த பிரபு- கருத்துகள்


பருவ மழை 18/11/2021

வடக்கிலிருந்து காற்று
கீழக்கில் வீசுதே !

வங்கக் கடலின்
நீரெல்லாம் மழையானதே !

வெள்ளம் தன் பாதையை
மறக்காது பாயுதே !

ஏரி குளமெல்லாம்
வானுயர கூரையானதே !

கூறில்லா மனிதர்களால்
வீடுகள் குளமானதே !


மக்களின் துயரம்
மனதை வாட்டுதே !

பயிர்கள் தொடர் மழையால்
மடிந்து போகுதே !

துஞ்சிய நீர்
ஆதாரங்களை புதுப்பிப்போம் !
பருவ மழையை
பக்குவமாய் சேமிப்போம் !
நீர் வளம் பெருகிட
வழி செய்வோம் !
வெள்ளம் ஓடிட
வழி விடுவோம்...!!!

அன்புடன்
த.பிரபு






த பிரபு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே