ஹாலித் ரஹ்மான் - கருத்துகள்

ஆம் , ஒரு முறை எதிர்ப்பு வந்த உடன் அதுவே அவர்களின் இறுதியாக இருக்க வில்லையே ! முயன்றார்கள் கடைசி வரை முயன்றார்கள் இறுதியில் வெற்றி . அது இறுதியா ? தொடக்கமா ? என்பது மனதைப் பொருத்தது! அன்று அவர்கள் அதை தொடக்கமாக நினைக்கவே இன்று வெற்றிச் சத்தம் ! இதுவே அவர்கள் அதை இறுதியாக எடுத்து இருந்தால் .....இன்று தாங்கள் சொன்னது போல் மதம் என்று எதுவுமே இருக்காது !

அன்று அவர்கள் அவர்களுக்கு வந்த எதிர்ப்புகள் , அடிகள் , கேவலங்கள் எல்லாமே தோல்விகள் தான் .... அதோடு அவர்கள் பின்வாங்கி விட வில்லை , போராடினார்கள் .... இறுதியில் வெற்றியும் பெற்றார்கள்...

ஐந்து விரலும் ஒன்று போல் இல்லை தோழமையே ! சுயநலம் என்பது மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் இருக்கும்...... ஏன் எனக்கும் உங்களுக்கும் கூட ! அது அல்ல விஷயம் ! இந்த மகான்கள் எல்லாம் எங்கோ பிறந்தவர்கள் , அவர்கள் நமது நாட்டுப் பக்கம் கூட வந்ததில்லை ! அப்படி இருக்க .... இன்று எப்படி உலகத்தில் இந்த மதங்கள் பின்பற்றிக்கொண்டு இருக்கிறோம் ? அன்று அவர்கள் முதல் எதிர்ப்பு வந்த உடனே அப்பணியை கை விட்டு இருந்தால், தங்களின் தோல்வியை கண்டு பின் வாங்கி இருந்தால் இது சாத்தியம் ஆகி இருக்குமா? வரலாற்றைத் திருப்பி பார்த்தால்.. புத்தர் தன் வாழ்க்கையில் தோற்று தான் துறவறம் வந்தார்....

இல்லை அன்று தலைகளை எண்ணி விடும் அளவுக்கு தான் அவர்களின் கருத்துக்களை கேட்டு பின்பற்றுபவர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது .......! அவர்கள் அன்று பெற்ற வெற்றி வெறும் விதைதான் ......புரிந்திருக்குமென்று நம்புகிறேன். இல்லா விட்டால் ....இதைப் படியுங்கள் .....ஒரு போட்டியில் என்ன தான் இரண்டாமிடத்தை ஒருவன் பிடித்தாலும் அவன் தோற்றவனாகவே கருதப்படும். வெற்றி முழுமை அடைய முதலிடம் தேவை....போதுமான அளவு ஆதரவும் தேவை.......அன்று அவர்களுக்கு அன்று இருந்த ஆதரவு அதிகமா? இல்லை இப்போது உள்ள ஆதரவு அதிகமா?

மன்னித்து விடுங்கள் தோழா

தங்களின் கருத்துக்கு நன்றி !
நான் சொல்லி இருக்கும் இந்த தற்கொலை செய்து கொள்பவர்களும் இன்னும் கடைசி நிலைக்கு வரவில்லை. இவர்கள் முயன்றால் நீங்கள் சொன்னது போல் இவர்களின் வெற்றியும் கூட கடைசியில் தீர்மானிக்கப்படலாமே! ஏன் இவர்கள் அவர்களே இந்த தருணத்தை இறுதியாக நினைக்கிறார்கள் என்பதே என் ஆதங்கம் !

ஆரம்பத்தில் இவர்கள் எல்லாம் தங்களுடைய கருத்தை சொன்ன போது மக்களால் அவமானப் படுத்தப் பட்டார்கள் . ஏன் ? கல்லால் அடித்து கூட சித்தரவதைப் படுத்தப் பட்டார்கள் . இருப்பினும் அவர்கள் ஓயவில்லை . இறுதியில் வென்றார்கள் .


ஹாலித் ரஹ்மான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே