படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.


Close (X)

வழி : தாரகை கருத்துகள் : 0 பார்வை : 71
1

அன்புள்ள காக்கைக்கு.... மனிதனை புறக்கணித்து மாற்றுக்கிரகம் தேடு; இல்லையேல், இரண்டாம் இனமாய் தெரிந்தே பலியாவாய், மூன்றாம் இனமாய் முன்னேற்பாட்டுடன் முறி படுவாய்... கவனங்கள்; கவனியுங்கள்... கறைகொடியுடைய வீட்டில் மறந்தும் தரையிறங்காதே.., இறங்கினால் இனக்கலவரம்..!? கொக்கிற்கும் உங்களுக்கும்..! பறந்து விடு.. உயிரைத்தின்று உத்சவம் நடத்தும் பெருவிழா காண்பதெப்படி.? கற்பித்தாலும் கற்பிப்பான்.. பறந்து விடு.. நீதிக்கேட்டு வீதியில் பறந்தால் சாலைத்தேடி சட்டம் வரும்., வீடு தேடி தடியடி வரும்.. பின், சிட்டைப்போல் பட்டுப்போவாய்.. பறந்து விடு.. உன் பாட்டன் பறந்த வீதியில்லை; பரிவாய் பார்க்க நாதியில்லை; பின், பாதுகாப்புப்பெட்டகத்தில் பக்குவமாய் படமாவாய்...! பறந்து விடு.. மூழ்கி குளிக்க ஓடையில்லை; குளித்து அமர மரங்களும் இல்லை., கோவில் கோபுரங்கள் கூட அரசியல் அலுவலகமாய்....! பறந்து விடு.. நீ கல் போட்ட பானையும் இல்லை; கல் விழுந்த தண்ணீரும் இல்லை; கள்ளச்சாராயம் கூட பாலித்தீன் பைகளில்...! பானைத்தேடி பறந்து விடு.. விடிவதற்குள் பறந்து விடு; விமான நெரிசல் ஆரம்பம்…! மடிவதற்குள் பறந்து விடு; நாளை இரும்புமரம் கூட முளைக்கலாம்…! தொடுவதற்குள் பறந்து விடு; கதிர்வீச்சுகள் காத்திருக்கிறது...! நேற்று அரிசி விற்பனை; இன்று குழம்பு விற்பனை; நாளை கோழியும் அழியும்... நான்காம் நாள்.. நீ தான் இலக்கு..! பறந்து விடு.. இன்னும் சொல்லப்போனால்... ஆண் காக்கைகள் ஆயுதமெடுக்கும்…! பெண் காக்கைகளுக்கு பிரசவ வலி வரும்...!! எங்கள் ஆறாம் அறிவை உங்கள் வலப்பக்க மூளைக்குள் வலுக்கட்டாயமாய் திணிப்போம்..! பின், உங்களுக்குள்ளும் உளவாளி செய்வோம்...! உங்களையும் மதம் பிரிப்போம்..!! கடைசியில், காக்கைக்கும் மனிதனுக்கும் கலப்புத்திருமணமும் நடக்கும்...!! எங்கள் அறிவியலில் எதுவும் சாத்தியம்.. பறந்து விடு.. நாளடைவில் உங்கள் கூடுகளுக்கெல்லாம் வரி விதிப்போம்., வாதாடினால், விசாரணைக்கு கைதும் செய்வோம்., இரண்டு தலைமுறைக்கு இழுத்தடித்து தள்ளாடும் வயதில் தள்ளுபடியும் செய்வோம்.. பறந்து விடு.. முடிந்தவரை சொல்லி விட்டேன்.. உங்கள் முடிவையும் சொல்லி விட்டேன்.. சொல்லியதால், என் கவிதைக்கு எழுத்தடங்கு உத்தரவும் வரும்..! ம்ம்..... உங்கள் உலகத்தை கண்டறிய புறப்படுங்கள் சீக்கிரம்..... வானடங்கு உத்தரவும் வரப்போகிறதாம்...! --வரிகள்.. க.ஷர்மா.


வழி : அஹமது அலி கருத்துகள் : 0 பார்வை : 66
1

மரபுகளை விழுங்கி மக்களைத்தின்று மகிழும் பாலைவனக் காட்டேரிகளின் குப்பைச் சிந்தையில் குடியிருக்கும்-- -------குரூரப் புத்திகளைக் -------கிழித்தெறிய விரக்தியில் -------கத்துகிறது என் விரல்கள் ! மண்ணை வைத்துக் கணித்தாலும் மனத்தை வைத்துக் கணித்தாலும் -------மரபுகள் இழந்த அரபிகள் -------பாலைகள் என்பதில் -------ஐயமில்லை ! வாழ வக்கின்றி கடல்தாண்டி ஓடிவந்து வாடிமடியும் ஏழைகளின் கனாக்களை, வினாக் குறியாக்கி உயிர்ப்பிடுங்கி உதிரம்சப்பும் -------ஓநாய்க் கூட்டங்களே- -------உங்கள் உடம்புக்குள் ஓடுவதும் -------எரிபொருளா ? புழுக்களுக்கு கொடுக்கும் மரியாதைக்கூட இல்லாமல் எங்கள் பெண்டிரைக் குழுக்களாய் தின்றுதீர்த்து வீதியிலும் கடலிலும் -------வீசியெறியும் வெறிநாய்களே- -------மனிதம் ஒருகிராம் -------உங்களூரில் என்னவிலை ? அப்பாவிக் கன்னிகளைத் தின்றுவிட்டு, திருடியென்றும் விபச்சாரியென்றும் பட்டம் சூட்டிக், கல்லடித்துக் கொல்லுகின்ற -------புலால்தின்னிக் கழுகுகளே- -------பன்னிகளைத் தின்றால் ஹராம் என்கிறீர்களே -------கன்னிகளின் உயிர்த்தின்னுவது ஹலாலா? அல்லல் தணிக்க அலைகடல்தாண்டி வரும் ஆசிய அபலைகளிடம் சூரத்தனம் காட்டுகின்ற -------அயோக்கிய நரிகளே- -------அமரிக்கனிடமும் பிரிட்டிஷ்ஷிடமும் -------ஏன் இல்லை இந்த ஆட்டம் ? -------தொங்கவிடுவான் என்ற பயமா ? மூவேளைச் சோற்றுக்கு மொத்தமும் துறந்துவிட்டு கடல்தாண்டி வருபவளை கற்பழித்துக் கொல்லும் -------கழிச்சடை ராஜாக்களே-நீங்கள் -------செய்வதெல்லாம் பாவம்- செய்துவிட்டு -------ஐவேளை தொழுதென்ன லாபம் ? பணத்தின் வைப்பாட்டியாய்ச் சட்டமொன்றை வைத்துக்கொண்டு ஊருக்கு ஒருநீதியும் ஊருக்குவந்த ஏழைக்கு - ஒரு நீதியும் சொல்லும் -------பாலைவனக் காட்டேரிகளே- -------காசில்லாதவனுக்கு மட்டுமா -------கழுத்தறுக்கும் உன் சட்டம் ? பணிப்பெண்களாய் அங்குவந்து – பிணங்களாய், பிணிப்பெண்களாய் பிறந்தவூர் நோக்கித் திரும்பிவரும் ஏழைகளின் சாபங்கள் ஒருநாள்... -------எரிபொருளைவிட வேகமாய் -------கோழைகள் உங்கள் -------குலத்தையே எரிக்கும் ! ===================== கே.எஸ்.கலை


வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வை : 67
2

காற்றே... உன் வருகைக் கண்டு மரக்கிளைகள் நடனமாடும்...! தனை மறந்து செடிக்கொடிகளெல்லாம் நயமாய் தலையாட்டும்...! புல்லாங்குழலுக்கு நீதானே புதுக்கவிதை...! குழந்தைகள் கையில் கொஞ்சி விளையாடும் பலூனும் நீதான்...! வெற்றுத்தாளையும் வானுயரப் பறக்கும் பட்டமாய் மாற்றுவதும் நீதான்..! சிமிலிக்குள்ளே ஒளிந்திருக்கும் முரட்டுக்கார நெருப்புக்கூட உன்னைக் கண்டு நடுநடுங்கும்...! நீயின்றி ஏது மின்சாரம்...? நீதானே அதற்கு சம்சாரம்...! காதலர்கள் மயக்கம்கொள்ள அழகிய தென்றலாய் வருவாய்... கட்டுக்கடங்கா வீரன் நீயென்று உலகெல்லாம் பறைசாற்றிட புயலாக நீ அவதரிப்பாய்...! உன் மார்பில் முட்டி முறிந்த மரங்கள் கோடி கோடி...! உன் சகவாசமின்றி இறந்த மனித உடல்கள் பல கோடி கோடி...! மனங்கொண்டு மனிதனோடு மணம்வீச நீ இல்லையென்றால் மறுநொடியே மன்னனாயினும் பிணம்தான்...! கற்பனை


வழி : நாகூர் கவி கருத்துகள் : 0 பார்வை : 58
0

சீருடை தரித்து சீராய் செல்லும் பள்ளி சிறுவர் சிங்காரித்து அலுவல் செல்லும் சீரிய மங்கையர் சரக்கு வாங்க சந்தை செல்லும் மாந்தர் சாரை சலிப்போடு விற்பனை தேடும் வியாபாரி வரிசை ஊரு விட்டு பிற ஊரு சேர பயணிகள் சேரும் ஊர்தியோட்டி ஓடி உந்தும் மனிதர் பலரும்..! நெடி வெடித்து கொல்லும் இந்த தீவிரவாதம் நொடியில் ஒடியும் ஓங்கி வளர்ந்த மனித நேயம் வெடிக்கும் கைகள் அறிவதில்லை கொல்லும் நீதி மடியும் மனிதன் அறிவதில்லை இறக்கும் நீதி ..! எந்த மதம் எக்காளமிடுது மனிதனை கொல்ல அந்த மதம் மடிய வேண்டும் மனிதன் வெல்ல..! மதத்தை இழுத்து மேடைபோடும் மனிதானில்லு மனிதநேயம் தூக்கில் போடாது நீயும் செல்லு..! மனிதா உன் மதம் பிடித்தால் நன்றாய் நீ படித்து செல்..! மனிதா உன் மதம் உனை பிடித்தால் நீ முடித்து செல்..! மனிதா உன் மதம், மதம் பிடிக்கா நீ அழைத்து செல்..! மனிதா உன் மதம், மதம் பிடித்தால் நீ விட்டு செல்..! மத நேயம் துறப்போம்..! மனித நேயம் காப்போம்..!


வழி : நாகூர் கவி கருத்துகள் : 0 பார்வை : 57
1

கைகோர் தமிழா கைகோர் கைகோர் தமிழா கைகோர் இந்த பூமியில் வாழ கைகோர். தூய தமிழனாய் வாழ கைகோர் உழுதுண்டு வாழ்ந்தவர் நாங்கள். அதை உலகுக்கு தந்தவர் நாங்கள். நிலம் இன்றி அகதியாய் சிறுபான்மை சின்னமாய் நாங்கள் மூத்தவர் ஆண்டு சென்றுவிட வந்தவர் நாம் மெளனியாய் அடிமையாய் தொடர்கின்றோம் எட்டு கோடியாய் உள்ளோம் எட்டி உதைத்திட ஒன்று சேர்வோம் பூமியில் திசையெங்கும் வாழ்கின்றோம் சொந்தமாய் நிலம் ஒன்று சேர்ப்போம் தொழுது நாம் வாழ்ந்த கோவில் அங்கு குண்டுகள் வீழ்கின்றது இன்று சிறு துண்டு தசைகளாய் வீழ்ந்து சாகிறான் தமிழன் தினமும் நிலாச் சோறு உண்ட முற்றம் அங்கு வீசுகின்றது இரத்தத்தின் நாற்றம் மெல்ல வருடிய தென்றலில் நாளும் அவலமாய் செத்தவன் கூக்குரல் இன்பமாய் விடிந்த காலை கொலையும் களவுமாய் விடிகின்ற நாட்கள் செம்மொழி பேசினால் தமிழன் சிறையில் எண்ணிடும் நாட்கள் வடக்கிலும் கிழக்கிலும் வாழ் நாள் முண்டமாய் பைக்குள் வீதியில் பிஞ்சு குழந்தைகள் முன்னே இரத்த வெள்ளத்தில் தந்தை பெற்ற தாய்க்கு முன்னே துப்பாக்கி குண்டேந்தி தனையன் தெய்வமாய் போற்றும் பெண்கள் தம் வாழ்க்கையை தொலைத்த பின் தனியே கூடவே சுற்றிய நண்பன் கோணிப்பைக்குள் பிணமாய் புத்தக பையுடன் சென்ற சிறிதொன்று கிணற்றுக்குள் பிணமாய் மண முடித்து ஆறாம் நாள் காணாமல் போன கணவன் தமிழுக்கு வாலாட்டிய நாய்க்கு துப்பாக்கி ரவையே பரிசாம் இன்னும் வெறுமையாய் ஏன் ஒதுங்கி ஓடுகிறாய் இழப்பையே இருப்பாக்கி மெளனியாய் தொடர்கிறாய்.?? மரம் வெட்ட தடையுண்டு தமிழனை வெட்டபரிசு உண்டாம். வன்னியின் வான் பரப்பில் வல்லூறு எச்சங்கள் அதிகாலையில் ஆனந்த பறவையின் குரல் கேட்டு கண்விழித்தோம் ஆனால் இன்று இடியாய் அதிரும் பல்குழல் ஒலி கேட்டு தேடுகிறோம் பதுங்குகுழியை கண்சிமிட்டும் நட்சத்திரத்தை கண்சிமிட்டாமல் பார்த்திருந்தோம்.... ஆனால் இன்று கண்சிமிட்டும் நேரத்தில் வான் இயந்திரத்தின் வக்கிர தேசமாய் மாறும் காலாற நாம் நடந்த வயல் காடு கண்ணிவெடி விளையும் வயலாய் இன்று நெல்லரிசி சோறுமாய் ஒடியல் பிட்டுமாய் உரம் ஏற்றிய உடம்பு புழுப்பிடத்த அரிசிக்காய் நீண்ட வரிசையில் நடு வெயிலில் குருவிக்கு கூட கூடு உண்டு தமிழா உன் பிஞ்சுக்கு நாடு உண்டா.??? பாதச்சுவட்டை பதித்திடு ஒரு திசையிட்டு கைகளை நீட்டி கைகோர்த்து வந்திடு புள்ளியாய் உள்ள மண்ணை புனிதமாய் காத்து புதுயுகம் படைக்க வீரமாய் புறப்படு தமிழா.....!! #################### படைத்தவர்- எஸ்.வி.ஆர்.பாமினி


வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 62
4

புகையும் உள்ளத்தில் பகை கொண்டலையும் சுயநலப் பேய் பிடித்த தமிழா நீ தமிழா...........! பற்றுள்ள வாழ்வில் பதவி ஆசையுடன் பல்லக்கில் பவனிவரும் தமிழா நீ தமிழா.............! நீதியைப் புதைத்துவிட்டு காவலனே துகிலுரிகின்றான் கூடப் பணிபுரியும் பெண்ணை தமிழா நீ தமிழா .............! மண்பற்று உள்ளவன் விண்ணாளச் சென்றுவிட பெண் பித்தனெல்லாம் மண்ணாள்கின்றான்.......! சாவைக் கண்டஞ்சாது வீரமரணத்தை தேடிச்சென்ற மறவரின் தியாகத்தை மனம்கொள்வாய் தமிழா.! ஒரே மொழி பேசும் உன்னிடத்திலேயே ஆயிரம் வேற்றுமைகள் எண்ணற்ற துவேசங்கள்....! வேறு மொழி பேசும் இனவாத சிங்களவன் எப்படிப் புரிந்துகொள்வான் உண்மை நிலையை தமிழா.! சிங்களவனெல்லாம் கெட்டவனுமல்ல தமிழனெல்லாம் நல்லவனுமல்ல ....... நல்லெண்ணத்தை விதைத்தால் புரிந்துகொள்வாய் உண்மையை தமிழா.!!! ====================================== தோழி துர்க்கா


வழி : susaana கருத்துகள் : 0 பார்வை : 75
3

உக்கிர வன்மம் கொண்டு அக்கிரமங்கள் புரியும் மனிதவுரு நரமாமிச உண்ணி சுற்றி வருகுது நரபலியெடுக்க நாடகமாடுது! /-/ சத்தியக் கண்களையெல்லாம் அசத்திய அலகால் அசாத்தியமாக கொத்திக் குதறி கொக்கரிக்குது விசமதை வீரியமாய் கொப்பளிக்குது! /-/ ஆறாம் அறிவு மேதையென்று ஐந்தாம் அறிவிலே பாடம் நடத்துது சிந்தை சீர்தூக்கிப் பார்க்காமலே அகந்தையில் ஆட்டம் போட்டலையுது! /-/ நீதிக்குப் பின்னால் நிழல் காட்டுது ஆதிக்க வெறியால் தலை நீட்டுது போதிக்கு கீழமர்ந்து போதிக்குது பாதி பித்தினில் புத்தர் வேசம் கட்டுது! /-/ பிணம் தின்ன வாய் பிளக்குது இனம் பார்த்து ருசி பார்க்குது ருசி பார்த்தபின் ஏப்பம் விடுது பசியில் மீண்டும் மோப்பம் பிடிக்குது! /-/ உச்ச விழிப்புணர்வு இல்லாது போக மிச்ச உயிர்களும் இல்லாது போகும் பிணந்தின்னி கழுகை விரட்டிட இணக்கத்தில் இணைவது அவசியமே! உலக நடப்பு


வழி : நாகூர் கவி கருத்துகள் : 0 பார்வை : 56
1

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"மேலே