வார்த்தைச் சிறகுகள் முளைத்து வழி தேடி அலைகிற.. பாடல் படைத்துப் பறக்கக் கற்றுக் கொள்ள பாதை நாடி வருகிற ஒவ்வொருவருக்கும்.. பிரத்தியேகமாய்.. பிரகாசமாய்.. திறந்திருக்கிறது ஒரு புத்தம்புது வானம்.. தேடித்தேடியும் கிடைத்திராதொரு புது அறிவும்.. இதற்கு முன் இல்லா அரிய வாய்ப்பும்.. மனம் நிறையும் பெரும் அங்கீகாரமும்.. எழுத்துப்பசி கொண்ட.. படைப்புத்தீ கொண்ட.. உங்களுக்குக் காத்திருக்கிறது.. ஒரு பாடல் உங்கள் வாழ்வை மாற்றலாம்.. ஒரு பாடல் உங்களை உயரே ஏற்றலாம்.. ஒரு பாடல் உங்கள் புகழாய் மாறலாம்.. ஒரு பாடல் உங்களை வரலாறாக்கலாம்.. ஒட்டுமொத்த உலகின் அத்தனைக்கோடித் தமிழ்த்திரை ரசிகர்களும் ரசிக்கும் ஆயிரக்கணக்கானப் பாடல்களைப் படைப்பது.. திரைத்துறையின் இருபதுக்கும் குறைவான பாடலாசிரியர்களே. காரணம் அவர்களுக்கு மட்டுமே வசப்பட்ட படைப்புச் சூட்சுமம். ஒரு சிலருக்கே சாத்தியப்பட்ட அந்த வித்தை, ஆர்வமும் அடிப்படைத் தகுதியும் உள்ள அனைவருக்கும் கைக்கூடும் எனில்.. அதுவும் எவரால் பாடல் இயற்றப்படுகிறதோ அந்த முன்னணிப் பாடலாசிரியர்களே அதைக் கற்றுத்தர முன்வந்தால்.. பாடலாசிரியர் பிரியன் தலைமையில்.. முயற்சியில்.. ஒருங்கிணைப்பில் , உலக வரலாற்றில் முதல்முறையாக.. தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing). உள்ளுக்குள் உயிர்த்திருக்கும் சொந்த வார்த்தைகளைச் சந்த மெட்டுகளுக்குள் ஊற்றி, உலகறிய மேடையேற்ற விரும்பும் ஒவ்வொருவருக்குமான சரியான களம். இதுவரை எளிதில் அறிந்துகொள்ள இயலாதிருந்த பாடல் இயற்றும் அறிவு. ஒரு முழுமையான பாடல் இயற்றுநராய் மிளிரத் தக்க பல வாய்ப்பு. நேரடியாக பாடலாசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அனுபவம். திரைப்பாடல் இயற்றுநர் படிப்புக்கான அங்கீகாரம். இவை அனைத்தும் இதில் வசம். மொழியறிவு, கவியறிவு, பாட்டறிவு, இசையறிவு, படைப்பறிவு, ஆய்வறிவு எனப் பல்லறிவு வளர்த்து.. பாடல் படைப்பு, பாடல் பதிவு எனச் செயலறிவு செழித்து.. திரைத்துறை, சின்னத்திரை, ஆன்மீகப் பாடல்கள், விளம்பரக் குறும்பாடல்கள், ஆல்பங்கள் எனப் பாடல் நுழையும் அனைத்துத் துறையறிவும் அறிந்து.. இறுதியில் திறன்மிக்க முழுமையான பாடல் இயற்றுநராய் இச்சகத்தில் படைப்பெய்த இதுவே பாதை.. சென்ற வருடம் பெறப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்தைந்து மாணவர்களில், ஏழுக்கும் மேலானவர்களுக்கு.. திரைத்துறையில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்து.. தற்பொழுது திரைப்படங்களில் பாடல்கள் எழுதி உள்ளனர். மேலும், தமிழ்த் திரைத்துறையில் இருந்து இதுவரை ஆறுக்கும் மேற்பட்டத் திரைப்படங்கள் தங்கள் படங்களுக்குப் பாட்டெழுத தமிழ்த் திரைப்பாக்கூடம் வந்துள்ளன. முன்னணிப் பாடலாசிரியர்களிடம் இருந்து நேரடியாகப் பாடல் எழுதக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு பெற்ற இவ்வகுப்பிற்கு.. இதுவரை இசையமைப்பாளர் விஜய்ஆண்டனி, இசையமைப்பாளர் தமிழ்ப்படம் கண்ணன் போன்ற பல இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், பாடகர்கள், திரைத்துறை பிரபலங்கள் நேரில் வந்து பாட்டெழுதுதல் குறித்தத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு, தமது அடுத்தடுத்தத் திரைப்படங்களில் பாடல்கள் எழுத மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார்கள். சிறந்த அடுத்தத் தலைமுறைப் பாடலாசிரியர்களை உருவாக்க வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தோடு தொடங்கப்பட்ட தமிழ்த் திரைப்பாக்கூடத்தில் இணைய விருப்பம் கொண்ட.. அடிப்படைத் தமிழறிவும், அடிப்படைக் கவியறிவும் உள்ளவர்கள் சுயவிவரக்குறிப்போடு (Bio-data) தங்களது கவிதை அல்லது பாடல் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் - diplyric@gmail.com குறிப்புகள் : படிப்பு : திரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பு (Diploma in Lyric Writing) காலம் : ஒரு வருடப் பட்டயப் படிப்பு (One-Year Diploma) இடம் : சென்னை வகுப்புகள் : சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் குறைந்தபட்சக் கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு சிறப்புத் தகுதி : கவிதை அல்லது பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருத்தல் வயது வரம்பு : இல்லை தொடர்பிற்கு : 9566196747 , 8056161139 மின்னஞ்சல் : diplyric@gmail.com


வழி : செ.பா.சிவராசன் கருத்துகள் : 0 பார்வைகள் : 126
0
Close (X)
புதிதாக இணைந்தவர்

மேலே