படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

ராமநாதபுரம் அருகே உள்ள சின்ன அக்கிரமேசி கிராமத்தில் உள்ள விவசாயிகள், விவசாயத்தில் சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகின்றனர். வறட்சி மாவட்டம் என பெயரெடுத்த ராமநாதபுர மாவட்ட விவசாயிகள் ஏற்படுத்தும் விளைச்சல்கள் பெரும் வியப்பை உண்டாக்கியுள்ளது. செடி அவரை:- பொதுவாக காய்கறி வகைகளில் ஒன்றான கொடி அவரைக்காய் பற்றித்தான் பெரும்பாலும் பலரும் அறிந்திருப்போம். கொடி அவரை பயிரிட்டால் தனியாக அதற்கென்று பந்தல் போட வேண்டும், செலவு அதிகமாகும், ஊடு பயிர் எதுவும் விளைவிக்க முடியாது. இதற்கு மாற்றாக விவசாயிகளின் செலவை குறைக்கவும், காய்கறி வகைகளில் அவரை விளைச்சலை அதிகரிக்கவும் இந்த முறை பயன்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன அக்கிரமேசி கிராமத்தில் சுப்பிரமணி என்ற விவசாயியும் தங்களது விளைநிலங்களில் அரை ஏக்கர் மட்டும் பரிட்சாத்த முறையில் செடி அவரை பயிரிட்டுள்ளனர். செடி அவரை பயிரிட்டால் காய்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். அதிக உரம் போடத் தேவையில்லை. பூச்சியும் அதிகம் தாக்காது, நிலக்கடலை, தக்கைப்பூண்டு போன்று வேர்களின் மூலமாக தேவையான உரத்தை தானாகவே காற்று மற்றும் சூரிய ஒளி மூலம் எடுத்துக் கொள்ளும் குணமுடையது. பயிரிட்ட அறுபதாவது நாளிலேயே அவரைக்காய்கறிகளை பறிக்கத் தொடங்கி விடலாம். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கல்வித்துறை உதவி இயக்குநர் இளங்கோவன் கூறியது: செடி அவரை பயிரிட்டால் கொடி அவரையைப் போன்று பந்தல் அமைக்கத் தேவையில்லை. கிரை வகைகளையும், கொடி வகைக் காய்கறிகளான பீர்க்கங்காய்,புடலங்காய், சுரைக்காய்,பாகற்காய் போன்றவற்றையும் கூட ஊடு பயிராக சேர்த்துப் பயிரிடலாம். ஆனால் கொடி அவரையில் ஊடுபயிர் எதுவும் விளைவிக்க வாய்ப்பில்லை. மாப்பிள்ளை சம்பா:- வறட்சியை தாங்கி விளையக்கூடிய “மாப்பிள்ளை சம்பா’ என்னும் நெல் ரகம், ஏழு அடி உயரத்தில் வளரக்கூடியது. அதிகளவு மாவு சத்து காணப்படுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ரக அரிசி மிகவும் பிடிக்கும். இந்த அரிசியில் சமைக்கப்படும் சாப்பாடு எளிதில் கெட்டுப்போகாது. ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டைகள் வரை சாகுபடி கிடைக்கும். சிறப்பு வாய்ந்த இந்த நெல் ரகத்தை, ராமாநாதபுரம் அருகே சின்ன அக்கிரமேசி விவசாயி கிருஷ்ணன், சாகுபடி செய்து சாதித்து வருகிறார். அவர் கூறியதாவது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிய அறிவுரைபடி, நான்கு மாதங்களுக்கு முன்னர், ஒரு ஏக்கரில் “மாப்பிள்ளை சம்பா’ சாகுபடி செய்தேன். அவ்வப்போது, விட்டு விட்டு பெய்யும் மழையில், தற்போது ஆறரை அடி உயரம் வரை பயிர் வளர்ந்து, நெல் மணிகள் கொத்து… கொத்தாக தொங்குகின்றன. பூச்சி தாக்குதல் இல்லை. உரச் செலவும் கிடையாது. மற்ற பயிர்கள் எல்லாம், மழை இன்றி வாடும் நிலையில், இந்த ரகம் மட்டும் பச்சை பசேல் என, வளர்ந்துள்ளது. மகசூல் பருவத்தை எட்டியுள்ளதால், தைப்பொங்கலையொட்டி அறுவடை செய்யவுள்ளேன். பழமையான இந்த நெல் ரகத்திற்கு, தற்போதும் மவுசு இருப்பதால், இந்த ரகத்தை விரும்பி சாகுபடி செய்தேன், என்றார். சொட்டு நீர் பாசனம்:- இதே கிராமத்தில் பஞ்சவர்ணம் என்ற விவசாயி சொட்டு நீர் பாசானத்தை அந்த பகுதியில் முதன் முதலாக அறிமுகப்படுத்தி கரும்பு சாகுபடி செய்து வருகின்றார். சொட்டு நீர் பாசன முறையை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றார். இதற்கென தனியாக பம்பு செட்டுகள் அமைத்து அதில் சொட்டு நீர் பாசான கருவிகளை இணைத்து அதன் மூலம் செடிகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் தண்ணீர் அளிக்கபடுகின்றது. இதன் மூலம் விளைச்சல் மற்றும் மகசூல்கள் அதிகரிப்பதாகவும், பாசான நேரம் மிச்சப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் கத்தரி மற்றும் வெண்டை பயிரிட்டு விற்பனை செய்து வருகின்றனர். விவசாயத்தில் சத்தமில்லாம் சாதித்து வருகின்றனர் இந்த கிராமத்து விவசாயிகள். விவசாயங்கள் அழிந்து வரும் இந்த கால கட்டங்களில் இது போன்ற கிராமப்புறங்களில் மட்டுமே இன்னும் விவசாயத்தை மதித்து அதை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல நினைக்கின்றனர். இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தால், வரும் நாட்களில் விவசாயத்தை மறுபடுயும் தலை தூக்க வைத்துவிடலாம். இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.


Close (X)

வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 1909
7

உலகில் உள்ள கட்டிடக்கலையில் சிறப்பு மிக்க பாலம், நார்வே நாட்டில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள பாலமும் ஒன்று. 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பாலம் ஆறு கிலோ மீட்டருக்கு கடலுக்கு அடியில் செல்கின்றது. கடல் மட்டத்தில் இருந்து 220 அடி ஆழத்தில் ஆறு கிலோமீட்டர் தூரம் கடலுக்கு அடியில் இப்பாலம் அமைக்கப் பட்டுள்ளது. 1983-ல் இந்த பாலம் கட்டத் துவங்கி 1989-ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலம் அமைத்திருக்கும் இடம் அதிக கடல் சீற்றம் கொண்ட இடம். பெரிய அலைகள் தாறுமாறாக மோதியும் கூட கம்பிரமாக நிற்கின்றது. இந்த பாலத்தை பார்க்கும் போது ஏதோ படங்களில் வரும் கிராபிக்ஸ் கட்சிகள் போற்று தான் தோன்றும். அந்த அளவிற்கு நம்பமுடியாத கட்டுமானம். இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 1963
11

சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்ற முடியுமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சாதாரண non-touch screen laptop அல்லது Desktop Computer-களை தொடுதிரையாக மாற்றுவதற்கான கருவி ஒன்றை Portronics என்ற நிறுவனம் Handmate Digital Pen என்ற பெயரில் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சாதாரண கம்ப்யூட்டர் திரையை , Touch Screen ஆக மிக எளிதல் மாற்றிக் கொள்ளலாம். விண்டோஸ் 8 இயங்குதளத்தின் முழுமையான பயன்பாட்டை நீங்கள் பெற வேண்டுமெனில், இந்த Handamte விண்டோஸ் 8 பேனா நிச்சயமாக பொருத்தமான கருவியாகும். விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரில் இச்சாதனத்தைப் பொருத்தி செயல்படுத்திட முடியும். இதில் Infrared and Ultrasound டெக்னாலஜி, ரிசீவிங் யூனிட் மற்றும் அல்ட்ராசோனிக் டிஜிட்டல் ஸ்டைலஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான non-touch லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் திரைகளை Touch Enable Screen ஆக மாற்றக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் கணினியில் நிறுவப்பட்ட அனைத்து மென்பொருள்களிலும் செயல்படுத்த முடியும். இந்த கருவியை எப்படி பொறுத்தவது மற்றும் இது எப்படி வேலை செய்யும் என்பதை விளக்கும் வீடியோ: இந்த கருவியின் சிறப்பம்சங்கள்: 1. Plug & Play, turn your existing PC to touch as easy as 1-2-3. 2. Cost-effective accessory, much better than buy an expensive touch screen laptop. 3. Slide, swap, drag to operate. 4. View Web &mail, zoom in & zoom out pictures, playing games, annotate on office document freely 5. Activate all software icons with a simple touch like it happens on Tablets 6. Slide, swap, drag to operate 7. Uses Ultrasonic and Infrared Technologies 8. Ultra simple user experience கருவின் தொழிநுட்ப விபரங்கள் Technology: Ultrasonic and Infrared Coverage area: up to17″(MAX) Resolution: 100 DPI Accuracy: 0.2mm Communication: USB 2.0 Full Speed , USB Cable Power Source: Pen: 2 x SR41 batteries Pen Battery Life Time:500 hours of continues writing/hovering.(The ratio of the pen’s working and standby time is 1:9 ) Note: Lifetime of the batteries may vary and cannot be guaranteed Standards: FCC/CE Platform Support: Windows® 8 Sampling rate:58 samples/second Power consumption: Operating Temperature: +10°c to +35°c. Storage Temperature: -10°c to + 50°c. Operation Relative Humidity Range: 20% – 80 % (40°c). Storage Relative Humidity Range: 20% – 80 % (40°c). Size: L * W * H: 68.01*26.32*7.70 (mm) Weight: about 9gr. Color: Black இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 1857
5

3D படங்கள் இன்று நேற்றுத் தோன்றியதல்ல.. நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே 3D படங்களை உருவாக்கப்பட்டுள்ளன. முப்பரிமாண படிமம் (3D) என்பது படிமத்தில் உயரம், அகலம் தவிர ஆழத்தின் தோற்றத்தை உருவாக்கவும் முடிகிற ஒரு ஒழுங்கமைந்த தொழில்நுட்பமாகும். அதாவது மூன்று பரிமாணங்களில் காட்சித் தகவல்களை பதிய முடியும். முப்பரிமாண தொழில்நுட்பத்தை 1840 ஆம் ஆண்டு சர் சார்லெஸ் வீட்ஸ்டோன் என்பவர் கண்டறிந்தார். இந்த 3D நுட்பமானது தற்காலத்தில் பட அளவையியல், பொழுது போக்கிற்காக எடுக்கப்படும் 3D படங்களில் பயன்படுத்தபடுகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் நவீன காலத்தில் கட்டிட வரைகலைக்குப் பயன்படும் ஆட்டோகேட், 3மேக்ஸ் மென்பொருட்களிலும் பயன்படும் நுட்பம் இதுதான். 3D படங்கள் இன்று நேற்று உருவானவை அல்ல….1861 ஆம் ஆண்டிலேயே 3D படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அப்பொழுது ஏற்பட்ட உள்நாட்டு போரின் முடிவில் ஏற்பட்ட விளைவுகளை 3டி படங்களாக பதிவு செய்துள்ளனர். இப்படங்களை The library of congress கட்சி, மக்களின் பார்வைக்கு வெளியிட்டது. சிவப்பு -நீல வண்ணங்களில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள இப்படங்களை பார்ப்பதற்கு கண்ணாடிகளும் தயார் செய்யப்பட்டிருந்தன என்பது ஆச்சரியம் கலந்த தகவல். அன்றைய காலத்தில் 3D படங்கள் உருவாக்க பல்வேறு பிரச்னைகள் இருந்தன. ஆனால் தற்பொழுது நவீனமயனமான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி சாதாரணமானவர்கள் கூட முப்பரிமாணப் படங்களை உருவாக்க முடியும். அதற்காக பயன்படும் ஒரு அடிப்படை மென்பொருள் பிளெண்டர். இது ஒரு இலவச சுதந்திர மென்பொருளாகும். அனைவரும் இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருள் Microsoft windows, Mac OS, Linux, Solaris, NetBSD, IRIX, OpenBSD, FreeBSD என்பன போன்ற அனைத்து வகையான இயங்குதளங்களிலும் பயன்படுத்தக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வகையான கணினி என்றாலும் இம்மென்பொருளை எளிதாக பயன்படுத்த முடியும். இம்மென்பொருள் வடிவம்பெற்றதே ஒரு சுவையான கதை. டச்சு நாட்டு அனிமேஷன் நிறுவனமான NeoGeo மற்றும் Not a Number Technology (NaN) நிறுவனங்களுக்கு அனிமேஷன் உள் வேலைகள் செய்ய பயன்படும் மென்பொருளாக முதன் முதலில் உருப்பெற்றது. பிறகு இதற்கு பேபி என்ற ஆல்பத்தில் உள்ள ஒரு பாடல் மூலம் ப்ளண்டர் என்ற பெயர் வைக்கப்பட்டது. கணினியில் கட்டிட வரைபடங்கள் வரையவும் , முப்பரிமான பொருட்களை (3D) வரையவும் பல்வேறு மென் பொருட்கள் உள்ளது. அம்மென்பொருட்கள் அனைத்தும் கட்டண மென்பொருள்கள். விலையும் அதிகம். ஆனால் பிளெண்டர் மென்பொருள் முற்றிலும் இலவச சுதந்திர மென்பொருளாகும். பிளெண்டர் மென்பொருளின் பயன்கள் (Uses of Blender 3D making Software): Blender மென் பொருள் 3D படங்களை உருவாக்கப் பயன்படுகிறது. Macromedia Flash, Adobe photoshop போன்ற கிராபிக்ஸ் மென்பொருட்களில் ஏற்படுத்தக்கூடிய Photo Effects மற்றும் Text Effects களை உருவாக்க பயன்படுகிறது. கட்டிடக் கலைக்குப் பயன்படும் ஆட்டோகேட் (Auto cad), 3டி மேக்ஸ் (3d max) ரைவட் (rivet) போன்ற மென்பொருளின் தோற்றத்தை பெற்றுள்ளது சிறப்பு. அதில் செய்யும் பணிமுறைகளைப் போன்ற இந்த மென்பொருளிலும் இருப்பதால் இம்மென்பொருள்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எளிதானதாக இருக்கும். இது விண்டோஸ் 32bit, 64bit , Ox , Linux போன்ற அனைத்து இயங்கு தளத்திலும் இயங்குமாகையால் எந்த வகை கணினியை பயன்படுத்தினாலும் அதில் மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம். 40 MB கொள்ளவே கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவுவதும் எளிதானதுதான். இந்த மென்பொருளை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு இந்த வீடியோவை பார்க்கவும் இந்த மென்பொருளை download செய்ய இந்த link -ற்கு செல்லவும் http://www.blender.org/download/ இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 1849
6

Youtube ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபலமான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது. இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை. எப்படி என்று பார்ப்போம். Charlie bit my finger என்ற வீடியோவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இரண்டு சிறுவர்கள் இருக்கும் இந்த வீடியோ சேனல் பல கோடிகளை சம்பாதித்து உள்ளது. இதே போல நிறைய பேர் உள்ளார்கள். Digital Inspiration தளத்தின் நிர்வாகி அமித் அகர்வால் சேனல் இது Labnol. இவர் இந்தியாவின் மிகப் பெரிய Tech Blogger. தனது தளம் மட்டும் இன்றி Youtube மூலமும் இவர் வருமானம் பெறுகிறார். தனி நபர்கள் மட்டும் இன்றி தொலைக்காட்சி நிறுவனங்கள், மற்ற நிறுவனங்கள் பலவும் Youtube மூலம் பணம் சம்பாதிக்கின்றன. விஜய் தொலைக்காட்சியின் சேனல். STARVIJAY முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன். நடிக்க தெரிய வேண்டும். அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும். எப்படி சம்பாதிப்பது? Step – 1 ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடிங்கள். நாய்குட்டி, பூனை குட்டி, உங்கள் குழந்தை செய்யும் சேட்டை, உங்கள் மனைவி செய்யும் சமையலை எப்படி என்ற குறிப்போடு, மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எது வேண்டும் என்றாலும். Step – 2 இப்போது எடுத்த வீடியோவை உங்கள் கணினியில் Movie Maker போன்ற வீடியோ எடிட்டிங் மென்பொருளில் போட்டு மெருகேற்ற வேண்டும். ஒன்றும் பெரிய விசயமில்லை, தேவை இல்லாத இடங்களை நீக்க போகிறீர்கள். பின்னணியில் குரல் சேர்க்க வேண்டும் என்றால் ரெகார்ட் செய்து அதையும் சேருங்கள். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், “வீடியோவை பார்க்கும் படி எடிட் செய்யுங்கள்” Step – 3 இப்போது Youtube தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து Upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவை Upload செய்யுங்கள். Step – 4 இப்போது உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். எளிதில் கவரும் வண்ணம் ஆங்கிலத்தில் தலைப்பு வையுங்கள், வீடியோவில் என்ன உள்ளது என Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதாக வார்த்தைகளாக கொடுக்க வேண்டும். எப்படி Tags கொடுப்பது என்று Youtube கொஞ்சம் ரகசியங்கள் என்ற பதிவில் சொல்லி உள்ளேன். இப்போது “Public” என்று தெரிவு செய்து Save செய்து விடுங்கள். Step – 5 முதல் நான்கு ஸ்டெப்களை தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள். Step – 6 உங்கள் வீடியோக்களுக்கு நிறைய views வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல ”Invitation to earn revenue from your YouTube videos” என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பும். அதில் உள்ள லிங்க்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தரவேண்டும். அந்த லிங்க் - YouTube Partner Program: Interest Form இப்போது Youtube உங்கள் வீடியோக்களை சோதிக்கும், நிறைய வீடியோக்கள் இருக்க வேண்டும், நிறைய பேர் பார்க்க வேண்டும். இதை தான் Youtube எதிர்பார்க்கும். எல்லாம் சரியாக இருப்பின் உங்களுக்கு Partner என்ற அந்தஸ்து வழங்கப்படும். பலருக்கு இது நிராகரிக்கப் படலாம்.மீண்டும் Apply செய்ய இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடியோ upload செய்யாமல் இருக்காதீர்கள். தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள். இரண்டு மாதத்துக்கு பின் இன்னும் அதிக Video, Views உடன் மீண்டும் Apply செய்யுங்கள். இடையில் உங்களுக்கு Adsense கணக்கு இருந்தால் அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் Youtube வழங்கும். [என் லெவல் இது தான்]. இதில் வீடியோ Upload செய்த உடன் Monetize My Video என்பதை கொடுக்க வேண்டும். இப்போது உங்கள் வீடியோ குறிப்பிட்ட சில நாட்களுக்கு Review செய்யப்படும். வீடியோ உங்களுடையது என்று Youtube உறுதி செய்த உடன், Monetized என்று ஆகி விடும். Parter, Adsense இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். Adsense கணக்கு மூலம் வரும் Earning, Partner ஐ விட குறைவாக இருக்கும். [Partner கணக்குக்கு 1000 Views க்கு 2.50$ என்று சொல்லப்படுகிறது] இதில் Adsense கணக்கை சேர்க்க, நீங்கள் Youtube கணக்கில் நுழைந்த உடன், Youtube இதை கேட்கும். கேட்கவில்லை என்றால் காத்திருக்கவும். இரண்டில் எது உங்களுக்கு கிடைத்தாலும், உங்கள் வீடியோவுக்கு Youtube இரண்டு வகையான விளம்பரங்களை காட்டும் Overlay in-video ads - வீடியோவின் கீழே வரும் குட்டி விளம்பரம் TrueView in-stream ads – வீடியோவுக்கு முன் வரும் சில நொடி விளம்பர வீடியோ நீங்கள் எவ்வளவு வீடியோ upload செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ என்றால் அதற்கேற்ப தான் வருமானமும். எந்த மாதிரி வீடியோக்களை Upload செய்யலாம் ? சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தள வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள். போன்றவை. கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் இன்னும் அதிகமாக வருமானம் பெற முடியும். தமிழும் கூட பயன்படுத்தலாம். ஆனால் சினிமா வீடியோ, பாடல் எதையும் நீங்கள் இதில் பயன்படுத்த முடியாது. வீடியோவானது முழுக்க முழுக்க உங்களுடையதாக உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் Youtube தரும் Audio swap வசதியை பயன்படுத்தாதீர்கள். அந்த ஆடியோக்களை பயன்படுத்தினால் அதில் வரும் விளம்பரம் மூலம் வரும் வருமானம் உங்களுக்கு வராது. உங்கள் முயற்சிகளை பொறுத்து தான் இது ஈமு கோழியா அல்லது, பொன் முட்டை இடும் வாத்தா என்பது தெரிய வரும். Youtube குறித்த மற்ற கேள்விகளை கீழே கேளுங்கள். பதில் சொல்கிறேன். - பிரபு கிருஷ்ணா


வழி : pskannan கருத்துகள் : 0 பார்வை : 1846
4

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே