படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

புகையும் உள்ளத்தில் பகை கொண்டலையும் சுயநலப் பேய் பிடித்த தமிழா நீ தமிழா...........! பற்றுள்ள வாழ்வில் பதவி ஆசையுடன் பல்லக்கில் பவனிவரும் தமிழா நீ தமிழா.............! நீதியைப் புதைத்துவிட்டு காவலனே துகிலுரிகின்றான் கூடப் பணிபுரியும் பெண்ணை தமிழா நீ தமிழா .............! மண்பற்று உள்ளவன் விண்ணாளச் சென்றுவிட பெண் பித்தனெல்லாம் மண்ணாள்கின்றான்.......! சாவைக் கண்டஞ்சாது வீரமரணத்தை தேடிச்சென்ற மறவரின் தியாகத்தை மனம்கொள்வாய் தமிழா.! ஒரே மொழி பேசும் உன்னிடத்திலேயே ஆயிரம் வேற்றுமைகள் எண்ணற்ற துவேசங்கள்....! வேறு மொழி பேசும் இனவாத சிங்களவன் எப்படிப் புரிந்துகொள்வான் உண்மை நிலையை தமிழா.! சிங்களவனெல்லாம் கெட்டவனுமல்ல தமிழனெல்லாம் நல்லவனுமல்ல ....... நல்லெண்ணத்தை விதைத்தால் புரிந்துகொள்வாய் உண்மையை தமிழா.!!! ====================================== தோழி துர்க்கா


Close (X)

வழி : susaana கருத்துகள் : 0 பார்வை : 40
3

போர் ஓய்ந்து போனாலும் திறந்தவெளிச் சிறைச்சாலை பண்பட்ட யாழ்ப்பாணத்தில் கனத்த சப்பாத்துக்களின் சத்தமின்னும் குறையலையே.... மீசை அரும்பா பதின்ம வயதில் பச்சை சீருடை தரித்த புஞ்சி பண்டாவுடன் கைகோர்த்து வருகின்றான் பக்கத்துவீட்டு மகேஷ்குமார்...... பள்ளி செல்லும் வயதில் வீட்டின் வறுமை களைய கட்டாய ஆட்சேர்ப்பில் ஆயுதம் தூக்கினானோ சிங்களத்தின் புஞ்சி பண்டா....... வாரத்தில் ஒரு தடவை `ஆதரவாளன்` பட்டியல் கொடுக்க காவலரண் பக்கம் தலை நீட்டி கைக்கூலி பெற்று - இனத்தின் கோடரிக்காம்பாய் கதிரவன் ......... தேசம் எரிந்துவிட்டது அழிவுகளைப் பார்த்து இதயமும் நொறுங்கிவிட்டது குரல்வளை தொட்ட துப்பாக்கி முனை பார்த்து நாவும் வரண்டுவிட்டது........... அரைகுறை சிங்களத்தில் ஏதேதோ பேசியபடி புஞ்சி பண்டாவின் தோளில் உரிமையாக கைபோட்டபடி கம்பீரமாய் வருகின்றான் இனத்தவனே கொள்ளி வைக்க..... அவனின் காது வெடிக்க அடிக்கவேண்டும்போலிருக்கிறது வாங்கும் காசுக்கு வாலாட்டும் அவனை வெறித்துப் பார்க்கின்றேன் சாளரங்களின் ஊடே ................ தூரத்தே ரோந்துப் பணியில் சீருடைகள்..!! ///////////////////////////////////////////////////////////////////////////// தோழி துர்க்கா


வழி : kalai Barathi கருத்துகள் : 0 பார்வை : 37
4

பனிபடர் பூமியில் நனிகுளிர பயிர்களும் பாங்குற செழிப்புற உழவனின் மனமும் களிப்புற அகமகிழ்ந்து வரவேற்கின்றேன் இனிய தமிழ்த் தைப்பொங்கலை... குறைவின்றி வளம் நிறைந்திருக்க, கொடும் இனவாதப் பகைகொண்ட யுத்தம் என்னும் அரக்கனால் நிம்மதி தன்னை இழந்தே சிதறுண்டு போனோம் பாரெங்கும்... பதவியும், அதிகார வெறியும் பாழ்பட்ட மனதை ஆக்கிரமிக்க, ஊடறுத்த குள்ளநரிக் கூட்டத்தால் துண்டு துண்டாகிப் போனோம் தரணியில் ஒன்றுபட மறந்து ............ வறுமையிலும் செம்மையாய் அழகாய் சர்க்கரைப் பொங்கலிட்டு முக்கனியும் பாங்குறவே படைத்து பண்பாட்டைப் போற்றுகின்றோம் கதிரவனுக்கு நன்றி செலுத்தி ........... உதிரத்தில் கலந்த தமிழுணர்வுடனே அன்பெனும் மந்திரத்தால் ஒற்றுமை என்றும் தழைத்திட ஒன்றுபடு தமிழினமே ஒன்றுபடு தேசம் வென்றிடவே பாடுபடு .....!!! ==================================== தோழி துர்க்கா


வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வை : 52
5

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"புதிதாக இணைந்தவர்

மேலே