டிஜிட்டல் சரவணன்- கருத்துகள்

நன்றி சகோதரரே! தங்களுக்கும் உரித்தாகுக...

ஏங்க, இரண்டு தட்டு தட்டணும்னா தட்டிட்டுப் போங்க. இல்ல உங்களோட நேர மேலாண்மையை பத்தி சொல்லாம வேணா போங்க. அதவுட்டுட்டு, மூணு வேளையை, இரண்டு வேளையா குறைங்க, அது இதுன்னு.....

மூன்று நாட்களாக, ஜூன் 13, 2015 ஆரம்பித்து, மே 2, 2015 வரை இப்பொழுதுதான் வந்துள்ளேன். இதிலும் ஒரு தொடர்கதையை விட்டு விட்டேன்.
அடிக்கிற வெயிலில், பாராட்டக் கூட வார்த்தைகள் வர மறுக்கிறது.....................................................................
நன்று.
"செவிக்குணவில்லாத போழ்து
சிறுது வயிற்றுக்கும் ஈயப்படும்"
என்பது போல
தாங்கள் எப்படி "நேர மேலாண்மை" ("Time Management") யை முறைப்படுத்துகிறீர்கள்?
தெரிந்தால் நாங்களும் பின்பற்றலாமே!!!

தங்கள் சிறுகதைகளே வித்தியாசமான விஷயங்களை விவரிக்கும்போது
இந்த "மாற்றம்- வித்தியாச சிறுகதை" யை என்னவென்று விவரிப்பது.....

தங்களது இந்தக் கதையும் நிஜத்தை நினைவுறுத்துகின்றன. இக் கதையில், தாங்கள் எந்த நடிகராக நடிக்கிறீர்கள்?

தாங்களும் இதில் நடித்திருந்தால் மட்டுமே, கதையோட்டம் இவ்வளவு இயல்பாகவும், சிறப்பாகவும் அமைய இயலும்.
மொத்தத்தில், கதை அருமை...

அனுபவம் என்று நான் கூறியது தங்களது இயற்பெயரில் "டாக்டர் ஆர் ராணி" என்று குறிப்பிட்டதைத்தான். வேறு எதுவுமல்ல சகோதரி...

இராமாயண கால புஷ்பக விமானம்
தற்போதைய ராக்கெட்

1949 ல் வெளிவந்த "நல்ல தம்பி" தமிழ் திரைப்படத்தில்
"விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி" என்ற பாடலின் கருத்துக்கள்
1980 ல் சாத்தியமானது.

1980 களின் இடைப்பட்ட காலங்களில்
எழுத்தாளர் சுஜாதாவின் "மூன்று நிமிஷம் கணேஷ்" இல் வரும் "Voice Recognition"
2000 களின் ஆரம்பங்களின் கை பேசிகளிலேயே சாத்தியம் ஆனது.

11-05-2015 இல் சகோதரி கூறியது
2025 ல் சாத்தியமாகும் என நினைக்கிறேன்.

"ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி"
என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளுக்கு ஏற்ப
சிரிக்கவும் வைத்து, சிந்திக்கவும் வைத்த சகோதரியே
வளர்க தங்கள் விஞ்ஞான கற்பனை.

தங்களின் இயற்பெயருக்கு ஏற்றதோர் நகைச்சுவை

அனுபவத்தை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி...

எனைஈன்ற தாயுண்டு
சகோதரியும் தானுண்டு

அன்புசெய்ய மனைவியுண்டு
எனதன்பு மகளுண்டு

நான்வணங்கும் சக்தியுமே
மேற்சொன்ன பெண்ணினமே

எனைச்சுற்றி பெண்ணினங்கள்
தவறான புரிதலுடன்

கருப்பையின் சுழற்சியினை
கர்மவினை என்றுரைத்து

அருவருப்பாய் ஒதுக்காதீர்
அவளையுமே வெறுக்காதீர்...

ஆம், இளைஞர்களே,

கல்யாணம் முதல்
காதல் வரை
தொடங்குங்கள் வாழ்கையினை
தொடருங்கள் தொடர்கதையாய்

"மணமாகாத ஆண்களும் மண்ணில் உண்டே
உன் மனைவி போனால் ஏற்பாயா? "

வார்த்தைகளை சாட்டையாய்
சொடுக்கும்வழி நீயறிந்தாய்
இதைவிட தோலுரிக்க
வாழ்வியலில் வார்த்தைஏது...

இந்த சிறுகதையை
அல்ல
வாழ்க்கையை எழுதிய அருணை ஜெயசீலி அவர்களுக்கும், அதை எழுத்து.காம் - ல் சேர்த்த நாகராணி மதனகோபால் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
படித்து முடிப்பதற்குள் இரண்டு முறை கண்கள் பனித்துவிட்டன. மீண்டும் என் மனைவியுடன் சேர்ந்து படிக்கும்போதும் இருவருக்கும் அதே நிலை.
கதையின் ஆரம்பத்தில் நாங்கள் முதியோராகவும், கடைசியில் இளையோராகவும் இருந்தோம்.
இது எங்கேனும் தாங்கள் சந்தித்த பாத்திரங்களா? அல்லது ....
மிக அருமை. தொடர்க உங்கள் நற்பணி...

"ஆக்கவேண்டிய பொழுதுகளைப்
'போக்கு' என்று
தொழிநுட்பத் தொடுதிரை
தொந்தரவு செய்யும்"

"வாக்குரிமையை
அலட்சியபடுத்தாதே
அது குற்றம்
அரசியல் சமூக விழிப்புணர்வின்றி
வாக்களிக்காதே
அது அதனினும் குற்றம் "

எழ எத்தனிக்கும் இளைய பாரதத்திற்கு
எளிமையான வழிகள்...
நன்று நண்பரே,
அருமையான சமையலை வழங்கிவிட்டீர்கள்
சுவைத்தும் பார்த்தாகி விட்டது.
பிறகென்ன,
கருத்துக்களாய் பாராட்டுக்கள், குவிந்து கொண்டிருக்கின்றன...
அக்குவியலுக்கு நடுவிலே
என் பாராட்டும் ஒரு ஓரமாய்...............................

யாழ்ப்பாணத் தமிழைக் கேட்க அலாதியான சுகம். நன்றி விக்கிரமவாசன் அவர்களே.

கொங்கு நாட்டில் பிறந்து
மராத்திய மண்ணில் வளரும்
மா சிங்க ராஜனுக்கு
மனமார்ந்த நன்றி...


டிஜிட்டல் சரவணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே