Jegan- கருத்துகள்

அவரின் கவிதைகளின் கைபிடித்தே நடை போடுகிறேன்...இந்த கவிதையைப் பதிவிட துளியும் யோசிக்கவில்லை சகோ...ஆனால் ஒட்டுமொத்த கவிஞர்கள் உலகும் அவரைக் கைவிட்டது வருத்தம் தருகிறது...உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்..உங்கள் எழுத்து தானே உங்கள் அடையாளம்...தனியொரு அடையாளம் நான் விரும்பவில்லை சகோ...மகிழ்ச்சி உங்கள் பகிர்வை வரவேற்கிறேன்...மிக ஊக்கம் தருகிறது

உங்கள் படைப்பில் எனக்கு பிடித்த சில வரிகள் கிழே!

கால் உடைந்து கிடந்தது
என் சிறு வயது மரக் குதிரை.....

கவர் மாட்டியபடி இருந்தேன் பென்ஸ்
காருக்கு நான்......!

ஏனோ முகத்தில் ஒரு வித இறுக்கம்
எப்படி இது வந்தது ? வசதி வந்ததாலா ?!

குப்பையை ஏன் இன்னும் சரி செய்யல
எரிந்து நான் விழ சட்டென்று
இதோ எசமான் என்று
எடுத்து எறிந்தாள் ரோட்டில்
வேலைக்காரப் பெண்
அந்த மரக் குதிரையை........!

துண்டு துண்டாக சிதறி விழுந்தது
குப்பைத் தொட்டிக்குள் அது......!

தனி அறையில் அமர்ந்து
நினைத்துப் பார்க்கிறேன்......

சிறுவயதில் அந்தக் குதிரையை விட்டு
இறங்கவே மாட்டேன்
அவ்வளவு அன்பு அதன்மீது...

ஆனால்.....ஆனால்.....

இன்று ஏன் எப்படி மாறினேன்......?

அந்த சந்தோசங்கள் எல்லாம் இப்போது
அற்பமாக போய்விட்டதன் காரணம் என்ன ?

எனது அறிவு விருத்தியா ?
இல்லை அகம்பாவமா ?

சிந்தித்தபடியே தூங்கி விட்டேன்......

மறு நாள் ஆபீசுக்கு
காரில் கிளம்பும்போது கவனித்தேன்.....

அந்த உடைக்கப் பட்ட மரக் குதிரையை
அழகாக சேர்த்து ஆணி அடித்து செப்பனிட்டு
ஆனந்தமாக விளையாடக் கொடுத்திருந்தான்
ரோட்டோரப் பிச்சைக்காரன் தன் குழந்தைக்கு...

உண்மை சந்தோசமும்
என் கண்களுக்கு எரிச்சலைத் தர......

வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தி
முன்னேறினேன்.......

சந்தோசத்தில் நான் பின்னேருவதை
புரிந்து கொண்டும்
புரியாதவனைப் போல்.........

காதல் கண்ணடி அணிந்து பார்த்தால் பிழைகளும் அழகாகத்தான் தெரிகிறது...........
அருமை.........

அருமையான படைப்பு தோழரே!
கூகுளில் மீனவர்கள் வாழ்க்கை பற்றி தேடினால் உங்கள் படைப்பு தான் வந்து நிற்கிறது.....நானும் ஒருவேளை அதிகம் தேர்வு வாங்கி இருக்குமோ என்று பார்த்தால் தேர்வுகள் குறைவுதான்....சிலநேரம் கவிதையில் நயம் தேடும் என் எழுத்து தோழர்களுக்கு இதில் இருக்கும் நயம் போதவில்லை என்று நினைக்கிறேன்....எதற்காக நான்கு படைப்புகளோடு நிறுத்திவிட்டிர்கள்????????தொடருங்கள் தோழரே!

அழகான ஹைக்கூ....
அருமையான வார்த்தை பிரயோகம்!

மின் குமிழ்-பல்பு-
`````````````````````````
காம்பினில் மலராது
கம்பிகளினூடே மலரும்
மின்சாரப் பூக்கள்...!!!

புதுமையான வரிகள்!
அருமை அன்பரே!

நல்ல படைப்பு அன்பரே!

புரியவில்லையா?
சோளக்காட்டில் காவலுக்கு நிற்கும் பெண் பொம்மைகள் பாலியல் வன் கொடுமைக்கு பயந்து சேலை கட்ட பயப்படுகிறது(அதாவது சேலை கட்டிய பொம்மைகளைக்கூட விட்டு வைப்பதில்லை என்ற தொனியில் எழுதினேன்)

நன்றி தோழரே
சந்தேகிக்க வேண்டாம் அன்பரே
எனக்கே என்மேல் சந்தேகம் வருகிறது....
ஹா.....ஹா......

மகிழ்கிறேன் தோழமையே....

நன்றி தோழரே
உங்கள் ரசிப்புக்கும் பாராட்டுகளுக்கும்....


Jegan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே