மகேஸ்வரன் கோ மகோ- கருத்துகள்

கருத்துக்கு நன்றி .
அந்த மருத்துவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்பதே என் புலம்பல் சகோ...

வணக்கம் கோவை சுபா அவர்களே ,
உங்கள் கருத்திற்கு நன்றி ...

உங்கள் கருத்துக்கு நன்றி ... மனம் கொல்லும் மாயசக்தி தான் மறக்கமுடியா நினைவுகள்... மறதி மட்டுமே அதற்க்கு மாற்று மருந்தாய் , மறதிக்கொள்ள முடியா நினைவுகள் எல்லாம் மரணம் வரை ...
இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் ( மகோ )

வாழ்த்துக்கு நன்றி... முயற்சிகள் தொடரும் ....

நன்றி... கவிதையாய் உயிர் கொள்ளும் வார்த்தைகள் மட்டுமே வலிகளின் வடிகாலாக ...

நன்றி . வலிகளுடன் வாழ பழகிப்போனது.

நன்றி .வழி பிறக்கும் காலம் நோக்கிய விழிகளுடன் தான் காலம் தொலைகிறது ....

நன்றி. வலிகளே பலநேரம் வரிகள் ஆகின்றன.

கண்ணகியும் மாதவியாய்...

பெண்ணை தெய்வமாய் வணங்கினாலும்
போகமாய் பார்க்கும் படி ஆனது ஏனோ ?...

ஆணுக்கு நிகராய் அனைத்தும்
செய்திடும் பெண்தனை பேடியாய்
பேசும் படி ஆனதும் ஏனோ ???...

போராடி போட்டிகளை வென்றிடினும்
வேசியாய் வார்க்கும் வன்மமும் ஏனோ ???...

கடைமைக்காக கஷ்டம் கொள்ளும்
பெண்தனை காமபதுமையாய்
கற்பனை கொள்ளும் கயவர்கள்
கண் திறப்பது எப்போதோ ???...

தன்னில் பாதி பெண் கொண்ட
கடவுள் கதை பல பேசினாலும்
பெண்ணை பிழை கொள்ளும்
நிலை தான் ஏனோ ???...

ஆண் வென்றால் திறமை
பெண் வென்றால் மகிமை
மனதால் மிருகமாயிருக்கும்
மதி கெட்டவர்களை மனிதனாய்
ஏற்பது எப்படியோ ???....

தன்னை உயர்த்தும் திறன் கொள்ளாத
தற்குறிகள் எல்லாம் சேர்த்து
செய்யும் சதி தான் இதுவோ ???...

தடைகளை தகர்த்து எறியும்
சக்தி கொண்ட பெண்ணும்
தன்னை தவறாய் பேசாதிருக்க
தனி ஒரு தவம் கொள்ள வேண்டுமோ ???...

மதி உயர்ந்து மனிதனாய்
மாற்றம் கொண்ட மனிதர் தம்
மனங்கள் மதி இழந்ததால்
இன்று கண்ணகியும்
மாதவி தான்....

ஆம் அறிவிலிகள் அவர்தம்
பார்வையிலே அனைவரும்
மாதவி தான் இன்று ...

இவன்
மகேஸ்வரன்.கோ ( மகோ)
+91-9843812650
கோவை -35








மகேஸ்வரன் கோ மகோ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே