பாமரன் பாபரத்- கருத்துகள்

உங்கள் கேளிவியிலே பதில் உள்ளது "நட்பே" சிநேகம்...

சங்கரன் நண்பா நீங்கள் கேட்கும் பதில் என் இந்த படைப்பை படித்தல் கிடைக்குமோ என்னவோ..!

படிக்காத பன்றிகளும், படித்த பாமரனும்...!!!!!!!!!

பசித்தவரெல்லாம் ருசித்திருக்க
பாவம் என் பாமரன்
பசியில்நிற்கிறான்
ஒரு ஓரமாய்...!

பணம் படைத்தவன்
"ஒன் மோர்” என்று கேட்டதால்.

இவனுக்கும் சேர்த்து
அவன் தின்கிறான்..!

அவனுக்கும் சேர்த்து
இவன் உழைக்கிறான்...!

இவன் உழைப்பிற்கும் சேர்த்து
அவன் சம்பாதிக்கிறான்...!

அவனுக்கும் சேர்த்து
இவன் வரி செலுத்துகிறான்...!

வந்த சலுகைகளை
பாதிய கொடுத்தாக்கூட
பரவாயில்ல பாவி

முடிஞ்சவரை முடிஞ்சுக்கரா
முடியாதவங்கர போர்வையில...!

காரணம்.......??

கூட்டமாகவும்,சத்தமாகவும்
சொன்னாத்த எதுவும் சாத்தியமாகும்...!

இது படிக்காத பன்றிகளுக்கு
தெரிஞ்சிருக்கு...!

அங்கங்க கூட்டம் போட்டு
அவசியமில்லாதத கத்தி கத்தி
சட்டத்த சாதகமா மாத்திகரானுங்க..!

படிக்காத பாட்டளிக்கு தெரியல
படிச்ச பட்டதாரிக்கு தெரியல
பண்ணி கத்தறத பாவமா
பலர் வேடிக்கை பார்க்கிறார்கள்..!

சிலர் வேடிக்கையாக பார்க்கிறார்கள்...!
பாமரன்..பா.பரத்

மாறும் நிலை சிக்கிரம் வரும் நண்பா..

தோழருக்கு என் நன்றிகள்..!

இந்த படைப்பு ஒரு ஆண்டுக்கு முன்மு நான் எழுதியது..!

இந்த தீபாவளி நான் பெற்றெடுக்காத 30 குழந்தைகளுடன் கொண்டாட இருகிறேன்..!

நேற்றைய சொல் இன்றைய செயலாக மாறியிருக்கிறது..!

எனக்கு இந்த எழுத்து தலத்தில் குறைவான நண்பர்களே உள்ளனர்
அதனால் படைப்பின் பார்வை குறைந்தே உள்ளது ..!

நேரம் இருந்தால் நான் எழுதிய மற்ற சமுதாயம் பற்றிய படைப்புகளை காணவும் முடிந்தால் பகிருங்கள்..!

இதோ என் பதில்...!

தீபாவளி வரவில்லை
உயர்ந்துவிட்டது காய்கறியின் மதிப்பு
காகிதத்தின் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது...!

உயர்ந்தது தங்கத்தின் மதிப்பு
அதன் தாகமும் சேர்ந்துயர்ந்தது...!

உயர்ந்தது வாகனங்களின் மதிப்பு
வாங்குபவர்களின் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது...!

உயர்ந்தது உணவுகளின் மதிப்பு
உண்பவர்கள் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது...!

உயர்ந்தது ஆடைகளின் மதிப்பு
கடைகளின் எண்ணிக்கையும் சேர்ந்துயர்ந்தது...!

உயர்ந்தது வாடகையின் மதிப்பு
வசிப்பவர் எண்ணிக்கையும் சேர்ந்துயர்ந்தது...!

இப்படி
உயர்ந்தமனிதர்கள்
ஏணியில் ஏறி
உயர்ந்துகொண்டே
செல்கிறார்கள்...!

ஆனால்,
அவர்கள்
ஏறிச்சென்ற
ஏணியில்
படிகட்டுகளாகிருந்த
பாட்டாளியை
மறந்துவிட்டார்களா ????
அல்ல
மறந்தது போலும்
நடிக்கிறார்களா????
தெரியவில்லை....!

யார்
எவரை
மறந்தாலும்
காலம் தம்
கடமையைச்செய்ய
தவறியதில்லை....!


பலகாரக்கடையில் கூட்டம்
பட்டாசு கடையில் கூட்டம்
துணிக்கடையில் கூட்டம்
திரையரங்குகளில் கூட்டம் ..!
நகை கடைகளில்கூட கூட்டம் .....!

ஆம் தீபாவளி வந்துவிட்டது....!

ஆனால் ஏனோ எனக்கு மட்டும்
இன்னும் தீபாவளி வரவில்லை....!

நான் தான் காலையில்
நீங்கள் போடும் குப்பையை சுத்தம்செய்பவன்...!

நான் தான் உங்கள் வீட்டில்
தினசரி நாளிதழ் அளிப்பவன்..!

நான் தான் நீங்கள்
அணிந்திருக்கும் ஆடையை நெய்தவன்...!

நான் தான் நீங்கள் போகும்
திரையரங்குகளில் சீட்டு கிழிப்பவன்..!

நான் தான் நீங்கள் உண்டுகளித்த
எச்சத்தை எடுத்துச்செல்பவன் ....!

நான் தான் நீங்கள் உறங்குவதற்கு
உறங்காமல் நான் உங்கள்வீட்டின் முன்...!

என்னை பற்றி பேச ஆரம்பித்தால்
நிச்சயம் நேரம் பத்தாது...!

இது பெருமை அல்ல
"வறுமை"

யாரேனும் ஒருவருக்காவது புரியுமோ என்ற சந்தேகத்தில் தான் எழுதினேன்
நீங்கள் அனைவரும் ஒவ்வொரு வரியையும் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி..!
மகிழ்ச்சி ராஜ் குமார்...!

உங்கள் யூகம் பலித்தால் இந்த கருது இன்னு பலர்பார்வைக்கு செல்லும்...! நன்றி சோதரி ...!

நன்றி பழனிக்குமார் அவர்களே..!

நன்று..!

தனிமையின் சுகம் தெரிந்த நண்பன்...!

மாற்றிவிட்டேன்..!
நன்றி தோழரே...!

ஆம்..! இது ரஜினியை குறிக்கும் பதிவல்ல..!

அவர் அவர் வேலையே செய்கிறார்..! படம் பிடித்திருந்தால் நன்று என்று கூறலாம்...!

இவர்களோ..! அவர் ஒரு தியாகிஎன நினைகிரார்களோ என்னவோ...!
தெருவெல்லாம்...! இரண்டாம் பென்னி கூக் என்று சுவர்பலகை...!

தன் மனைவியின் சொந்த நகை விற்று அணை கட்டியவ்னைபற்றி,
சென்ற மாதம் வரை யாரும் பேசிக்கேட்டதில்லை ...!(அரசியல் வாதிகல் தவிர)


இன்றோ வருபவர் போவரர்களும்...! ரஜினியை பற்றி பேசி கொண்டிருக்கிறார்கள்..!

இந்த நாட்டில் சாதனை செய்தாலும் நடிகர்கள் வாயிலாக சொன்னால்தான் ஏற்றுக்கொள்வார்கள???????


பாமரன் பாபரத் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே