இரமேசு- கருத்துகள்
இரமேசு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- யாதுமறியான் [30]
- Dr.V.K.Kanniappan [26]
- கவின் சாரலன் [25]
- மலர்91 [23]
- ஜீவன் [14]
இரமேசு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
வணக்கம் தோழர்.
நல்ல படைப்பு. தொடக்கத்திலிருந்த செறிவு சிறப்பு. உட்செல்கையில் தொய்வு. சில வடமொழிச் சொற்களும் பாவின் வலு குறைக்கக் காரணியம். படைப்புகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
நன்று. மழைத்தோழி மகிழ்வுத் தோழி
வணக்கம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாவலர்களுக்கு வாழ்த்துக்கள்.
பங்கேற்ற பாவலர்களுக்கும் வாழ்த்துக்கள். படைப்புகள் இன்னும் மேம்பட முயற்சி மேற்கொள்வோம்.
நன்றி
வணக்கம்
திருவிழாக் குழுவினரின் சொற்றொடர்களில் செதுக்கப்பட்ட செம்மை.
இந்தப் பாப்போட்டியில் பழகுநர்கள் நிறைய.
அவர்களை ஆற்றுப் படுத்தவும் தொடர்ந்து ஊக்கப்படுத்தவுமான சொல்லாடல்கள் இவை எனில் அது மிகையன்று.
உணர்வாளர்களாய் ஒன்றிணைவோம்...
ஒன்றுகூடித் தமிழ் வளர்ப்போம்...
நன்றி.
நன்றி தோழர்
நல்லதொரு படைப்பு. வாழ்த்துக்கள்...
நன்றி தோழர்.
மெய்ப்படும் தோழர்.
நன்றி
மிக்க நன்றி தோழர்.
மொழிப்பால் குடித்த
முனைப்பால் உம் போன்ற
தோழர்களின் இணைப்பால்...
நல்ல படைப்பு தோழர். வாழ்த்துக்கள்...
நன்றி
பாவிற்கான பாராட்டுக்கும்
தங்கள வாழ்த்திற்கும் எனது நெஞ்சம் கனிந்த நன்றி...
தங்கள் வாழ்த்துக்களால் வளர்கிறேன். நன்றி தோழர்
தங்கள் ஊக்குவித்தலுக்கு எனது நன்றி
புலம்பெயர விரும்பாத புது நாடு (பொங்கல் கவிதை போட்டி )
வரிகளில் அடங்குவனவோ
வாழ்வியல் இழந்த தமிழனின் வலிகள்
புரட்டுப் புராணங்களிலும் ஆங்கில விருப்பிலும்
அமிழ்ந்து நிறமிழந்தது அமிழ்தினம்
மெய் நிறமெடுத்து ஓவியம் தீட்ட
இறையாண்மை எதிரியாகிறேன்
மரபணு மாற்ற விதைகள், எரிகுழாய் பதிப்பு
காற்றுறிஞ்சும் திட்டம், அணுக்கரு உலை என
ஆய்வுக்கூட எலியாய் ஆனது நம்மினம்
முழுதும் அழித்தார்கள் முற்றம் இடித்தார்கள்
தொல்பொருள் ஆய்வைத் தடுத்தார்கள்
ஓங்கியழ உரிமையில்லை என்றார்கள்
முக்கல் முனகல் வெளிப்பட்டபோதும்
முதுகெலும்பு முறித்தார்கள்
நாடுகளாய், மாநிலங்களாய் இன்ன பிறவாய்
பிளவுபட்ட எம் பேரினமே ஒற்றுமையோடு எழுந்துவா
நமக்காய்க் காத்திருக்கிறது
மூலிகைகள் முலாம் பூசியிருக்கும் காற்று
கழிவுகளில்லா ஆறு, திறவுகோலில்லா வீடு
மதுவில்லாத குடி, வல்லுறவில்லா வாழ்வியல்
இவை யாவும் நிறைந்த
புலம்பெயரத் தேவையில்லா புது நாடு
தமிழனுக்கென்று தனிநாடு
--------------------------------------------------------------- ச.க.இரமேசு