ரா நவீன் குமார்- கருத்துகள்

இல்லை என்பது என் கருத்து. தன் மகனுக்கோ மகளுக்கோ தகுந்த வரனை தேடவேண்டியது பெற்றோர் கடமை, தேர்ந்தெடுக்க வேண்டியது மணமக்களின் உரிமை. இருவர் உண்மையாக விருப்பப்பட்டிருந்தால் அவர்களின் உணர்வுகளை மதித்து சேர்த்து வைக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகிறது. யாரையும் விருப்பவில்லையெனில் தகுந்த துணையை தேர்தெடுத்து மணமுடிக்க வேண்டியதும் அவர்களின் கடமை. எனை கேட்டால் பெற்றோரின் கடமை பிள்ளையை நன்முறையில் வளர்த்து சமூகத்திற்கு கொடுக்க வேண்டியது தான். பிள்ளைகள் கடமை பெற்றோரை பூஜித்து அவர்களின் சொற்களை ஏற்று நடப்பது தான். ஆம், அவரவரின் கடமை அறிந்து நடந்தால் துன்பமில்லை.

கலாச்சாரமும், நாகரிகமும் மாற்றம் கொள்ள வேண்டியது தான். ஆம், நம் கலாச்சாரம் நாகரிகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமே நினைப்பதும், மாற்றுவதும் தேவையெனில் தவறில்லை. ஆனால் நம் கலாச்சாரம் மற்றும் நாகரிகம் விடுத்து மேற்கத்திய கலாச்சாரம் கடைபிடிப்பது சரியானதல்ல.

//அவன் எந்த சாமியை கும்பிட்டானாே..
இவன் எந்த சாமியை விட்டுவிட்டானோ தெரியவில்லை...

ஒன்று மட்டும் நிச்சயம்.!

அவன் வளர்க்கப்படுகிறான்..!!!
இவன் செதுக்கப்படுகிறான்.!!!!
//
இயற்கையான நெஞ்சை துளைக்கும் வரிகள்.அருமை தோழா.

கலை ஆர்வலர்களின் நிதர்சனம்நிதர்சனம். அருமை தோழா..

மீண்டும் பிறப்பாயா?
கண்களால் தேடுகிறேன்.
கண்ணீரால் வாடுகிறேன்

//நன்று. தொடர்ந்து எழுதுங்கள்

அழகு, கவிதையும், நடையும் கவியும் பொருளும். தொடர்ந்து எழுதுங்கள் நட்பே

நன்று. ஆனால் எதிர்மறை கவிதையோ என்று தோன்றுகிறது, இவ்வார்த்தைகளை காணும் போது

என்னை புரிந்து கொள்ளவோ அணைத்து செல்லவோ
மயிரளவுடைய உயிரில்லை அந்த உலகிலே,

ஆம் உண்மை தான் நமக்கென உள்ளவர் ஒரே கடவுள் தான். கடவுள் நம்பிக்கை இல்லை எனில் தர்மம் தான் நம்மை அணைக்க உள்ள ஒரே உயிர் இந்த உலகில்.

வெண்மை குமிழிகளை தன்மையாய் படம் பிடித்துள்ளீர். நன்று

அழகு வரிகள்
இனிய ஓசை
காதல் மிச்ச
கவிதை உச்சம்.

அருமை தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி உதயா அவர்களே. தங்கள் வாழ்த்துக்களால் அகமகிழ்தேன்

நன்றி தோழரே.. தங்கள் கருத்தினால் மனம் உவகை கொண்டது .

நிலவை போலவே அழகிய குளிர்ந்த வரிகள்.
வாழ்த்துக்கள் ..

நன்றி முஹம்மத் சர்பான் அவர்களே... வரவுக்கும் கருத்திற்கும்...


ரா நவீன் குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே