Zia Madhu- கருத்துகள்

காதலையும் மனிதனின் மற்ற உணர்வுகளைப்போல் எடுத்துக்கொண்டால் நிச்சயம் உயிரைப் பணயம் வைக்கும் தேவையற்ற எண்ணங்கள் தோன்றாது. காதலைத் தன் உயிரில் பாதியாய் எண்ணிக்கொள்வதே இதுபோன்ற முட்டாள்தனத்தில் கொண்டு வந்து விடும்.

நம் பெற்றோர் நம் மீது கொண்டதும் காதலே. நாம் இயற்கை மீது கொண்டதும் காதலே. பள்ளியில் உணவை பகிர்கையில் நட்புகள் மீது கொண்டதும் காதலே. அப்படித்தான் ஒரு ஆணும் பெண்ணும் கொள்ளும் காதலும் என்றுணர்ந்தால் தன்னை மாய்த்துக்கொள்ளவோ பிறரை கொன்றுவிடவோ நிச்சயம் தோன்றாது.

உண்மை தான் தோழமையே. எழுத்தின் மீதுள்ள தீராக்காதலே எம்போன்ற இளைய கவிகளை உருவாக்கிற்று. இலக்கணம் தெரியாதவர்கள் மட்டுமல்ல, தெரிந்துகொள்ள விரும்புவோர்க்கும் இத்தளம் மிகுந்த உதவியாய் உள்ளது.

உணர்வுகள் நிறைந்த வரிகள். மிக்க நன்றி தோழமையே.

வருகைக்கு மிக்க நன்றி அபி. மோனாவின் நாட்களை அடுத்த பகுதியில் விவரித்திருக்கிறேன். தவறாமல் மோனாவின் உலகத்தை காண வாருங்கள்.

தங்கள் வருகைக்கும் விமர்சனங்களுக்கும் மிக்க நன்றி ஆரோ. கல்லூரியின் பசுமைத் தாங்கிய நினைவுகளை அடுத்த பகுதிக்காய் காத்துவைத்திருந்தேன். நிச்சயம் அடுத்த பாகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் என்று நம்புகிறேன். நன்றி.

மிக்க நன்றி தோழமையே

தங்கள் கருத்துக்களுக்கும் கவிதைகளுக்கும்!

வருகைக்கு நன்றி சத்யா.

ஆம். தனிமை மிகவும் வலியது. தனிமையில் வாழ்ந்து துணிவு கண்டவன் தன்னை நேசிக்க கற்றுக்கொள்வான். தங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழமையே.

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தோழமையே.

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தோழமையே.

மிக்க நன்றி சத்யா.
அடுத்த பகுதியும் எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது படிக்கவும்.

ஆக்கபூர்வமான விமர்சங்களை வரவேற்கிறேன்.

நீயும் உன் காதலனும் இருவேறு கோடுகள் போல் கைகோர்த்து அருகருகே ஒட்டி பயணித்தல் சிறப்பு. அல்லாமல் ஒன்றோடு ஒன்று ஒரே கோடாக சேர்ந்தே தீருவோம் என்றால் நிச்சயம் அதில் ஒருவர் தன்னை இழக்க நேரிடும். உன்னை உனக்காக ஏற்றுக்கொள்வதே பக்குவப்பட்ட காதல். உன் பழக்கவழக்கங்கள், நிறை குறைகள், உன் எண்ணங்கள் இவை எல்லாம் உன் காதலோடு ஒத்துப்போகாமல் இருக்கலாம். அப்படியும் ஒருவர் மற்றவர் மீது அளவில்லா அன்பு செலுத்த முடிந்தால் வேறன்ன வேண்டும்??

வருகைக்கு நன்றி அபி. இக் கல்லூரியின் கதை வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கும். இணைந்திருக்கவும். மீண்டும் சந்திப்போம்.

கருத்துக்களில் கவிதை புணையும் கவியுமுண்டு உம்மை போல். நன்றி

தங்கள் வருகையில் மிக்க மகிழ்ச்சி அய்யா.

மிக்க நன்றி தோழமையே.

நறுக்கென ஒர் பதிவு. வாழ்த்துக்கள்.


Zia Madhu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே