lakshmi.P.R- கருத்துகள்

இறையன்பு மாதிரி நேர்மையான தலைவர். அவரின்கீழ் காமராசர் போலச் சிந்தனை நிறைந்த அரசியல் கொள்கைகள் தெரிந்து, முதுகலை பயின்ற ௫௮ வயதிற்குட்பட்ட நேர்மையான அமைச்சர்கள். தமிழகத்திற்குக் கிடைப்பார்களா?நடிகர் கூட்டம் இல்லாத அரசியலே சிறந்தது.

போட்டி முடிவினைத் தெரிவிக்க இயலுமா?கண்டே பிடிக்க இயலவில்லை.

பொள்ளாச்சிஅபி-திறனாய்வுக்கட்டுரை
பொள்ளாச்சிஅபி- சிறுகதைத் திறனாய்வுப் போட்டி
சிறுகதைகள் முழுவதும் சமூக விழிப்புணர்வு கருதியே படைக்கப்பட்டுள்ளது.
இச்சிறுகதை எழுதிய ஆசிரியர் பொள்ளாச்சியோ அல்லது அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் வசிப்பவராக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இணையத்தளத்தில் பொள்ளாச்சிஅபி என்பவர் ஆண் என்பதைத்தவிர வேறெங்கும் குறிப்புகள் காணப்படவில்லை.
களஆய்வு மேற்கொள்ளப்பட்டால் ஆசிரியர் குறித்த தகவல்கள் முழுமையாகக் கிடைக்கலாம்.
திறனாய்வு என்பது ஆசிரியரின் கருத்தாக்கம் நிகழ்வதற்குக் காரணமான இடம்,காலம்,கருதப்படுகின்ற பொருள் மட்டுமல்லாது அவர் வாழ்ந்து வருகின்ற குடும்பம்,சமூகம் இவற்றை உள்ளடக்கியதாகும்.
ஆனால்,ஆசிரியர் வரலாறு மின்னஞ்சல் அளிக்கப்பட்டு கேட்கப்பட்டிருந்தாலும் பதில் அனுப்பப்படாமையால் போட்டிக்கு உட்படுத்தப்பட்ட பதினொன்று சிறுகதைகளை மட்டும் ஆராய்ந்து இவ்வாய்வுக் கட்டுரை படைக்கப் பெறுகின்றன.கதையின் சிறப்புகளின் அடிப்படையில் சிறுகதைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
1. இன்னுமொரு கண்ணி
கதையின் இயல்பான போக்கு ஆங்கிலம் கலந்த வடமொழி கலந்த வட்டார மொழிநடையுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் மொழிநடையைச் சார்ந்த இத்திறனாய்வுக் கட்டுரை இயல்பான நடைமுறை மொழி நடையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
கதை கூறும் களத்தின் ஒரு கூறு இரவு தெருவோரம் என்பதையும்,வருங்காலச் சமுதாயம் இளைஞர்கள் கையில் இருப்பதையும் கருத்தில்கொண்டு ஏன்ஏஜ் மாணவனைக் கதைத் தலைவனாக்கி கதை பின்னப்பட்டுள்ளது. இது ஆசிரியரின் கதை எழுதும் அறிவார்ந்த திறனை வெளிக்காட்டுகிறது.
பள்ளியில் பாலியல் கல்வி சட்டரீதியாக போதிக்கப்படாமல் இருப்பதால் நிகழும் விளைவுகளையும், ஏன்ஏஜ் மாணவர்கள் திருந்தவும் இக்கதை வழிகாட்டியாக அமையும்.
ஆணாதிக்கச் சமுதாயத்தின் சிற்றின்ப ஆசையினால் விளையும் உயிர்க்கொல்லிநோயை நுண்ணிய அணுகுமுறையின்வழி கையாண்டுள்ளவிதம் சிறப்பானது.
பொதுவாக டீன் ஏஜ் மாணவனுக்கும்,தந்தைக்கும் இடையே தலைமுறை இடைவெளி அதிகம் காணப்படும் இன்றைய சமுதாயத்தில் ‘தோளுக்கு மிஞ்சினால் தோழன்‘ என்ற சிந்தனையோடு இக்கதை அமைத்திருப்பது ஆசிரியரின் குடும்ப மனப்போக்கினைக் காட்டுகிறது.
‘கற்க கசடற‘ எனும் வள்ளுவத்தின்படி பெற்ற கல்வியைப் பிறருக்கும் அளித்து வாழும் கணேசன் கதாபாத்திரம் உயர்வானது.இது ஆசிரியரின் உயர்ந்த கருத்துச்சிந்தனையை வெளிக்காட்டியுள்ளது. சமுதாயத்தில் ஆசிரியர்,மருத்துவர்,காவலர்,வழக்கறிஞர்போன்ற இந்நான்கு துறையிலும் இருப்போர் தங்கள் பணியறிந்து செயலாற்றினால் நாடு திருந்தும் என்பதைக் குறிப்பால் ஆசிரியர் உணர்த்தியுள்ளதைக் காண இயலுகிறது.
சமுதாயத்தில் காணப்படும் பாலியல் தீமைகளின் அவலத்தைச் சாடியுள்ளபோக்கு ஒவ்வொருவரும் தன்னை உணர்ந்து திருந்தி வாழும் நிலையை உருவாக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டுள்ளது.
எயிட்ஸ் இல்லாப் புது உலகம் படைக்க ஒருவனுக்கு ஒருத்தி என்ற முடிவுடன் கதை அமைத்துக் காட்ட ஆசிரியர் விழையாமல் பாலியல் விழிப்புணர்வுக்குமட்டும் முக்கியத்துவம் அளித்துவம் அளித்திருப்பது சமுதாய நடைமுறைப்போக்கினைக் காட்டுவதாக அமைந்துள்ளது. உலகெங்கும் பெண் குறித்த பாலியல் கருத்துகள் ஆண் சமுதாயத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதைக் காண இயலுகிறது. இதனை ஆணாதிக்க மனப்போக்கு எனவும் கருத்தில் கொள்ளலாம்.
தனது தேவைக்காகவும்,தனது குடும்பத்தேவைக்காகவும்,எதிர்பாராதவிதமாகவும் பாலியல் தொழிலை மேற்கொண்டுவாழும் பெண்கள் குறித்தும் ஆசிரியர் குறிப்பிட்டிருந்தால் இத்தொழில் குறித்த விழிப்புணர்வு சமுதாயத்தில் இன்னமும் அழுத்தமாகப் பதிந்திருக்கும். விபசாரத் தொழில் இன்னமும் இந்தியாவில் முறையாக அங்கீகாரம் இல்லாத தொழில். ஆனால், இன்னமும் இத்தொழில் நடந்தேறி வருவதால்
சமுதாயத்தில் தமிழ்ப்பண்பாடு சிதைவுபட்டநிலையினைக் காண இயலுகிறது.
மாற்ற இயலாதது மானிட உலகில் ஏதுமில்லை என்பதை ‘இன்னுமொரு கண்ணி‘ சிறுகதை வெளிப்படுத்துகிறது.
இரண்டாம் சிறுகதைத் திறனாய்வு-தொடரும்.
2.மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற தலைப்புப்பொருத்தம் ஆசிரியர் யாருக்குக் கூறினாலும் சமூகமக்களுக்குப் புரியுமா என்ற நிலையில் கதையின் கரு அமைந்துள்ளது.
படித்த மக்களுக்கே சாதி என்பது இடைப்பட்ட காலத்தில்தான் தோன்றியுள்ளது என்பதை மறந்த நிலையில் இக்கதை யாருக்கு விழிப்புணர்வுதரும் என்பது புரியவில்லை.
இன்னமும் கிராமப்புறங்களில் இருக்கும் இரட்டைதம்ளர்முறை குறித்து விவாதிருப்பது சமூகச் சீர்கேடின்மையைக் காட்டுகிறது.ஒரு கலைஞனின் பறை கொட்டும் இசைத்திறன் வெளிநாட்டவரால் மதிக்கப்படும்போது உள்நாட்டில் சாதியின் விஷஆதிக்கத்தினால் பாதிக்கப்படுவதைச்சுட்டிக்காட்டியுள்ளது சிறப்பானது.
ஊருக்குள் கார் சென்றால் ஏற்படும் சாதித்தொல்லைகளை மறைமுகமாக ஆசிரியர் கதையின்வழி காட்டியுள்ளார். கதைப்பாத்திரப்படைப்புகள் வட்டாரநடைமொழி வழக்குடன் அமைக்கப்பட்டுள்ளது.
3.அவரது சொந்தங்கள்
சொந்தங்கள் என்பது நல்லவர்,கெட்டவர் என்பது நிறைந்த உலகத்தின் ஒரு கூறு.அவரது சொந்தங்கள் கதை ஒரு எழுத்தாளரது இறுதிநேரத்தினைச்சுற்றியே பின்னப்பட்டுள்ளது. எழுத்தாளனுக்குத் தான் காண விரும்பிய சமுதாயம்,சமூகச் சீர்கேடுகள்,கண்ணில்பட்ட நிகழ்வுகள் இவற்றைத் தனது கற்பனைத் திறனுக்கேற்றவாறு படைத்துக்காட்டுவான்.சிறுகதை என்பது ஒரு நிகழ்ச்சியினை மையமிட்டே அமைக்கப்பெறும்.இது கதைக்கருவை ஒட்டி ஓரிரு நிகழ்வாகவும்
அமையும்.
குடும்பத்தை இழந்தவனுக்கு அருகிலிருப்பவர்களே துணை.இந்நோக்கில் ஆசிரியர் கதையினை அமைத்துள்ளார். ஒருவர் இறக்கும்போது ஊர் ஒப்புமைக்காக வந்து செல்வது ஊர்வழக்கம் என்பதையும்,அவர் இறந்தபின் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதையும் கதையில் கொணர்ந்துள்ளார்.அத்தகைய மனிதர்களில் நல்லவர்களும் இருப்பார்கள்,தீயவர்களும் இருப்பார்கள்-கதையில் இருப்பதைப்போல ஆசிரியர் பல கதாபாத்திரங்களை அறையினுள் உலவ விட்டுள்ளார்.போட்டிக்குட்படுத்தப்பட்ட கதைகளில் பாலியல் தொழிலாளி என்ற படைப்பு இரண்டுமுறை கொணரப்பட்டுள்ளதை இங்கு நோக்கவேண்டும்.காரணம் ஒன்று ஆசிரியர் வாழ்ந்துவரும் இடங்களில் பாலியல் தொழிலாளிகள் மிகுந்திருக்கலாம்.பாலியல் தொழில் என்பது அங்கீகாரம் இல்லாத தொழில்.அதைச்சூசகமாகவும் ஆசிரியர் கொணர்ந்துள்ளார் என்பதாகவும் கருதலாம். இயற்கை வருணனையின் உச்சி விளிம்பினைத் தொட்ட அற்புதமான இடம் கதையின் முதலும்,முடிவும். எப்போதுமே சிறுகதை என்பது குதிரைப்பந்தயத்தில் ஓடுகின்ற குதிரைவேகத்தினைப்போன்று இருக்கவேண்டும் என்பர்.
கதையின் நடையினை முதலும்,முடிவுமாய் ஒரு அழகான எழுத்தாளனின் முடிவினைக் கண்முன்னே ஆசிரியர் நிகழ்த்திக்காட்டியுள்ளார்.
4.புயலின் மறுபக்கம்
பெற்றோரை எதிர்த்து மதம்மாறித் திருமணம் செய்பவளின் வாழ்க்கைக்கு யாரும் பாதுகாவலாக மாட்டார்கள் என்ற கருத்தை வலியுறுத்தும் கதைக்கரு வலுவானது.
அரசு மருத்துவமனையின் உண்மையான முகம் எழுத்துகளில் கொணரப்படும்போது அதன் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது.
நேற்றிருப்பார் இன்றில்லை,இன்றிருப்பார் நாளையில்லை என்பதை உணர்த்தும் கதாபாத்திரத்தின் தாக்கம் சமுதாயத்தினருக்கு நல்லதொரு படிப்பினை.
உறவுகளில் ஒருவர் இறக்கும்போது ஏற்படும்இயல்பான மனநிலை உணர்வு கலந்த மௌனம் கலந்த கதைக்களம் ஆசிரியரின் மனப்பக்குவத்தைக் காட்டுகிறது.
ஆயிரங்கதைகள்எழுதப்பட்டாலும் கிராமப்புறத்திலும்,நகர்ப்புறத்திலும் தொடர்ச்சியாக நிடைபெறும் மதக்கலவரத்தின் தாக்கத்தில் உருவான இப்படைப்பு சமூகத்தினருக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
5.இதுதான் விதியா?
மரம் வளர்க்க மனிதன் மறந்தாலும் மரம் வளர ஆசிரியர் கதை அமைப்பது அரிதானது.வலுவான கதைக்களம் அமைத்து ஆசிரியரின் கதையின் முதலும் முடிவும் மனிதநேயமற்ற சமுதாயத்தினை புரட்டிக்காட்டுகின்றன.
சிறுகதை அமைக்கும்போது ஆசிரியர் நின்றுபேசுவதுபோல அமைப்பது மிகவும் குறைவு. காரணம் கதை நடையுடன் பின்னிப்பிணையும்போது ஒரு இடத்தில் கதைத் தொய்வு ஏற்படும். மனிதன் தன் சுயநலத்திற்காக வாழ்வதை ஆசிரியர் மறைமுகமாகக் காட்டுகிறாரோ என்றுகூடத்தோன்றுகிறது. பாத்திரப்படைப்புகள் முக்கியமாக மரத்தை மட்டும் எடுத்திருப்பதால் மீதி கதைப்பாத்திரங்கள் அவ்வளவாகக் கதையில் பேசப்படவில்லை. இன்னமும் எழுத்தாளர் தனது கதையினை வெளிப்படையாகச் சற்று அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.
6. குருவிக்கார குமாரு
கதைதலைப்புக்கும்,கதைக்கும் பொருந்தாத தலைப்பை ஆசிரியர் அளித்துள்ளார். குருவிக்காரன் என்பது குறவன் இனத்தைக் குறிக்கும்.இங்கு கதை நிகழ்வு அவ்வாறு அமைக்கப்படவில்லை.குருவி இனத்திற்காக சொந்த உறவையே அடித்து வீழ்த்திய குமாருக்காக அமைக்கப்பட்டுள்ளது. தலைப்பை வைத்துப் படிப்பவருக்கு வேறுபாடாகத் தோன்றும்.
இங்கு கதைக்கரு ஆணின் சிற்றின்ப ஆசைக்காகப் பலியாகும் குருவிகள் குறித்தும், சமூகத்தில் நிலவிவரும் பொய்மையான பழக்கத்தை ஆசிரியர் படைத்துள்ளார். ஒரு சிறுவனின் இயல்பான குழந்தை உள்ளத்தைக் காட்டிய ஆசிரியர் பாதகம் செய்பவரைக்கண்டால் என்ன செய்யவேண்டும் என்பதை வெளிக்காட்டுகிறார்.ஆனால் குடும்பத்தில் இதுபோலச் செய்தால் குழப்பம்தான் ஏற்படும். ஆணாதிக்கத்தின் செயல்பாடு அவலட்சணமாக ஆசிரியரால் அரங்கேற்றப்பட்டுள்ளது. வாழ்க்கை என்பது பாலியல் சார்ந்தது அல்ல என்பதை உணர்த்தும் தெளிவான கருத்து பரிமாறப்பட்டுள்ளது.
7. எங்கேயும்,எப்போதும்
பொதுவாக ஆண் எழுத்தாளருக்கு பெண்ணின் நிலையை உயர்த்திக்காட்டி எழுதுவதுதான் பிடிக்கும்.ஆனால் அது நடைமுறையில் ஈடேறுவது என்பது நடக்காது என்று தெரிந்தும் சில கதைகள் வெளிச்சம்போட்டுக்காட்டப்படுகின்றன.அத்தகைய கதைகளுள் இதுவும் ஒன்று.இறுதியில் முடிவு என்பதே இல்லாமல் போய்விடும் நியை ஒத்த கதைகளுள் இக்கதையும் ஒன்றாகிவிட்டது.கதையில் முன்னோக்குநிலை இன்னமும் ஆழமாக அமைந்திருக்கலாம்.பெண் எப்போதும் பாதுகாப்பாக வாழ வேண்டியவள் என்ற கருத்து இக்கதைவழி உணர்த்தப்படுகிறது.
கதைக்களம் 3 வெவ்வேறுநாடுகளில் நடப்பதை இணைத்துக்காட்டியிருப்பது ஆசிரியரின் விரிந்த மனச்சிந்தனையைக் காட்டுகிறது.கதாபாத்திரங்கள் உயிருடன் இருப்பதுபோன்ற மனப்பிரமையினை ஏற்படுத்துவது திறமையான எழுத்தாளருக்கு ஒரு கலை. அத்தகைய படைப்பாற்றல் உரையாடும் திறனுடன் அமைக்கப்பட்ட கதை வாசகரின் உற்சாகத் திறனுக்கு ஊட்டம் தருவதாக அமையும்.
எம்மதத்திலும் பெண்ணிற்கு தனிப்பாதுகாப்பு அமைக்கப்படவில்லை.பெண் பாலியல் போகப்பொருள்தான் என்ற நடைமுறைச்சமூகக்கண்ணோட்டத்துடன் அமைக்கப்பட்ட ஆணாதிக்க ஆசிரியரின் வெளிப்பாடாக இக்கதை அமைகிறது.
8.தலபுராணம்
பெண் ஆணின் வரையறைக்குட்பட்டவள்.பெண் முன்னேற்றம் தேவை என்ற சமுதாயச்சிந்தனையோடு வடிவமைக்கப்பட்ட வேறுபட்ட கோணத்தின் பாத்திரப்படைப்பின் முழுவடிவம் தலபுராணம்.பொதுவாகப் பெண்ணில்லாத கதை பார்ப்பது அரிது.திரைப்படத்திலும் இதே நிலைதான் உள்ளது. ஒரு கற்பினை வைத்தே கதை எழுதுவதுபோல ஆசிரியரும் கற்பு வைத்தே ஒரு கதையினை அமைத்துள்ளார்.கதை படிக்கும் விறுவிறுப்பை கற்புப் பெண்ணரசி அளிக்கிறார் எனக் கருதலாம்.பொதுவாகத் தலபுராணம் 80-100 பக்கஅளவில் அமையும் புத்தகமாக்க் கோவில் வாசலில் விற்கப்படும்.மேலும் ஆராய்ச்சியாளர்களுக்கு அங்குள்ளவர்கள் இலவசமாகத் தன் சொந்தச் சரக்குகளை ஏற்றிக்கூறுவர் என்பதை விளக்கும் கதை இது.
• கூல்டிரிங்க்ஸ் நல்லதல்ல
• தட்டில் காசு விழுந்தால்தான் வாய் திறக்கும்
• பெண் போற்றி வாழ்தல்
போன்ற கருத்துகள் கதை வழியே ஆசிரியர் புரிய வைக்கிறார்.மகேசுவரிக்கிழவி உருவாக்கம் தெளிவான படைப்பு.
தீவினை செய்பவன் தண்டிக்கப்படுவான் என்ற கொள்கை இக்கதையில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
கதையின் உச்சக்கட்டப் பாட்டி பாத்திரப்படைப்பு சிலையின் பிரதிபலிப்பு உண்மை ஆசிரியரின் கதைப்பின்னலுக்கு வலுவான ஆதாரமாகிறது.
பெண் பாலியல் பொருளல்ல என்ற கருத்து மக்களால் பேசப்படவேண்டும் என்ற ஆசிரியரின் உயரிய நோக்கம் பாராட்டுக்குரியது. ஆனால் எல்லாத் தலபுராணமும் மாற்றிச் சொல்வதல்ல. ஆசிரியரின் 500 வருட பழமை வேதாந்தம் தவறானது.
9. அவள் அப்படித்தான்
பெண் படுக்கையறைக்கும்,சமையலறைக்கும் ரன் எடுத்தே பழக்கப்பட்டு இன்று அலுவலறையையும் சேர்த்து பந்தாடிக்கொண்டிருக்கிறாள்.
இருந்தும் ஆணாதிக்கம் கொண்டவர் இருக்கும்வரை திருந்தாத சமூகத்தைக் காண இயலுகிறது.
குடும்பம் என்ற மிதிவண்டியில் இரு சக்கரமும் ஒரே பாதையில்போனால்தான் வண்டி ஓடும்.இக்கதையில் பொறுப்பை உணர்ந்த பெண் கணவனுக்கும்,குழந்தைக்கும் வாழ்வதைச் சித்தரித்துள்ள ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.காரணம் முழுமையான ஆண் சமுதாயம் மாற்றம்பெற்றால்தான் உலகம் திருந்தும் என்பதை உணர்ந்து படைக்கப்பட்ட ஆணினை எள்ளல் செய்யக்கூடிய,பெண்ணின் நிலை கண்டு வருந்திய கதையின் பின்னணி சிறப்பானது.
10.சுத்தம்
வயசாளி என்ற சுதந்திரம் பெயர் கொண்ட அற்புதமான பாத்திரப்படைப்பின ஆசிரியர் அரங்கேற்றி இருக்கிறார்.
சுதந்திர இந்தியாவின் இலஞ்சக்கறைபட்டு யாரும் துடைக்க நாதியற்ற நிலையில் காந்தியின் ஃபோட்டோவினை வைத்தும்,காந்திஜெயந்தியின் பெயர் கொண்டும் திருந்தாத சமுதாயத்தைச் சிறுகதை என்ற நெம்புகோலினால் திருத்தப் பார்க்கும் ஆசிரியரின் முயற்சி கானல்நீர் போன்றது. சுதந்திரம் பெயர் வைத்துவிட்டால் என்ன மக்கள் திருந்தவா போகிறார்கள் என்ற ஆசிரியரின் உள்ளக்கிடக்கை அறைக் குப்பை மனதைப்போலக் காட்டுகிறது.
இன்னொரு காந்தியின் பிறப்பு தேவை என்பது கதையின் கருதுகோளாக இருக்குமோ என எண்ணத்தோன்றும் அருமையான கதைக்களத்துடன் கற்பனைநயம் நிறைந்த கதை.
11.விபத்து
ஆசிரியரின் மிகச் சிறிய விபத்தினால் திருந்தலாமா என எண்ண வைக்கும் சிறுகதை இது.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்.ஆனால் மனைவி சொல்லே மந்திரம் என்று வாழ்பவரின் வேதனை கலந்த கதை இது.
மனைவியின் பேச்சைக்கேட்டு முதியோர் இல்லத்திற்குப் பெற்றோரை அனுப்பும் பாத்திரத்தின் அவலச்சுவையை இன்னமும் வெளிக்காட்டியிருக்கலாம்.பெரியோர் என்றுமே பெரியோர்தான் என்பது தனது குழந்தைகளுக்குக் கடைசிவரை நன்மை செய்ததைக்காட்டியதன்மூலம் வாழும் வழிமுறையினை அபி தெளிவாக உணர்த்திக்காட்டியுள்ளார்.
முனைவர் பி.ஆர் இலட்சுமி
தமிழ்த்துறை வல்லுநர்
சென்னை.

களஆய்வு மேற்கொள்ளப்பட்டால் ஆசிரியர் குறித்த தகவல்கள் முழுமையாகக் க

நீயும் நானும் யாரோ
இன்று நினைவில் வாழக் கற்றது நன்று
பள்ளியிலே ஒன்றானோம்
உயர்கல்வியிலே சாதியின்றி
பாடி மகிழ்ந்தோம்!
ஆசிரியர் வகுத்த வழி
ஆண்டாண்டு கடந்தாலும்
ஆலமரமாய் வாழ்ந்திடுவோம்!
கிளை போல விழுதுகளாய்
இலைதோறும் மனிதர்களை
இமைபோல காக்கும்
மருத்துவத் தொழிலைச் செய்தே
நாங்கள் பிணி இல்லா
புது சமுதாயம் படைக்க
நாமும் புறப்படுவோம்!
இலஞ்சம் இல்லா
மருத்துவப் படிப்பு
உருவாக்க எங்கு சென்றார்
சட்ட அதிகாரி?
பிணி அறுக்கும் தொழில் காண
பண முதலைச் சமுதாயம் தேவையில்லை!
திறமை கொண்ட சமுதாயம்
திறனுடனே முன்னேற
இலஞ்சக் களையை ஒழித்துவிட
ஒன்றிணைந்து புறப்படுவோம்.

கவிதை என்றால் ஒரு பாடுபொருள் இருக்கவேண்டும்.தங்களது பாடுபொருள்-ஊனமில்லாதவர்கள் இருக்கும் மதம் என்ற பொருளா! அப்படியாயின் மதம் அழி என்ற தலைப்பு வேறாகி விடுகிறதல்லவா! தலைப்பிற்குத் தகுந்த கவிதை தேவை.எனினும் முயற்சி செய்தமைக்கு வாழ்த்துகள்.
முனைவர் பி.ஆர்.இலட்சுமி
பி.லிட்.,எம்.ஏ(தமிழ்,மொழியியல்.,)புலவர்.,எம்ஃபில்.,டிசிஇ.,பிஎச்.டி.,(பிஜடிசிஏ)(எம்.ஏ).(ஜர்னலிசம்)

ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசும் தருணங்கள் குறைவாக இருக்கும்போது மட்டுமே விவாகரத்து அதிகம் ஏற்படுகிறது.
பேசினால் சண்டை வருகிறது என்று சொல்பவர் மிகுதி.அதற்குச் சரியான காரணம் ஈகோ.விட்டுக்கொடுத்து மௌனமாக சில இடங்களில் சென்று விட்டால் வாழ்க்கை ஆனந்தம்........

lakshmi.P.R கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com

புதிதாக இணைந்தவர்

மேலே