படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

துபாய், ஏப்.23-


Close (X)

வழி : vinayaka கருத்துகள் : 0 பார்வை : 1849
1

ஆஸ்டியோபோரோசிஸ்' என்பது எலும்பு பாதிப்பு ஆகும். எலும்பின் அடர்த்தி, பருமன் ஆகியவற்றில் சுரப்பிகளின் மாறுதல்களால் ஏற்படும் கோளாறாகும். இதனால் எலும்பு முறிவு, எலும்பு மூட்டுக்களில் வலி ஆகியவை ஏற்படுகின்றன. கால்சியம் சீரமைப்புப் பணியை பெண்களிடத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும், ஆண்களிடத்தில் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோ னும் செய்கின்றன. இந்த சீரமைக்கும் ஹார்மோன்களின் சுரக்கும் தன்மை 60 வயது ஆன பெண்களுக்கும், 70 வயது ஆன ஆண்களுக்கும் குறையத் துவங்குகிறது. ஆகையால் வயதானவர்கள் இத்தகைய நோய்க்கு பெருமளவு ஆளாகிறார்கள். இதைச் சரிசெய்வ தற்காக பல ஹார்மோன்களின் மாத்திரைகள் கிடைக்கின்றன. இதைக் கொண்டு எலும்புகளில் ஏற்படும் இக்குறைபாட்டை இயற்கையாக நீக்கலாம். அதிலும் உணவு முறைகளை சரியாகக் கடைப்பிடிக்கும்போது, இத்தகைய குறைகளைக் குறைக்க முடியும். அதுவும் பின்வரும் ஊட்டச்சத்துகளை தினசரி உட்கொண்டால் ஆஸ்டியோபோரோசிஸை தடுக்க முடியும். கால்சியம்: இது உடலின் செயல்களை சீராக அமைக்க உதவுகிறது. நமக்குத் தேவையான அளவு கால்சியத்தை தினசரி எடுத்துக் கொள்ளாவிட்டால் நமது உடல் எங்கு அதிகம் கால்சியம் உள்ளதோ அந்த இடத்திலிருந்து கால்சியத்தை எடுத்துக் கொள்கிறது. இதனால் எலும்புகளின் சக்தி குறைந்து, அவை உடையும் தன்மைக்கு வந்து விடுகின்றன. இப்படி இருந்தால் நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு கால்சியத்தை உண்ணவேண்டும்? ஒரு நாளைக்கு ஏறக்குறைய 1000, 2000 மில்லி கிராம் வரையிலும் கால்சியம் தேவைப்படுகிறது. இதை நாம் தயிர், பால், சோயா, சோயா பால், டோபு, கெட்டித்தயிர், குறைந்த கொழுப்புள்ள ஐஸ்கிரீம், வெள்ளை பீன்ஸ், சைனீஸ் கோஸ், கேல், கொலார்டு கிரீன்ஸ், புராக்கோலி, பாதாம் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் இருந்து பெறலாம். வைட்டமின் 'டி': வைட்டமின் 'டி' இல்லாமல் கால்சியத்தை உண்பது உபயோகமில்லாமல் போய் விடும். கால்சியத்தை உடல் ஏற்றுக்கொள்வதற்கு வைட்டமின் 'டி' தேவைப்படுகிறது. மனித உடல், சூரிய வெளிச்சத்திலிருந்து வைட்டமின் 'டி'யை பெறமுடியும். ஆனால் உடம்பை அதிக அளவு சூரிய ஒளிக்கு வெளிப்படுத்துவது கேடு விளைவிப்பது மட்டுமல்லாமல், புற்றுநோயை தூண்டுவதாகவும் உள்ளது. ஆகையால் இதை நாம் உணவாக எடுத்துக் கொண்டு ஈடு செய்ய முடியும். சாலமன், மத்தி, கானாங் கெளுத்தி, கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் முட்டை மஞ்சள் கரு ஆகியவற்றில் வைட்டமின் 'டி' அதிகள வில் உள்ளது. தினசரி உடற்பயிற்சி, எடை தூக்குதல், சக்தியை அதிகரிக்கும் பயிற்சி ஆகியவற்றைக் கலந்து செய்வது உடம்பில் உள்ள எலும்புகளைவலு வடையச் செய்யும். ஓடுவது, விளையாட்டுகளில் ஈடுபடுவது, யோகா ஆகியவற்றின் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் எலும்புகளும் உறுதிப்படுகின்றன. மது அருந்துவதைக் குறைத்தல்: மது அருந்துவது உடம்பில் ஆல்கஹால் அளவை அதிகப்படுத்தி எலும்புகளை நாசம் செய்கின்றது. இது கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை உடல் ஈர்த்துக் கொள்ளவிடாமல் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் பாராதைராய்டு சுரப்பியை அதிகரித்து கால்சியம் மற்றும் வைட்டமின் டியை உடைக்கின்றது. அது மட்டுமல்லாமல் கார்டிசோல் என்று கூறப்படும் கால்சியம் சேகரிக்க உதவும் சுரப்பியை குறைவாக சுரக்கச் செய்கின்றது. எலும்புகளை உருவாக்கும் அணுக்களான ஓட்டியோபிளாஸ்ட்களை உருவாக விடாமல் தடுக்கின்றது. புகை பிடிப்பதும் எலும்புகளின் அடர்த்தியைப் பாதிக்கிறது. எனவே மது வையும், புகைப்பதையும் தவிர்க்க வேண்டும்.


வழி : vinayaka கருத்துகள் : 0 பார்வை : 1816
2

ஆரியக் குமரியின் இதம்தரும் அணைப்பில் விகார மகாதேவியும் வெட்கத்தில் நாண கிளுகிளுப்பில் அவன்....! உப்பிப்போன வயிறு திடீர் செழுமையை அகிலத்துக்கு பறைசாற்ற வெற்றிலையின் உபயத்தால் உல்லாசத்தில் நரியன்....! துட்டுக்கு மெட்டெழுதி துயரத்தைக் காசாக்கி வலியின் சுவடறியா வாய்மையைத் துறந்த கற்பனைக் கவிஞனவன்......! ஆட்டுக்கல்கூட அறியா அஞ்ஞானப் பரம்பரை புலமையை அடகுவைத்த மடமையின் காரியத்தால் நவீன சாதனங்களுடன்..... ..! வாழ்க்கை என்று புரியும்..... ஆரியக் குமரிகள் சலிக்கும் போதா....அன்றி அடியிலுள்ள மண்டையோடுகள் முதுமையில் உறுத்தும்போதா..! கலைமகள் சபித்த நாவில் அழுக்கேறிய மூளையில் இறுதிவரை எதுவுமே புரியாமலும் போகலாம்..! சிந்தனைகள் மரத்து சிங்கத்தின் குகையில் அடிமையாய் நிற்கும்போது தொலைந்துபோன அடையாளம் கண்முன்னே விரியும் கலங்கலாக.!!? ================== தோழி துர்க்கா


வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 1829
4

சென்னை, ஏப். 16– மதுரையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் ஜோசப் (வயது 49). லாரி பாடி கட்டும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கம்பெனிக்கு பணம் தர வேண்டிய ஒருவரிடம் பணம் வாங்குவதற்காக நேற்று முன்தினம் சென்னை சேத்துப்பட்டிற்கு வந்தார். அங்கு அவர் எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் மதுரை செல்ல முடிவு செய்தார். தாம்பரம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் மதுரை செல்ல திட்டமிட்ட அவர் மின்சார ரெயிலில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கினார். 1–வது பிளாட்பாரம் ஓரமாக நடந்து சென்ற ஆல்பர்ட் ஜோசப் திடீரென தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது திருமால்பூரில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயில் ஒன்று தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு நுழைந்தது. இதை சற்று எதிர்பார்க்காத ஆல்பர்ட் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். இதை பார்த்த அங்கு இருந்த பயணிகள் அலறினார்கள். ‘‘ரெயிலை நிறுத்துங்கள்’’ என்று கூச்சல் போட்டனர். ஆனால் ரெயிலை நிறுத்த முடியவில்லை. அதன் வேகத்தை மட்டும் டிரைவர் குறைத்தார். ரெயில் அவர் அருகில் நெருங்கும்போது பயணிகள் ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று அதிர்ச்சியில் உறைந்து இருந்தனர். அப்போது சமயோகிதமாக ஆல்பர்ட் தைரியமாக முடிவு எடுத்தார். தண்டவாளத்திற்கு நடுவில் தரைமட்டமாக படுத்து கொண்டார். ரெயில் என்ஜின் அவரை கடந்து சென்று நின்றது. ஒரு சில பெட்டிகளும் அவரை கடந்து நின்றன. உடனே ரெயிலில் பயணம் செய்த பயணிகளும் அங்கு கூடியிருந்தவர்களும் கீழே இறங்கி ஆல்பர்ட் என்ன ஆனார் என்று பார்த்தனர். தண்டவாளத்தில் நடுவில் பெட்டிக்கு அடியில் படுத்து கிடந்த ஆல்பர்ட் எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நன்றாக இருக்கிறேன். என்னை வெளியே தூக்குங்கள் என்றும் மட்டும் குரல் கொடுத்தார். இதையடுத்து ரெயில்வே ஊழியர்களும், பயணிகளும் அவரை மீட்டனர். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது உடலில் சிறு காயம் கூட ஏற்படாமல் இருந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். ஆல்பர்ட்டை உடனடியாக அங்குள்ள ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அழைத்து சென்று முதலுதவி அளித்து மதுரைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்திற்கு நடுவில் படுத்து உயிர் தப்பிய ஆல்பர்ட் மறுபிறவி எடுத்ததாக கருதி பயணத்தை தொடர்ந்தார். அவர் உயிர் பிழைக்க வேண்டும். அவருக்கு எதுவும் ஆகக்கூடாது என்று அபாயக்குரல் எழுப்பியதன் விளைவாக டிரைவர், ரெயிலின் வேகத்தை உடனடியாக குறைத்தார். இதனால் அவர் சாதுர்யமாக உயிர் தப்ப முடிந்தது.


வழி : vinayaka கருத்துகள் : 0 பார்வை : 1822
1

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே