MURUGANANDAN- கருத்துகள்

அபத்தமான ஒரு செயல்...
ஆபத்தில் தான் முடியும் வருங்காலத்தில்...

சேவைக்கும், சாதனைக்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள்களின் ( சர்வ நிச்சயமாக என்னால் சொல்ல முடியும் ) செயல் இது..

இதுவரை "பாரத ரத்னா " விருது பெற்ற மாமனிதர்களை , இவ்வளவு தூரம் வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது...

ஆயிரம் சச்சின் டெண்டுல்கர்கல் வரலாம் , போகலாம்... கிரிகெட்டின் பிதாமகன் பிராத்மான் போல ஒருவர் உண்டா என்ற காலம் போய் , சச்சின் வந்தார் .. இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு அவரும் காணமல் போய் இன்னொருவர் சாதனை செய்வார்... ஒரு காமராஜரோ , கலாமோ , நெல்சன் மண்டேலாவோ வர இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ... ??? தனிப்பட்ட அவர்களின் ஒவ்வொரு தியாகமும் ஒன்றுக்கு ஒன்று இணை ஆகுமா.. ?

தென்னை , எட்டி ....இரண்டுமே மரங்கள்தான் .. என்றாலும் ஒன்றாகுமா.... ?

தன்னுடைய திறமையால் சாதிப்பது வேறு... மனித இனத்திற்காய் தன்னையே மெழுகாய் உருக்கி கொள்வது வேறு.... முன்னதில் தன்னலத்தின் சாயல் நிச்சயம் உண்டு... பின்னதில் பொது நலத்தின் வேட்கை தீர்க்கமாய் உண்டு...

விருதை கொடுத்ததால் அரசுக்கு அவமானம் ... விருதை பெற்றதால் சச்சின்னுக்கு அசிங்கம்.....

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.. வேறென்ன... ???

நன்றி நண்பர்களே.. மதத்தால் நாம் அடையாளபடுத்த படுகிற பொழுது , மனிதம் தலை கவிழ்ந்து கொள்கிறது ... செய்கிற செயல்களால் தான் மனிதர்களுக்கு அடையாளம் காணப்பட வேண்டுமே தவிர , மதத்தால் அல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து..

அருமை நண்பரே..... இதைதான் சாக்ரடீசும் , புத்தனும் எதிர்த்தார்கள்.... புரியாத ஒன்றை , தெரியாத ஒன்றை அப்படியே போட்டுவிட்டு போய்விட முடியுமென்றால் , மனித அறிவே வளர்ந்திருக்காது... கேள்விகளுக்கான விடைகளை தேடுவதில்தான் அவனது ஆறாவது அறிவுக்கான சவாலே இருக்கிறது.... அது அணுவாய் இருந்தாலும் சரி.. ஆண்டவனை இருந்தாலும் சரி.... விவாதங்கள் நமது கோணல்களை சரிப்படுத்தவும் உதவுமே...

தாய், குழந்தை , கலை என்கிற மாதிரியான நல்ல உருவத்துள் மட்டும்தான் கடவுளை உணர முடியும் என்கிறீர்களா...?

ஆக , கடவுள், உணர்வுகளின் வடிவமாக இருக்கிறார் என்பதாக வைத்து கொள்ளலாமா....?

அழகு.. விஞ்ஞானம் பதில் சொல்லும் என்று நம்புவோம்..

எத்தனை கருத்துக்கள் .. எத்தனை விதத்தில் ...உங்களின் விளக்கங்கள் அருமை நண்பர்களே...

உலகில் காதல் தோன்றுவதற்கு முன்னரே கடவுள் , இன்ப,துன்பம் , சொர்க்க ,நரகம் , மறு ஜென்மம் ..இப்படியான விசயங்களே தோன்றியதாக எல்லா நாகரீகங்களின் வரலாறுகள் தெரிவிக்கன்றன..

ஞானிகளுக்கும் ,மகான்களுக்கும் பிடிபட்டதாக சொல்லப்படுகிற ஒரு விஷயம் , சாமான்யர்களுக்கு ஏனோ இன்னமும் பிடிபடவே இல்லை...

நானும் கீதை, குரான், பைபிள் , புத்தனின் ஹீனயான , மகாயான விளக்கங்கள் , நாத்திக வாதங்கள் , சாக்ரடீசின் கடவுள் தத்துவங்கள் என ...எல்லாவற்றையும் படித்துக்கொண்டும், தேடிக்கொண்டும் தானிருக்கிறேன்...

ஒரு விஷயத்தை தெளிவாக மனதில் கொள்வோம்... இந்த தர்க்கத்தின் நோக்கமே , யார் சொல்வது சரி , யார் சொல்வது தவறு என்று நிரூபிக்க அல்ல... கடவுளை பற்றிய நம்முடைய புரிதல் , எண்ணங்கள் எப்படிப்பட்டதாக இருக்கிறது .. எப்படி நாம் ஒன்று படுகிறோம் அல்லது வேறு படுகிறோம் ... என்பதான நம்முடைய ஆழமான சிந்தனைகளை படிப்படியாக பகிர்ந்து கொள்வதன் மூலம்
கடவுள் பற்றிய பன்முகமான விமர்சனங்களையும், விளக்கங்களையும் பெற முடியும் ....

நாம் படித்த , தெரிந்து கொண்ட கடவுள், தெய்வீகம் குறித்த அற்புதமான விசயங்களை இந்த நேரத்தில் எல்லோரும் பகிர்ந்து கொள்வதன் வழியாக நமக்குமே ஒரு தெளிவு ஏற்பட உதவக்கூடும்..

"வாழ்க்கையை பற்றிய பயம்தான் கடவுளை முன்னிறுத்துகிறது " என்பது என் அபிப்ராயம் . என்ன ஆகுமோ , எப்படி நடக்குமோ ? என்கிற வருங்காலம் பற்றிய கேள்விகள் , கடவுள் என்கிற ஒரு மைய புள்ளியை சுற்றியே சுழலும் வகையில் நம் வாழ்க்கையை அமைக்கிறது என்பதாக எனக்கு படுகிறது. ..

நீங்கள் என்ன நினைகிறீர்கள் ...நண்பர்களே.. ?

கடவுள் தோன்றியது குறித்தான கேள்வியை போல , கடவுளை பற்றிய நமது இந்த உரையாடலும் நீண்ட நெடு நாள் தொடரும் என்றே நினைக்கிறேன்... என்ன சரிதானே.. ?

குடிக்கும் மக்களின் அரசு என்பதுதான்...மன்னிக்கவும்... இறந்து போனவர்களுக்கு தான் நினைவு தினம் கொண்டாடுவோம் ... இங்கே குடிகளின் ஆட்சி மறைந்துபோய் வருடங்கள் ஆகின்றன..

வயதையும் , அனுபவத்தையும் , வளர்க்கப்பட்ட விதத்தையும் பொறுத்தது காதல் ... பொதுவாக சொல்ல போனால் தன்னை முதலில் நிலை நிறுத்தி கொண்டு ( அதாவது படித்து , வேலை செய்து , குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறைந்தபட்சம் ஒரு 50% மாவது நிறைவேற்றி ) பிறகு காதல் கொண்டால் , காதல் தோற்று போவதற்கான வாய்புகள் மிக குறைவு... இன்றைய காதலர்கள் உடல் ரீதியில் தயாரானலே தங்களுக்கு காதல் செய்யும் தகுதி வந்து விட்டதாக நினைத்து கொள்வதாலயே நிறைய குழப்பங்கள்... பதின்ம வயது காதல் , மோதல் மற்றும் சாதலில் முடிய இதுவே காரணம்... 25 வயதுக்கு பிறகு வருகிற காதலில் ,காதல் தாண்டி வாழ்க்கையை குறித்தான கவனும், அக்கறையும் மிகுதியாக இருக்கும்...
பதின்ம வயது காதல் தன்னை தான் அதிகமாக பார்க்கும்.. பதின்ம வயதுக்கு பிறகு வருகிற காதலோ தன்னை தாண்டியும் பார்க்கும்...

vayathaiyum , anupavathaiyum , valarkkappatta vithathaiyum poruththu kaathal.... pothuvaaga solla ponaal thannai muthalil nilai niruththi kondu ( padippil , vaelaiyil, kudumpaththirkku seiya vaendiya kadamaiyil ..kurainthapatcham 60% maavathu ) piragu kaathal kondaal thavaraaga povartharkku vaaipugal miga kuraivu...

வழக்கம் போல ...மனிதர்களுக்கும் பெருமை இல்லை .. விருதுகளுக்கும் பெருமை இல்லை..
ஏனென்றால் .. சார்பற்றவைகளாக அரசுகள் இல்லை..

நன்றி .. நண்பரே...கடந்த 2 மாதங்களாக இரண்டு கோ சாலை களுக்கு தொடர்ந்து போய் கண்டறிந்த உண்மை... இறைச்சி கூடத்திற்கு போகும் பசுமாடுகளை அதன் இறுதி காலம் வரை வைத்திருந்து காப்பாற்ற அதன் பொறுப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் .. ஆனால் பிரச்சனை உணவு தான்.. ஒரு நல்ல மாட்டிற்கு குறைந்தது 25 கிலோ உணவு தேவை... எவ்வளவு தான் அவர்கள் கையில் இருந்து செலவு செய்ய முடியும்... ? வெட்டியாய் நம் விருந்துகளில் எறியும் இந்த காய்கறி கழிவுகள் அவைகளுக்கு பெருத்த உதவி... என்ன , அவற்றோடு வேறு குப்பை, பிளாஸ்டிக் போன்ற எவற்றையும் கலந்து விட கூடாது... அதை கூடவா நம்மால் செய்ய முடியாது... ? மூக்கை பிடித்துகொண்டு ,முகம் சுழித்துக்கொண்டு , சகித்துக்கொண்டு போவதைவிட , வெகு எளிதாக அந்த கழிவுகளை , மண்ணிற்கு உரமாக மாற்றும் அற்புதம் செய்யும் ஜீவன்களுக்கு உணவாக தரலாமே... இதற்க்கு மேலும் செய்ய நினைப்பவர்கள் , ஒரு குடியிருப்பில் கூட்டமாக வாழ்ந்தால், அவர்கள் வீடுகளில் தினம் தோறும் உபயோகப்படுத்தி மிச்சமான காய்கறிகளை யாராவது ஒரு வேலை ஆள் மூலம் சேகரித்தும் தரலாம்....

நன்றி தோழர்களே ...அனுபவ உண்மைகள் ..

அட...அட... எதுகையும், மோனையும் வளமாய் இருக்குது நண்பரே... முக்திக்கு ஒரு புது யுக்தி சொல்லி இருக்கிறீர்கள்.. நன்று..

வேதனைகளை விவரித்த வார்த்தைகள்.. தீர்வுகளையும் கொஞ்சம் தேடி இருக்கலாமே..? நல்ல உதாரணங்கள் .. நிறைய சிந்திக்கிறீர்கள்..

அருமை... ஆனால் ஏன் இவ்வளவு சோகம் நண்பரே... ? தமிழன் , பாரதி கண்ட அக்னிக்குஞ்சு... பொறுங்கள் .. நல்லது நடக்கும் நாளை...

நல்ல தலைப்பு.. நல்ல பொருள்... சிரமப்படுத்தாத நடை.. வாழ்க ..


MURUGANANDAN கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே