படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதற்கு போதிய அவகாசம் தேவைப்படுவதால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளே 2013 வருடத்துக்கும் செல்லும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் அந்தந்த கடைகளில் சென்று கார்டை கொடுத்து 2013ம் ஆண்டுக்கான இணைப்புத்தாளை பொருத்தி, கடையில் கையொப்பம் மற்றும் ‘சீல்’ பெற வேண்டும். அப்போதுதான் கார்டுகள் செல்லுபடியாகும் என்று அரசு அறிவித்தது. புதுப்பித்தலுக்கு முதலில் ஜனவரி 31, 2013 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அந்த கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது மார்ச் 31, 2013 வரை புதுப்பித்துக் கொள்ளலாம். பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், சிவில் சப்ளைஸ் துறை சார்பில் http://www.consumer.tn.gov.in/ என்ற பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் ‘கார்டு புதுப்பித்தல் 2013’ என்ற பகுதிக்கு சென்று ரேஷன் கார்டின் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு அட்டையின் நிறம், குடும்பத்தில் சேர்க்கப்பட வேண்டியவர், நீக்கப்பட வேண்டியவர், சிலிண்டர்கள் விவரம் போன்ற தகவல்களோடு, தொலைபேசி எண் போன்ற விவரங்களையும் இணைய தளத்தில் பூர்த்தி பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின்னர், ‘கமெண்ட்ஸ் என்ன?’ என்ற கேள்வி வரும். விருப்பம் இருந்தால் கமெண்ட்ஸ் எழுதலால். இல்லாவிட்டால், ‘இல்லை’ என்று எழுதி, ‘சப்மிட்’ செய்தால் சில நொடிகளிலேயே நமது ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு, துணை ஆணையர் கையெழுத்துடன் இணையதளத்தில் ரசீது வருகிறது. இந்த ரசீதை கார்டின் பின்பக்கத்தில் ஒட்டிக் கொள்ள வேண்டும். அவரவர் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைக்கு சென்று, ஆன்லைன் பதிவு விவரங்களை எடுத்துச் சொல்லி, கார்டில் கையெழுத்து மற்றும் சீல் பெற்றுக் கொள்ள வேண்டும். வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை காரணமாக பலர் தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ள நேரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முறை மூலம் ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு ரசீதும் கிடைத்துவிடுவதால் மக்கள் இந்த முறையை பெரிதும் வரவேற்கின்றனர்.


Close (X)

வழி : Delsey Prabhu கருத்துகள் : 0 பார்வை : 70
3

ஜீலை 2013 – 2014-ஆம் ஆண்டிற்கான, திரைப்பாடல் இயற்றுநர் - தினசரி மற்றும் வாரயிறுதி வகுப்பில் இணைய விருப்பம் கொண்டவர்கள்.. diplyric.piriyan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் புகைப்படத்துடன் கூடிய முழு சுயவிவரங்கள் (Bio-data) மற்றும் கவிதை, பாடல், பத்திரிக்கைப் படைப்பு என, முன் படைத்த ஏதாவது ஒரு பதிவை இணைத்து அனுப்பித் தகவலறிந்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.. தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் எழுபது நபர்களுக்கு சேர்க்கைக்கான தகவல் தரப்படும். மேலதிகத் தகவல்கள் தேவைப்படின், பிரத்தியேக அலைபேசி எண்கள் 8056161139-இல் தொடர்பு கொள்ளுங்கள். வாழ்த்துகள்.. வகுப்பு : திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (தினசரி மற்றும் வாரயிறுதி வகுப்புகள்) குறைந்தபட்சக் கல்வித்தகுதி - பன்னிரெண்டாம் வகுப்பு ( any group) சிறப்புத் தகுதி - தமிழ்ப் பாடத்தில் குறைந்தபட்சம் 55 சதவிகிதம். மேலும் விவரங்களுக்கு.. பாடலாசிரியர் பிரியன் (ஒருங்கிணைப்பாளர்) - 8056161139, மின்னஞ்சல் - diplyric.piriyan@gmail.com


வழி : செ.பா.சிவராசன் கருத்துகள் : 0 பார்வை : 63
0

சூடா “டீ” (Tea) குடிப்பதால் வயிற்றில் “கேன்சர்” (Cancer) வரும் அபாயம் உள்ளது என்று இந்திய நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வின் முடிவில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்: வாய் முதல் இரப்பை வரை உள்ள குழாய் மிக மிக மிருதுவானது. குறிப்பிட்ட அளவில்தான் அக்குழாய் சூட்டைத் தாங்கும். அதிக சூடாகசூடா “டீ” (Tea) குடிப்பதால் வயிற்றில் “கேன்சர்” (Cancer) வரும் அபாயம் உள்ளது என்று இந்திய நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வின் முடிவில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்: வாய் முதல் இரப்பை வரை உள்ள குழாய் மிக மிக மிருதுவானது. குறிப்பிட்ட அளவில்தான் அக்குழாய் சூட்டைத் தாங்கும். அதிக சூடாக..


வழி : vickramhx கருத்துகள் : 1 பார்வை : 76
3

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே