படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

நேற்றைய போராட்டத்தில் ஆயுதம் சுமந்தவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க களம்பல கண்டவர்கள் இன்று தேடுவார் யாருமின்றி ...! முதலைக் கண்ணீர் விட்டு அவர்களின் பிரச்சினைகளை அரசியல் ஆக்கியவர்கள், வாய்திறக்க மறுக்கிறார்கள் சூழ்ச்சி பலசெய்து அவர்களைத் தோற்கடித்துவிட்டு..! பதவிக்கும் பட்டத்திற்கும் ஆசைப்பட்டு கொள்கைகளை மறந்தவர்கள் காட்டிக்கொடுப்பிற்குப்பின் கண்ணியவானாக காட்டிக்கொள்ளமுயல்கிறார்கள் கன்னிகளுடன் கூத்தடித்துக்கொண்டு ...! நேற்றைய போரின் கதாநாயகர்கள் `புனர்வாழ்வு` எனும் சித்திரவதைக்குப் பின் வாழ வழியின்றி வாழ்வை முடித்துக்கொள்கிறார்கள் மனக்குழப்பத்தோடு ....! தங்கத்தலைவன் வழிகாட்டுதலில் சாதனைகள் பலபடைத்த சரித்திர நாயகிகள் ஒதுக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் `யார் காப்பார் எம்மை இனி ` என்று பெருமூச்சுவிடுகிறார்கள்...! `யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே ...` சரித்திர நாயகரின் இன்றைய நிலை பார்த்தபின் ஞாபகத்திற்கு வருகிறது கண்ணதாசனின் வரிகள் ...! நேற்றைய போரில் இலட்சியம் மட்டுமே இதயத்தில் இருக்க இன்றோ பயமுறுத்தும் நிகழ்காலம் நிச்சயமற்ற எதிர்காலம் எல்லாவற்றையும் கேள்விக்குறியாக்கி .....! கொடுங்கோலன் ஆட்சியிலே மாறிய காட்சிகள் மாறாத எண்ணங்கள் இருப்புக்கும் இழப்புக்கும் மத்தியில் விடைகாணமுடியாத கேள்விகளாய் ...! பதவிக்கும் சுயலாபங்களுக்கும் ஆசைப்பட்டு நம்பிக்கைத் துரோகியாகும் பலருக்கு மத்தியில் விசுவாசமாயிருந்த இவர்களின் நிலை வெளிச்சத்தைக் காண்பது எப்போது ....!? ==================== தோழி துர்க்கா


Close (X)

வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 87
7

கருவறை நான் கண்டதில்லை கர்ப்பத்தில் அமைதியாய் கிடந்ததுண்டு காணாத முதல் ஆலயம் கருவறையே..! பிறந்ததும் பிரித்ததும் தெரியவில்லை பிதாவும் கரங்களில் ஏந்தினாராம் பிரியத்தால் வாங்கினேன் முதல் முத்தம்..! முறித்த வாழையிலை சுருட்டி முன்வாயில் நான் உருட்டி முழங்கினேன் என் முதல் வாத்தியம்..! ஒருவரின் துணி பிடித்து ஓடுகிறவன் கால் மிதித்து ஓட்டினேன் என் முதல் வாகனம்..! புத்தகத்தின் நடு பக்கத்தில் புது குட்டி போடுமென்று புலம்பிய மயிலிறகே முதல் செல்லபிராணி..! மதிப்பெண் அட்டை கேட்டபோது மறைத்து வைத்த பைநோக்கி இல்லையென்று அப்பாவிடம் முதல் பொய்..! பப்பாளியிலை குழல் ஒடித்து பக்கத்து வீட்டு பையனுடன் இருமுனையில் பேசியது முதல் அலைபேசி..! திருவிழா ராட்டிணத்தில் ஏறி திருதிருன்னு சுற்றி சுற்றி இறங்கியது முதல் விமான பயணம்..! கடற்கரையில் கடல் ஒழிக கைகொண்டு எழுதி காத்துநின்றேன் கடல் அழித்தது முதல் கையெழுத்து..!


வழி : குமரிப்பையன் கருத்துகள் : 0 பார்வை : 78
1

நாகரீகம் என்ற பெயரில் நாசமாகிக் கொண்டிருக்கும் இளம் பெண்கள். கணினி முன்பு அமர்ந்துக்கொண்டு அயல் நாட்டிற்கு வேலை செய்வதை பெருமையாக சொல்லிக்கொள்ளும் படித்தவர்கள். வீட்டையும் கெடுத்து நாட்டையும் கெடுக்க - எந்நேரமும் போதையிலே தள்ளாடும் குடிமகன்கள். டேட்டிங் என்ற கலாச்சாரத்தை காப்பாற்ற போராடும் பேஸ் புக் பிரியர்கள். கைபேசி வாங்கியதும் காதலனை கண்டெடுக்கும் யுவதிகள். காதலன் என்று கண்டவனோடு பழகி கற்பிழந்து பின் தற்கொலை செய்துக் கொள்ளும் கோழைகள். பெண்ணை பெற்றவரை மண்ணை தின்ன வைக்கும் வரதட்சணை. அழிக்க முடியாத சின்னங்களாக அங்கங்கே பிச்சை எடுக்கும் சாலையோர சிறுவர் / சிறுமியர்கள். பணத்திற்காக ஒட்டு போடும் பைத்தியக்காரர்கள். குறைக்கும் நாய்க்கு எலும்பு துண்டாக பணத்தை கொடுத்து பதவி வாங்கும் அரசியல்வாதிகள். காவி உடையை திரையாக்கி கலவி கொள்ளும் கள்ள சாமியார்கள். ஏழைக்கு உதவ மனமின்றி, நிம்மதி தேடி இவர்களிடம் ஏமாறும் பணக்கார மூடர்கள். பேரமாகி போன கல்வி. ஆரோக்கியத்தை அழிக்கும் கலப்பட உணவு. மரங்களை அழித்து மமதையுடன் நிற்கும் அடுக்குமாடி கட்டிடங்கள். ஏர் பிடித்தவனின் ஏழ்மை. IPL போட்டிக்கு கோடிக்கணக்கில் செலவு. அதிகரிக்கும் அநாதை குழந்தைகள். நிரம்பி வழியும் முதியோர் இல்லங்கள். மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் ஈழ தமிழர்கள் விஷயத்தில் அரசாங்கம் கடைபிடிக்கும் அமைதி. நான்கு புறம் கடல் நடுவிலே உலகம் என்பது போல் அவலங்களுக்கு இடையில் சிக்கி தவிக்கிறது சமூகம். இல்லையெனில் இப்படியொரு தலைப்பில் கவிதை எழுத நேரிடுமா? எழுந்திடுவோம் கவிஞர்காள் - நம் எழுத்தால் இவைகளை மாற்றியமைப்போம். \\\"சமூக அவலம்\\\" என்ற சொல்லை அகராதியை விட்டே அகற்றுவோம்.


வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 98
5

கரையில் கொதிக்கும் உலை... கடலில் தகிக்கும் அலை... இடையில் தவிக்கும் நிலை... 0 பன்னாட்டுப் பகாசுர சீமாட்டி நிறுவனங்களின் மினுக்கும் மின்சாரப் பசிக்கு கடலை விழுங்க கரையில் காத்திருக்கும் அணுப் பிழை...0 இன்னும் பதினைந்து நாள் இன்னல்கள் தீரும்... சொல்லும் குடுகுடுப்பைக்காரன் குரலில் குடும்பங்கள் அதிரும்...0 வலை உலர்த்த வழி தேடி... உயிர் உலர்ந்த வலி கோடி... 0 ஒரு கரையில் துப்பாக்கி மூக்கு சிங்கள நாரை... 0 மறுகரையில் கண்மூடி வாய்மூடி மோனத் தவம் இருக்கும் ஒற்றைக் கால் இந்திய கொக்கு... 0 இரண்டும் சேர்ந்து விரித்த கூட்டுச்சதி வலையில் சிக்கித் தவிக்கும் மீன் அவன்...0


வழி : அஹமது அலி கருத்துகள் : 0 பார்வை : 90
3

நல்லதும் கெட்டதும் நடப்பது யாரால்? நேரத்தாலா? எது நல்ல நேரம்? எது கெட்ட நேரம்? நல்ல நேரம் என குறிக்கப்படும் நேரத்தில் நல்லது மட்டும்தான் நடக்கிறதா? நல்ல நேரத்தில் செய்யும் செயல் எல்லாம் நல்ல செயல் என்று சொல்லலாமா? உனக்கு கெட்டது நடக்கும் நேரத்தில் எனக்கு நல்லது நடந்தால் அது என்ன நேரம்? செயலைப் பொருத்து நேரத்தை குறிப்பிடுவதா? நேரத்தைப் பொருத்து செயலை குறிப்பிடுவதா? ஒரு செயல் நடப்பதால் ஒருவருக்கு நன்மை மற்றொருவருக்கு தீமை அப்போது அது யாருக்கு என்ன நேரம்? நல்ல நேரம் என்பது பொதுவாக எல்லோருக்குமா? குறிப்பிட்ட நபருக்கு மட்டுமா? நல்ல நேரத்தில் நடந்த நல்ல காரியம் நன்மையில் மட்டும்தான் முடிகிறதா? எங்கோ திரிந்து கொண்டிருந்தவனை வெற்றியின் முதல்படிக்கு இழுத்து வந்தது 'தோல்வி ஏற்ப்பட்ட நேரம்'. அது நல்ல நேரமா? இல்லை கெட்ட நேரமா? ''நேரம் கிடைப்பதென்பதே நல்லதுதானே'' நல்லநேரத்தில் திட்டமிட்டு செய்யப்படும் தீய செயல் நல்லநேரத்தில் நடந்ததால் நற்செயலா? தீய செயல் என்பதால் கெட்ட நேரமா? சிந்திப்பீர்!!! தனக்கென வரும் பொழுது தடுமாற்றம் வேண்டாம். நல்ல செயலால் நன்மை நடக்கிறதோ தீமை நடக்கின்றதோ நல்ல செயலால் வெற்றி கிடைக்கின்றதோ தோல்வி கிடைக்கின்றதோ அது காலத்தின் வரலாற்றில் 'நற்காலம்' 'பொற்காலம்' ----------------------------------


வழி : susaana கருத்துகள் : 0 பார்வை : 85
3

ஈரைந்து மாதம் சுமந்து வறுமையிலும் செம்மையாய் உனை வளர்த்து ஆளாக்கி துணையாய் இருப்பாயென்று கல்லூரி அனுப்பிவைத்தால் என்ன செய்கின்றாய் நீயங்கு..? பெற்றவரின் கனவுகளை புறம்தள்ளிவிட்டு - உன் ஒளிமயமான எதிர்காலத்தை புதைகுழியிலிட்டு வயதுக்கோளாறில் வலைவீசுகின்றாய் கன்னியர்க்கு ... சீரழிக்கும் சில நண்பரின் உசுப்பேத்தலில் உருமாறிப்போகிறாய் அழகில் சிறந்தவளை குறிவைத்து காதல்வலை வீசுகின்றாய் .... அவள் பணியமறுத்தால் அமிலம்தனை வீசுகிறாய் ..! காதலென்ன பஞ்சுமிட்டாயா அழுது அடம்பிடித்து - நீ வாங்குவதற்கு .... கனியாத இதயத்தை இரக்கமின்றி நீயேன் காயப்படுத்த விரும்புகிறாய் ..! பிடிக்கவில்லையெனில் கௌரவமாய் விலகிவிடு விரும்பாத இதயத்தை தூக்கி எறிந்துவிடு எதற்காக நீ அமிலமதை வீசுகிறாய்..!? உனக்குக் கிடைக்காததை நாசமாக்கிய திருப்தியில் புளகாங்கிதமடைகின்றாய்.. சிதைந்து போனது அவள் முகம் மட்டுமல்ல உன் வாழ்வும் சேர்ந்துதான் ... எல்லோர் கனவையும் தீயில் பொசுக்கிவிட்டு நிமிர்ந்து நடக்கின்றாய் எதுவுமே நடவாததுபோல...! கண்ணீரில் மிதக்கும் பெற்றவரையும் பொருட்படுத்தாமல் ...! உன் வாலிபத் திமிரில் பெண்ணைப் பெற்றவரின் கண்ணீரைப் பார்த்திருக்கமாட்டாய் பார்த்திருந்தால் மனிதனாக மாறியிருப்பாய் உன் மிருக குணம் தொலைத்து ..! -------------------------------------------------------------------- தோழி துர்க்கா


வழி : susaana கருத்துகள் : 0 பார்வை : 87
8

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"புதிதாக இணைந்தவர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே