m. palanivasan- கருத்துகள்

முன் நான் பதிந்த கருத்துக்கான விளக்கம்:

வென்றெடுக்க வேண்டியது நேர்மையான நன்மைகளை ... போக வேண்டியது அமைதிவழி... நிலைக்க வேண்டியது இந்திய தேசம்... மறக்க வேண்டியது தமிழ்தேசம்..

புரட்சி என்கிற பெயரில் வன்மச்சிந்தனை வளமாக இருக்க மூளைச்சலவை நாட்டினில் நடப்பது நன்றாகத் தெரிகிறது. கட்டுரையின் வரியெங்கும்... சற்று நிதானி நண்பா... வேண்டுகோளாய் வைக்கிறேன்... வேதனை கொள்ளற்க... விடியலை நோக்கிய பயணத்தைத் தொடர்க... விவேகமுடன் .... வென்றெடுப்போம்.

பார்த்து நடபெண்ணே... (படம் பார்த்து கவிதை) பற்றி விமர்சனம்.

கவிதையாக பார்க்கும்போது தங்கள் பணி நன்று. ஆயினும், ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ளவே இனிவரும் எனது வரிகள்: பெண்களை தெய்வமாகப் பார்க்கும் காலமிருந்த பாரதி காலத்தில் நம்நாட்டில் அப்பட்டமான பெண்ணடிமைத்தனமிருந்தது. அதை அவர் சாடினார். பெண்களுக்கு விழிப்புணர்வையும், சுயத்தன்மையைத் தூண்டிவிடவும் பெண்விடுதலையைப் பாடினார். அதுமட்டுமன்றி தானும் புரட்சிகரமாக வாழ்ந்துகாட்டினார். அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, இன்று ஆணுக்கு நிகராக, அவர்களையும் தாண்டியுள்ளதாக பேசப்படும் பெண்ணினமானது எவ்வளவு அலங்கோலப்பட்டிருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்களா? தாங்கள் போகப்பொருளாக பார்க்கப்பட வேண்டும் ... ஆண்கள் தங்களை வட்டமிடுதலையோ.. அல்லது அடையத்திட்டமிடுதலையோ... தூண்டிவிடும் வகையிலேயே பெண்கள் நடக்கின்றனர் என்பதை தாங்கள் அறிய மாட்டீர்களா? இங்கே நான் கற்புநிலை என்கிற விஷயத்தை முன்வைக்கவில்லை. “தப்பை தப்பே இல்லாமல் செய்தால் , தப்பு தப்பே இல்லை ” என்கிற காலகட்டத்தினைத் தாண்டி.... எது தப்பு? எது சரி? என்கிற ஆய்வுகள் நடக்கும் இப்போது ஆண்கள் மட்டும் காமவெறி பிடித்தலைபவர்கள் போல சித்தரிக்கிறீர்களே இது நியாயமா? (உங்களைப் போன்றே பலரும்). இதை மட்டும் நான் ஆதரிக்கமாட்டேன். இதற்கு திட்ட வேண்டுமெனில் ... 9841950033.

எனது வரிகள்:

பார்த்து நட பெண்ணே...

நாங்கள்
வீரமங்கை வேலுநாச்சியார்
ஜான்ஸிராணியிடம் கண்டது
வீரம்....
டாக்டர் முத்துலெட்சுமியிடம் கண்டது
புரட்சி... கருணை...

பச்சைப் புடவைக்காரிகையிடம்
பார்ப்பதெல்லாம்
பரவசத்தைத்தூண்டும் காமத்தையன்றி வேறில்லை...

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு விடியலைக்காட்டும் வரிகள்... நன்று...

ரசிக்க மற்றும் சிந்திக்க வைக்கும் கருத்தினைப் பதிவு செய்த திரு.மதிபாலன் அவர்களுக்கு நன்றி.....

நெகிழும் நன்றி

பொருளாதாரத்தினை மட்டுமே குறியாய்க் கொண்டு உழைக்கும் இன்றைய இந்தியவாழ்க்கையில் இதைவிட வேறென்ன எதிர்பார்க்க முடியும் ?
அறிவியல் சார்ந்த படிப்புகள் அதிகமாகிவிட்டன... இழந்தது என்னவோ சுய அறிவை....

இதைவிட அதிகப்படியான சோகங்களை நான் சுமந்து விட்டதனால் , மற்றவர்களுக்கு வந்ததைப் பார்த்துவிட்டதனால் எனக்கு இது மிகப்பெரிய துயரமாகத் தெரியவில்லை . ஆனாலும் இக்காலத்தில் இந்த கண்ணீர் வாழ்க்கைக்காக நெஞ்சம் நெகிழும் தங்களின் மனித நேயம் என்றும் பாராட்டத்தக்கது. எழுத்தில் உள்ள பிழைகளை மெல்ல மெல்ல குறையுங்கள்.

காதல் தோல்வியின் வழியை உணர்ந்துகொள்ளும் அதே மனத்தால்... தேற்றிகொள்ளும் வழியையும் காண்பாய்...

எமது...ஆக்கத்திற்கு கிட்டிய ஊக்கத்திற்கு நன்றி நவில்கிறேன்...

எமது...ஆக்கத்திற்கு கிட்டிய ஊக்கத்திற்கு நன்றி நவில்கிறேன்...

தாய்மை என்பதை தலைமேலே கொண்டாடும் தனித்துவமான நபர்கள் இன்னும் உள்ளனர் என்பதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி. - வாசன்

இந்திய சமூக நதி இன்னும் காய்ந்து போகவில்லை என்பதை தங்கள் கூற்று மெய்ப்பிக்கிறது.நன்றி - வாசன்.

எனது நன்றி மிகத்தாமதமானதுதான். மன்னிக்கவும். ஆனால், உள்ளார்ந்த உண்மையின் வெளிப்பாடு... மீண்டும் நன்றி...வாசன்

எனது கருத்தை விட அதற்கான காரணத்தை இரத்தினச் சுருக்கமாக தாங்கள் தெரிவித்திருப்பது (அநீதியே நீதிபதியாக இருப்பதினால் ...)...மிக அருமை ... நன்றி ...

அன்பும், தமிழ்நாட்டின் மேல் தாங்கள் கொண்டுள்ள அக்கறையும் எம்மை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. மக்களின் கோரிக்கைக்காகவாவது அன்பாளர் அப்துல் கலாம் அவர்கள் இத்தகைய நிலைப் பாட்டில் அடியெடுத்து வைத்தால் நிச்சயம் மறுமலர்ச்சி ஏற்படும் என்பது உறுதி.
இக்கோரிக்கையை கலாம் அவர்களிடமே வைக்கும் நோக்கில் அவருக்கும் அனுப்பியுள்ளேன்.. இதற்கும் மறுதினமே அவர் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார். எனக்கு உள்ளூர மகிழ்ச்சி. (அதைப் படித்தபின்னர்தான் மனம் மாறினார் என கூறமாட்டேன். ஏனென்றால் அதை படித்தாரா எனபதே தெரியாது.)
நம்மைப்போன்றவர்கள் இதையே அவரிடம் முன்னிறுத்தி மக்கள் இயக்கமாக மாற்றினாலென்ன?

m. palanivasan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com

புதிதாக இணைந்தவர்

மேலே