தீப்பிடிக்கும் இரவுகள்! பனி இரவுகள் பிரம்மச்சரியத்தில் அத்தனைக் குளிரே - இந்த இரவுகள் இப்படி தீப்பிடிப்பது எப்படி ? பனி பெய்யும் இரவுகளில் ஆர்வமாய்ப் - பணி செய்யும் பறவைகளாய் நாம் மாற- இரவுக்கும் தூக்கத்திற்கும் என்னடா சம்பந்தம் என நம் தூக்கம் நமை கேட்க- நாணம் சென்றது வானம் தூரம் ! காரிருள் கண்மூடி கருப்புச் சுவராய் மாற தூரிகையாகும் காயங்கள் வரைவது எத்தனை மாயங்கள் ? இரவை உறங்க வைக்கத் தடுமாறும் காலிடையே தாலாட்டும் கொலுசொலி... நரம்புகள் புடைக்கவும் வரம்புகள் உடைக்கவும் கற்றுக்கொண்டது எப்படி ? ஏகாந்த இரவுகளில் ஒவ்வா முனைக் காந்தங்கள், ஓட்டுவதும் பிரிவதும் கச்சிதமாய் நடக்குமென கண்டுப் பிடித்தபோது - கலைஞானி கூட விஞ்ஞானி ஆகிவிட்டான் ! இதயத்துள் ஒவ்வொரு நொடியும் - பகலெல்லாம் எப்போது மடியும் ? இரவுகள் எப்போது விடியும் - என்ற வினாக்கள் எழுவது சகஜம் காரணம் யாதெனில் – இது கனாக்கள் நனவாகும் தருணம் !


வழி : KS.Kalai கருத்துகள் : 0 பார்வைகள் : 140
0
Close (X)
புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே