படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

அன்று.. ஆரம்ப பள்ளியில் உன்னைவிட்டு அழுகையோடு நீ என்னைத்தொட்டு சினத்தோடு நானும் கையை விட்டு சிந்திவிட்டு வந்தேன் தள்ளி விட்டு..! இன்று.. பொறுப்பை போக்கி இல்லமொன்றில் பொறுப்பாய் எனை நீ விட்டபோது பொங்கும் என் மன குமுறல் விட்டு போனாயே என் செல்ல மகனே..! ஆரம்ப இல்லத்தில் உனை விட்டதற்க்கு அநாதையாக எனை போட்டு விட்டாய்..! அன்று.. உன் கல்விக்காய் நல்பள்ளியை நாடினேன் உன் கல்விதரம் சிறக்க அலைந்து தேடினேன் முன் குறை கண்டு உன்னோடு சாடினேன் முதல்தரத்தில் வெல்ல ஆனந்தம் பாடினேன்..!! இன்று.. என் சுமை இறக்க பலநாள் அலைந்தாயே என் தரத்துக்கு அக்கறையாய் சுழன்றாயே முழு நிறைவாய் நீ இருக்க தவித்தாயே முதல் தரம்தான் இங்கெனக்கு கொடுத்தாயே நான் விட்டேன் மகனே நீ வென்று வந்தாய் ..! நீ விட்டாய் மகனே நான் வெந்து வருவேன்...! அன்று.. அருமை விடுதியில் விட்டு படித்த காலம் அடிகடி பார்க்க வேண்டும் என்ற நேரம் அலுவலின் நிமித்தம் உன் ஆசை துறந்தேன் அப்போதும் அனுப்பிவைப்பேன் விடுதி பணம்..! இன்று... ஒருஆண்டு சென்ற பின்னும் வரவில்லையே ஓயாத உன் பணிசுமைதான் நான் அறிவேன் ஒரு முறையும் தவறாத தவணை தொகை ஒழுங்காய் அனுப்புகிறாய் பெரும் மகிழ்ச்சி என் உள்ளமும் ஏங்குதே உன்முகம் காண எதிர்வினை இதுவென்று மனம் சொல்லுதே..! அன்று... சிறுவனாய்.. இளைஞனாய்.. கற்றறிந்தாய் சிந்தையில் அனுபவம் சுற்றி வைத்தாய் என் முதுமை பருவத்தில் இன்றெனக்காய் எல்லாமே மொத்தமாய் செலவு செய்தாய்..! இருக்குது மகனே ஓரு வேறுபாடு இனிய வாழ்க்கை உனக்கு தந்தேன் இதுதான் உறவுவென எனக்கு தந்தாய் இதுபோல் உன்மகன் தேடவேண்டாம் இங்கும் உனை வாழ்த்தியே பாடுகிறேன்..! இன்றும் நீ என் செல்ல மகன் ஆனதால்..! ஒரு தந்தையின் இதயம் முதியோர் இல்லத்திலிருந்து..!


Close (X)

வழி : குமரிப்பையன் கருத்துகள் : 0 பார்வை : 74
7

தீப்பிடிக்கும் இரவுகள்! பனி இரவுகள் பிரம்மச்சரியத்தில் அத்தனைக் குளிரே - இந்த இரவுகள் இப்படி தீப்பிடிப்பது எப்படி ? பனி பெய்யும் இரவுகளில் ஆர்வமாய்ப் - பணி செய்யும் பறவைகளாய் நாம் மாற- இரவுக்கும் தூக்கத்திற்கும் என்னடா சம்பந்தம் என நம் தூக்கம் நமை கேட்க- நாணம் சென்றது வானம் தூரம் ! காரிருள் கண்மூடி கருப்புச் சுவராய் மாற தூரிகையாகும் காயங்கள் வரைவது எத்தனை மாயங்கள் ? இரவை உறங்க வைக்கத் தடுமாறும் காலிடையே தாலாட்டும் கொலுசொலி... நரம்புகள் புடைக்கவும் வரம்புகள் உடைக்கவும் கற்றுக்கொண்டது எப்படி ? ஏகாந்த இரவுகளில் ஒவ்வா முனைக் காந்தங்கள், ஓட்டுவதும் பிரிவதும் கச்சிதமாய் நடக்குமென கண்டுப் பிடித்தபோது - கலைஞானி கூட விஞ்ஞானி ஆகிவிட்டான் ! இதயத்துள் ஒவ்வொரு நொடியும் - பகலெல்லாம் எப்போது மடியும் ? இரவுகள் எப்போது விடியும் - என்ற வினாக்கள் எழுவது சகஜம் காரணம் யாதெனில் – இது கனாக்கள் நனவாகும் தருணம் !


வழி : KS.Kalai கருத்துகள் : 0 பார்வை : 142
0

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே