நிரலன்- கருத்துகள்

இதற்கு நேரடியான பதில் கூறுவது கடினம். பெண்ணுரிமை என்ன என்பதை ஒரு ஆண் விளக்குகிறான் என்றால் அதில் முழுமையான பெண்ணுரிமை இருக்க வாய்ப்பு இல்லை.

தாலி, மெட்டி, நெத்தி போட்டு, விதவை கோலம், பர்தா என பல பெண்ணடிமை சின்னங்கள் இன்றும் இருக்கும் பட்சத்தில் பெண்ணுரிமை இன்றளவும் ஏட்டில் மட்டுமே இருப்பதாக தான் தோன்றுகிறது.

மது ஒழிப்பு என்பதை விட மது குறைப்பு தான் தேவை.

மது, முற்றிலுமாக ஒழிக்கபடவேண்டியது இல்லை. ஒழிக்கப்பட்டால், அது இதைவிட பேராபத்துகளை தரும்.

சாதி ஒழிய இரண்டே வழிகள் தான் உள்ளது.

1 . சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டு, ஒடுக்கப்பட்ட சமுகம் மற்ற சமூகங்களுக்கு நிகரான, சமமான நிலைக்கு வித்திட்டால் சாதிகள் ஒழியும். இங்கே நிகரான, சமமான என்பது பொருளாதார அடிப்படையில் இல்லை, மனிதனக்கு மனிதன் அளிக்கும் மனிதநேய சம உரிமையாகும்.

2 . கலப்பு திருமணம் செய்வதும், கலப்பு திருமணம் செய்து வைப்பதாலும் சாதிகள் வேகமாக, வேரோடு சாயும்.

சாதி, மதத்தினை காப்பாற்றுகிறது, மதம் பெண்ணடிமை தனத்தை காப்பாற்றுகிறது.

சாதியினை அழித்து, மதங்களை ஒழித்து, பெண் விடுதலை அடையும் நாளே, உண்மையான சுதந்திர நாள். விழிதுருப்போம் விடியலுக்காக.

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே...
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே...

நன்றி நட்பே! நிச்சயம் இன்னும் எழுதுவேன்...

காதலை தாண்டிய ஒரு வாழ்வை நோக்கி...

2011-ல் வெளியான "மயக்கம் என்ன?" பிறகு, பித்து பிடிக்க வைக்கும் ஒரு காதல் திரைப்படம் வரவேயில்லை. அதை தற்பொழுது "மாலை நேரத்து மயக்கம்" நிவர்த்தி செய்துள்ளது.

வழக்கமான செல்வராகவன் திரைப்படம்.

செல்வராகவன் இரசிகராக இருந்தால் நிச்சயம் இந்த திரைப்படம் பிடிக்கும். சுத்தமாக செல்வராகவன் திரைப்படங்கள் பிடிக்காதவர்களுக்கு நிச்சயம் பிடிக்காது.

திரைமொழியில் பேசமுடியாத பல விஷயங்களை செல்வராகவன் மிக திறமையாக திரைக்கதைகளில் புகுத்துவார். அதை போலவே, இந்த திரைப்படத்திலும் விவாதத்துக்குரிய ஒரு முக்கிய விஷயத்தை மையமாக வைத்து கதை எழுதியிருக்கிறார்.

:) ஏதோ தோன்றி, ஏதோ எழுதி விட்டேன் நண்பா.

காதல் எனும் மகுடம் கொண்டு,
அடுக்கு மொழி வார்த்தைகள் கோர்த்து,
கவி பாடும் காதலாரா நீ!

அந்த டாப் நமக்கு தான் நண்பா...


நிரலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே