படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

ஓரை பார்த்து நிச்சயித்து ===கண் இமைக்கா கனவோடு காரைபூசிக் கட்டிய வீட்டில் ===வழிதவறிக் குதித்துத் தாவும் தேரை நுழைய விரட்டிடுவாரதன் ===நீர் பட்டவிடம் மெலியுமென ! நரித்தனமாய் சிந்தித்து திட்டமிட்டு ===காரியத் தடைகள் செய்வோரை தரித்திரமாய் தன்னோடே வைத்திட்டு ===புறப்படத் தயாராவார் எங்கேனும் உரித்தான அவ்வேளை பூனையொன்று ===குறுக்கிட நிற்பார் அபசகுனமென ! வெட்டிக்கதைகள் பேசி குற்றங்கண்டு ===தன் வாயிட்டு மெல்லுகையில் எட்டிபார்க்கும் மூலையிலோர் பல்லி ; ===அதுதன் பயணவழி ஆராய்கையில் சுட்டித்தனமாய் உச்சுக்கொட்ட சகுனமென ===தேடிடுவாரதன் பலனாவது யாதென ! எச்சிலாய் மிஞ்சியதைக் கண்டதும் ===எங்கோ போகும் காக்கையோ உச்சியில் உட்கார்ந்து கரையும் ===தன்நோக்கம் குறிப்பால் உணர்த்த ; மெச்சியதனைக் கண்டு நகைப்பர் ===உறவினர் வரும் அறிகுறியென ! அதிகாலைப் பொழுது அவசரகதி ===அந்நாள் அவசியமோ துரிதபடுத்த குதிகாலும் வலிக்கும்படியே நின்று ===தயாராகி சாலையில் இறங்கினால் விதியென முகம்சுழித்து திரும்பிடுவார் ===என் விரிகூந்தலும் சகுனத்தடையாம் ! ###################### (புலமி)


Close (X)

வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வை : 82
3

மறவன் என்று வாயாற சொல்லிச் சொல்லி - தமிழன் மரம் இணையாய் ஆகி விட்டான், ஐயோ பாவம்! பழம் பெருமை ஒன்றுதானே இவன் சொத்து - இவன் பகுத்தறிவை வெறுக்க பழகிக் கொண்ட வித்து. ஒற்றுமையாய் வாழ நீங்கஓடிவாங்க - என்று உளமாற அழைத்தாலும் உணர நினையான் பித்தராய் மேடையில் பிதற்றுபவனை - உடனே பெருமைப்படுத்த சிரமப்பட்டு உபசரிப்பான். எத்தர்களை பகைத்துக்கொள்ள விழையான் - மேலும் எத்தனைதான் பட்டாலும் ஏற்றமுற நினையான் கத்துவான் கால்பிடிப்பான் கதிஎன்பான் - ஆனால் கணப்பொழுதும் தனை உணர கருதமாட்டான். பிள்ளை, பெண் பெருமைதனைப் பேசமாட்டான் - ஆனால் பிறராயின் புகழ்பாட தயங்க மாட்டான் கல்லுக்கும் கட்டைக்கும் உடல்வறுப்பான் - ஆனால் கணப்பொழுதும் இனஏற்றம் விழையமாட்டான். பிரிந்துவாழும் மனப்பாங்கே இவன் பண்பு - மேலும் பிரிப்பவனைத் துதிப்பாடல் இவன் செய்யும் தொண்டு தான்உயர நேரம்வரின் தயக்கம் காட்டுவான் - ஆனால் தளராமல் உயர்த்திவிட தன்உடலை வளைப்பான். சாக்கடைதான் இவனுடலில் பாய்கின்றதோ!-அல்லது சவத்திலேதான் செந்நீரும் தவிக்கின்றதோ! பகுத்தறிவே! நீ நுழைய வழியில்லையோ! - அல்லது இந்தப் பாழ் இனத்தைக் காப்பாற்ற மனமில்லையோ! - பொன்பரப்பியான்-


வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வை : 87
3

புதிய தலைமுறைப் பெண்கள்! - ஆண் போக்கிரி களுக்குஎ மன்கள்! அழகைக் கண்டு ஆசை கொண்ட காலம் போயாச்சே! - அவள் அறிவைக் கண்டு அச்சம் கொள்ளும் காலம் வந்தாச்சே! வெட்கம் கண்டு விரட்டிச் சென்ற காலம் போயாச்சே! - அவள் வீரம் கண்டு வேர்த்துப் போன காலம் வந்தாச்சே! மௌனம் கண்டு மடக்கப் பார்த்த காலம் போயாச்சே! - அவள் பேச்சைக் கண்டு பிரமிக் கின்ற காலம் வந்தாச்சே! அடக்கம் கண்டு அதட்டப் பார்த்த காலம் போயாச்சே! - அவள் ஆற்றல் கண்டு அதிர்ந்து போன காலம் வந்தாச்சே! பொறுமை கண்டு புண்ணாய்ச் செய்த காலம் போயாச்சே! - அவள் திறமை கண்டு திகைத்து நிற்கும் காலம் வந்தாச்சே! பணிவைக் கண்டு பந்தாய் எற்றும் காலம் போயாச்சே! - அவள் துணிவைக் கண்டு துக்கம் கொள்ளும் காலம் வந்தாச்சே! மென்மை கண்டு மேயப் பார்த்த காலம் போயாச்சே! -அவள் வன்மை கண்டு வாலைச் சுருட்டும் காலம் வந்தாச்சே! என்ன செய்வாள் என்றே மிதித்த காலம் போயாச்சே! - அவள் எதையும் செய்வாள் ஏன்வம் பென்னும் காலம் வந்தாச்சே! பார்த்தாள் சிரித்தாள் படிவாள் என்று பல்லைக் காட்டாதே! - அவள் பார்வை வேறு பாதை வேறு பாழாய்ப் போகாதே!


வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வை : 89
4

பிறந்தோமே நாங்கள் பிறந்தோமே... பிறப்பில் தமிழனாய் பிறந்தோமே...! மறந்தோமே நாங்கள் மறந்தோமே... மனிதனாய் பிறந்ததை மறந்தோமே...! இழந்தோமே நாங்கள் இழந்தோமே.. இருந்தையும் இங்கு இழந்தோமே..! இதயம் என்றொரு சதையில்லையேல்.. இதையாம் நினையா இறப்போமே..! இலங்கையில் தமிழன் ரத்தம் ஓட இரங்காமல் இமைமூடி இருந்தீரே.. எம்மை இரவும் பகலும் வெடிகள் தாக்கி இறந்தும் சரிந்தும் விழுந்தோமே..! தொப்புள் கொடியென உறவுகள் சொல்லி தோரணையோடு சொன்னீரே.. எம்மை தோளோடு தூக்க இனம் கோடி இருந்தும் தோள் துண்டை வீசி போனீரே..! ............................... (பிறந்தோமே...! பத்திரமதிலே பதித்துக் கொடுத்து – இனி பத்திரமெனச் சொல்லி வந்தாய் – அங்கு அமைதிப் படையாக இனத்தை அழித்து அலங்கோலம் ஆக்கி நீ வென்றாய் ! எம்குல பெண்டிரின் கற்பொடு தாலியை எமனாகிப் பறித்தாய் கறையாய் – இப் பாதகம் செய்தோரை பறித்ததும் -எமைப் பாதியில் போட்டாய் குறையாய் ! ................................................(பிறந்தோமே... தளபதி சதியில் கொலைவெறி வலையில் தலைவனை இழந்து தவித்தோம்... எம்மை தரையோடு சுருட்டி அகதியாய் ஆக்கி தமிழ் கரையினில் இறக்கி விட்டோம்..! படைதோற்ற இனமாய் ஏற்றிடவில்லை.. பல தடைபோட்டு சிறகை கட்டி... இங்கு தன்மானம் போக்கி உயிர்மட்டும் தாங்கி தமிழனாய் வாழ்கின்ற வெட்டி..! ...................................................(பிறந்தோமே... சரித்திரம் எழுதும் சரித்திரம் படைத்தவன் சரிந்ததும் சரிந்தது ஈழம்... எம்மை தாலாட்டி வீரத்தில் நீராட்டி ஊட்டிய தலைமகன் இழந்ததே எம்ஈனம்..! சேரன் செங்குட்டுவன் சோழ பாண்டியனும் சேர்ந்து ஆண்ட எம்நாடு... இன்று செந்நாய்கள் கூட்டம் செழுமையாய் தின்று செவி கேட்காமல் ஆடுது பாரு..! ..................................................(பிறந்தோமே... தமிழனின் மண்ணில் சிங்கள நரிகள் தறிகெட்டு ஓடுது பாரு.. எங்கள் தமிழர் கடவுளும் புத்தராய் மாறி தன்மானம் இழக்குது கேளு..! புத்தன் முருகனும் ஏசு அல்லாவும் புறமுதுகை காட்டி ஓடி.. எங்கள் புண்ணிய பூமியில் புகலிடம் தேடி புறப்பட வைத்தார்கள் கூடி..! ......................................................(பிறந்தோமே.. ஈழ கொடி ஒன்று வீசி பறக்காமல் ஈழ தமிழினம் இங்கு ஏது..? நாளை ஈழம் எய்யவே இனியொரு போரில் ஈய்வது எமக்கு பெரும் பாடு..! இந்த இனமானமில்லா இனத்தோடு இனியும் இருப்பதே எமக்கு கேடு..! எம்மை ஈழ கனவோடு வீர மண்ணிலே புதைப்பீர் ஈடில்லை இப்பிறவியின் ஈடு..! .......................................................(பிறந்தோமே...


வழி : அஹமது அலி கருத்துகள் : 0 பார்வை : 91
2

மீண்டுமோர் ரணகளம் காண தூண்டுவார் காண்கிறேன் இங்கே.... நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே ! இனத் துவேசம்... மதத் துவேசம்... சாதித் துவேசம்... நிறத் துவேசம்... இவையெல்லாம் கருப் பொருளாய்க் கொண்டு கவி புனைவோருக்கு கலங்கமாய்த் தெரிகிறதோ கலையின் கோபம்....?????????? பட்டமும் பரிசும், பாராட்டுக் குறிப்பும் மட்டுமே நோக்கம் - அந்த பாவிகள் நெஞ்சம் அறியுமா பாதித்த நெஞ்சின் வீக்கம் ? ஏன்...ஏன்....ஏன்....??? நீ தமிழ்ச் சாதி நான் சிங்களச் சாதி என்று தொடங்கிய பிரிவினைவாதம் எரித்த சுடுகாட்டில் இருந்து ஒருத்தன் கத்தினால் சாதி வேண்டாமென்று... கத்திய சத்தத்தில் சுருதி குறைவு தாளம் பிறழ்வு என்று சத்தமிடும் சாமானியர்களே..... சிந்திக்க தொடங்குங்கள் கொஞ்ச நேரம்... புத்தியில் தட்டும் கத்திய சத்தத்தில் கலந்திருக்கும் ரத்தக் கொதிப்பு.... உறவுக்கு மதிப்பளித்து ஊருக்கு தீ வைக்கும் ஊன மனம் கொண்டவன் நானில்லை.... சாதி எரித்த சடலத்தின் முன்னிருந்து என் கருத்தில் இருக்கும் பிழை என்னவென்று நீதி கேளுங்கள்.... மதி இருந்தால் மதிப்பீர்கள்... மதிக் கெட்டால் மிதிப்பீர்கள்... மதித்தாலும் மிதித்தாலும் மழுங்காது என் புத்தி ! நான் மன்னிப்புக் கேட்டு மண்டியிட வரவில்லை.... வார்த்தை வெட்டிய காயத்திற்கு மருந்து போடத்தான் வந்தேன் ! சிலேடை கவிதைகளும் சில்லறைக் கருத்துக்களும் சொல்லி - என்னைச் சிதறடிக்க நினைக்கும் அற்பக் கவிஞர்களே..... சிந்தித்துப் பார்த்தால் சில பல ரணத் துளிகள் கன்னத்தை நனைக்கும் ! கலையின் கோபத்தில் கலந்திருந்த விடத்தின் முகவரி புரியும் ! இவன் அடங்கிப் போனது அறியாமையினாலா ? இவனை அடக்க நினைப்பது அறியாமையினாலா ? ஆற்றாமையின் முகவரி அறியாத பெரியோரே..... இளகிய மனம் எனக்குண்டு இலக்கியச் சுவையும் எனக்குண்டு ! இளையவன் எனது இறுகிய மனதின் கருகிய வாடை ஏனென்று... ஊனக் கண்கொண்டுப் பார்த்தால் தெரியாது... ஞானக்கண் கொண்டுப் பாருங்கள் பிழைக்காது ! மீண்டுமோர் ரணகளம் வேண்டுமா? வாருங்கள்........ ஆயிரம் காரணம் ஆயிரம் உதாரணம் சொல்லி விளக்குவேன்.... சோடைப் போகாமல் பாடைக்கட்டும் சாதி ஏன் வேண்டாமென்று தரமற்ற வார்த்தைகள் சரமாக வந்த சங்கதி என்னவென்று...! ------------------------------ கே.எஸ்.கலை


வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வை : 78
2

புதுயுகம் தேடும் பெண்ணே நீ புதர்களில் விழவேண்டாம் ஏன் பெண்ணாய் பிறந்தோமென்று நீ கவலைப்பட வேண்டாம் கடவுள் கொடுத்த பாக்கியம் பெண்ணே கருவறை தானடி கருவை சுமக்கும் பெண்ணே நீ கடவுள் தானடி விழிகளில் வழிந்திடும் கண்ணீர் வலிகளின் அடையாளம் முயற்சிகளில்லா வாழ்க்கை முற்றிலும் அவமானம் வளையல் அணியும் கைகள் வானை எட்டிப் பிடிக்கிறதே கொலுசை அணியும் கால்கள் விண்ணில் நடக்க துடிக்கிறதே பட்டம் பெற்ற பெண்ணே சிறு வட்டம் அல்ல உலகம் சோம்பலை தூக்கி எறிந்தால் உன் சோதனை காலம் விலகும் அடுப்படி மட்டும் உலகல்ல அகிலமும் உந்தன் பெயர் சொல்ல எதிர்வரும் தடையை எதிர்கொள்ள எழுந்து வா நீ வெல்ல.


வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வை : 83
4

*******************பொய்*************** செய்யாத ஒன்றை செய்ததாய் சொல்லி பொய்யாக பேசுதல் பெருமையோ - மெய்யாக வீரம் யாதெனில் வாய்மையே ஆதலால் தீரம் வேண்டும் நெஞ்சத்து! *******************புறம்****************** இறந்த சகோதரனின் இறைச்சியை உண்பதை மறந்தும் விரும்புமோ மனம் - புறமும் புன்சொல்லும் கொடும் புன்மதியே வாழ்வின் இன்பம் அகற்றும் இவை! ********************சாபம்**************** பொறுமையை இழந்து பொங்கும் கோபத்தால் சிறுமைபுத்தியால் சிதறும் சாபத்தால் - அருமை வாழ்வது அழிவில் வாடுமே பொருந்தாசாபம் தாழ்வில் செலுத்தும் உனை! ********************அவதூறு************ கண்ணாலே காணாததை கண்டதாய் கதைகட்டி புண்படும் வார்த்தைகள் பேசாதே - தன்னாலே அனுமானித்து பேசுதல் அவதூறே தவிர்ப்போம் கணித்தலை பிறர்நலம் நாடி! ............................................................................................


வழி : அஹமது அலி கருத்துகள் : 0 பார்வை : 69
0

சாதிகளால் தூசுபடிந்த சமூகத்தை சமத்துவ தூரிகை கொண்டு மாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர்களே..! சாதி பெயர் சொல்லி உமிழ்ந்தவனை தண்டனைக் கயிறால் பிணைத்து புரட்சியை விதைத்தவர்கள் அவர்களே ...! முப்படையை வீரமுடன் உருவாக்கி முப்பது வருடமாய் கண்ணியமாய் போரை வழிநடத்தியவர் அவர்களே ..........! நள்ளிரவிலும் காமுகர் பயமின்றி மண்ணின் மங்கையர் நடமாட வழிவகை செய்ததும் வீரரவர்களே ...........! பிறந்த மழலையர்க்கு தனித்தமிழில் அழகாய் பெயர் சூடி, அன்னை மொழியை உயிராய் நேசித்த எம்மவர் அவர்களே.... ..! விரோதிகளுடன் கூட்டுச் சேர்ந்து நடந்துவந்த பாதை மறந்த துரோகியரை களையெடுத்து நேராக்கியவர் அவர்களே...! உள் மனதில் துவேசம் கொண்டு பழங்கதை பேசி அரசியல் நடத்தும் உங்களை நம்பி ஏமாந்ததும் அவர்களே ......! தமக்கென பத்திரிகை, வானொலி வைத்து உண்மையை உடனுக்குடன் ஊருக்குரைத்து விடுதலைக்காய் போராடியவர் அவர்களே..! இன்று அவர்கள் இருந்திருந்தால் ஈழத்துடன் ஈழத்தவர் எமக்கென ஒரு `தமிழ்த்` தளமும் வளர்ச்சியின் உச்சமாய் திறந்திருப்பார் ........! `அகதி` என்றவனின் செவிடு பறக்க ஓங்கி ஒரு அறை விட்டிருப்பார்...... எல்லாமிழந்து நிர்க்கதியாய் நிற்கின்றோம்...! அரசியல் சூத்திரவாதியின் வழிகாட்டலில் ஏவி விட்ட செல்லப்பிராணிகள் இரக்கமின்றி எமை குதறிக்கொண்டிருக்க, விடியலைத் தொலைத்துவிட்டு அவர்களை எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.! ஓ..ஆண்டவனே...எனக்கொரு சக்தி கிடைத்தால் மாண்ட சரித்திர நாயகர் அவர்களை மீண்டும் உயிராக்கி மண்ணாவேன் நான் ........!!!!


வழி : Neppolian கருத்துகள் : 0 பார்வை : 75
2

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே