகள் கருகிப்போன வீதிகளில் புலம்பெயர் உறவுகளும் சுற்றுலாப் பயணிகளாய் ...! உடலங்களைச் சுமந்து மறைக்கப்பட்ட புதைகுழிகளின் மேலால் தொடர் பேரூந்துகள் `அரைகுறை` ஆடைப் பயணிகளைச் சுமந்தபடி... புறமுதுகிட்டு ஓடாத எம் வீரமறவரின் இருப்பிடமறிய சாரை சாரையாய் வெறிபிடித்த துவேசிகள் கையில் புகைப்படக் கருவியுடன்...! `அவர் வாழ்ந்த வீடிது அவர் பாவித்த வாகனமிது பயன்படுத்திய பாசறையிது..` பார்த்தறிந்த பரவசத்தில் திறந்த வாய் மூடமறந்து தென்னிலங்கைப் பயணிகள் ... விடுதலைப் போரில் -தமை அர்ப்பணித்த வீரர்கூட பார்த்தறியாத ரகசிய நிலவறைகளும் சுரங்கப் பாதைகளும் இன்று சுற்றுலாத் தளமாய் ...!! ஒருபுறத்தே புதைக்கப்பட்ட தங்கம் தேடி சீருடைகளின் `தங்க`வேட்டை... மறைக்கப்பட்ட `பணம்` தேடி அங்குல அங்குலமாய் அகழ்வு வேட்டை.... மறுபுறத்தே ஆண்டுகள் சில சென்றாலும் முடிவுக்கு வராத ஆயுத வேட்டை ... எடுக்க எடுக்க குறையாத `அமுதசுரபி` போல.......! அமிலக் குண்டுகளில் சிதைந்துபோன எம்முறவுகளின் உயிர்க் காற்றை இழுத்து சுவாசித்தபடி அங்கொன்றும் இங்கொன்றுமாய் பச்சைச் சீருடைகள் ....! `அண்ணை எப்ப போவார் திண்ணை எப்ப காலியாகுமென` நீண்டநாள் காத்திருந்த சில தமிழ் பேசும் உறவுகளின் கட்டிலடங்கா அடாவடிகள் நில மீட்புக்காய் ......!! எம் வீரர்க்கு நிழல் கொடுத்த மரங்கள் வேரிழந்தும் விழுதிழந்தும் `இயற்கையின் பாதுகாவலர்களை` இழந்துவிட்ட சோகத்தில் இரத்தக் கண்ணீர் சிந்தியபடி..... ! வீரத் தமிழன் காலத்தில் சுதந்திரம் பெற்ற காற்றுகூட நம்முறவுகளின் உயிர்குடித்த சோகத்தில் நெட்டுயிர்த்துக் கொள்கிறது வீசமறந்து......! தெற்கிலிருந்து வன்னி நோக்கி ஒரு பயணம் சுற்றுலாப் பயணிகளைச் சுமந்தபடி ........!! ======================= தோழி துர்க்கா
வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 1825
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [32]
- மலர்91 [26]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- Ramasubramanian [16]