ரதி தேவி.R- கருத்துகள்

பொன்னையும் பொற்கிழியையும் புலவர்கள் மறந்ததாக சரித்திரமே இல்லை--சங்கரன் ஐயா

தயவு செய்து இன்னொரு முறை இந்த வாசகத்தைப் பயன்படுத்தாதீர்கள். பொன்னுக்கும் பொருளுக்கும் புலவன் எழுதுவது கிடையாது. அவை அவனது நினைவிலும் நிற்பவை இல்லை. அப்படி பொன்னையும் பொற்கிழியையும் புலவன் நினைத்திருந்தால் கால காலமாக கவிஞன் தரித்திரத்தில் செத்துக் கொண்டிருக்கமாட்டான்.

இது கவிதையே அல்ல. கவிதை முற்று பெறவும் இல்லை. கற்பிழந்த காதல் பற்றி ஒரு வரியும் எழுதாமல் எதற்காக தலைப்பை மட்டும் அப்படி வைத்தீர்கள்?====ரதிதேவி

கா.வேழவேந்தன் கவிதைகளை யானும் படித்துள்ளேன். இதுபோன்ற நற்கவிதைகளை அனைவரும் படிப்பதற்கு ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுத்த உங்கள் நல்ல உள்ளத்திற்கும் தமிழ்த் தொண்டிற்கும் தலைவணங்குகிறேன். தொடருங்கள்!====ரதிதேவி

நன்று. வாழ்த்துக்கள்! ===ரதிதேவி

கவிதைக்கான முழு தகுதி பெறவில்லை---------ரதிதேவி

காதலை எழுதுவது நல்ல விஷயம்தான்.ஆனால், வெறும் காதலையே ஏன் எழுதி நிரப்புகிறீர்கள்?
-------ரதிதேவி

இது கவிதையே அல்ல.
முயற்சியுங்கள்..முடியும்-----ரதிதேவி

இன்னும் செம்மைப் படுத்தி இருக்கலாம்---ரதிதேவி

நன்று. முயற்சிகள் தொடரட்டும்--ரதிதேவி

காதல் எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம்.ஆனால் ஒவ்வொன்றும் உண்மைக் காதலாய் இருக்க வேண்டும்.-----ரதிதேவி

புளித்துவிட்ட பல்லவி----ரதிதேவி

முதலில் எல்லாவற்றையுமே நல்ல படைப்பு என்று புகழ்வதை நிறுத்துங்கள். குறைகளையும் சொல்லுங்கள். ---ரதிதேவி

இதில் கவிதைக்கான அம்சமே இல்லை!
தயவு செய்து, காதலுக்கு கண்ணீர் வடிப்பதை விட்டு நாட்டுக்கு எழுத வாருங்கள்!---ரதிதேவி

கஜல் எழுத முயற்சிக்கிறீர்.
ஆனால் இது கஜல் அன்று.
வாழ்த்துக்கள்--ரதிதேவி

இன்னும் அழகாகச் சொல்லியிருக்கலாம்---------ரதிதேவி

அழுத்தம் இல்லை!
உணர்வுகள் ஊற்றுபோல் பொங்கிவர வேண்டும். இதில் ஊர்ந்து வந்திருப்பதால் இது நல்ல கவிதை என்ற அந்தஸ்தைப் பெறமுடியாது. வாழ்த்துக்கள்------ரதிதேவி

நன்று!
எழுத்துப் பிழைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்---ரதிதேவி

அது என்ன தோழரே
திராவிடத் தமிழன்?
ஆரியத் தமிழன்?
விளக்க முடியுமா?-----ரதிதேவி

நன்று.
மேலும் முயற்சி செய்யுங்கள்---ரதிதேவி


ரதி தேவி.R கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே