சுரேஷ்குமார்- கருத்துகள்

தோழரே! பாரதி கண்ட புது யுகம் பக்கத்து வீட்டுடன் பகை கொண்டு வாழ்வதா?
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்" என்பதல்லவா வள்ளுவன் காட்டிய வழி?
அனைத்தும் மாறும் காலமும் வரும்; அன்பால் இவ்வையம் அமைதியும் பெறும்!

வாழ்வின் விந்தையை பார்த்தீரோ?சில நேரங்களில் நமக்குப் பிடித்தவர்கள் பேசும்போது செவிடாயிருக்கிறோம் சில நேரங்களில் நாம் பேச நினைக்கும்போது அவர்கள் ஊமையாய் இருக்கிறார்கள் ..............நன்று தொடரட்டும் உங்கள் கவியும் காதலும்

அது ரசிகர்களை பொருத்தே தோழி நல்ல கவி இன்னும் எழுத வாழ்த்துக்கள்.......

அழகாய் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

தவறு.எல்லா மனிதர்களும் சமமே.மதத்தின் பார்வையில் அவர்களை தனிமைபடுத்த நினைப்பது சில சுயநலவாதிகளின் நரிவேலையே.ஒவ்வொரு மனிதனும் உயர்வதும் தாழ்வதும் அவரவர் செயல்களாலேதான் என்பதை வள்ளுவர்
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் "
எனும் குரலில் அப்போதே தெரிவித்துவிட்டார்.
சகிப்பதற்கு ஒரு குறையும் இல்லாத வேலையில் சகிப்புத்தன்மை பற்றிய பேச்செதற்கு?

முட்டைக்குள் இருக்கும் இரு கருக்களும் வெவ்வேறு வெப்பநிலையில் திடமடைவதால் தான் அவை ஒட்டாமல் கிடைக்கின்றன.மஞ்சள் கரு வெள்ளைக் கருவைவிட தாமதமாகத்தான் திடமடையும்.ஆப்பாயில் ரகசியம் புரிந்ததா?

புள்ளிகள் உங்கள் படைப்புகளின் எண்ணிக்கையும் அவற்றிற்கு வரும் பார்வைகள் மற்றும் மதிப்பீட்டையும் பொறுத்து அமையும்.எனவே எல்லா பிரிவுகளிலும் உங்கள் படைப்புகளை சமர்பித்தால் அதன் தன்மைக்கேற்ப புள்ளிகள் பெற வாய்ப்புள்ளது,,,

தகர்ப்பதற்க்கே தடைகள்.... வெல்வதற்கே இளைஞம்........

இனிக்கும் தாய்மொழியில் இன்னமும் கவிதை புனைய வாழ்துக்கள் தோழி ....

ஆங்கிலம் அந்நிய மொழியை இருந்தாலும் அத்தியாவசிய மொழியை மாறிவிட்டதை மறுத்துரைக்க இயலாது.உலக மக்கள் அனைவரும் கருத்துகளைப் பறிமாறிக்கொள்ள ஆங்கிலம் பொதுமொழியாய் இருப்பதால் அது பலதுறைகளில் சிறக்க அவசியமானதே...


சுரேஷ்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே