ஸ்வஸ்திக- கருத்துகள்

நெடுநேரம்
காத்திருந்தார் கடவுள்
வரவில்லை
கட்டளைதாரர்!

விழிப் பூக்கள்
விண்ணப்பிக்கும் மனுக்கள்
கண்ணீர்

சட்டங்கள் சில சமயம்
தூங்குகின்றன ஆனால்
என்றும் மடிவதில்லை

விழித்தெழு
விரிகின்ற மலரெல்லாம்
விழிதிறந்து உனைத்தேடும்
வழிகின்ற செந்தேனில்
வாயில்கள் நிறைந்தோடும்
வாழ்கின்ற நாளெல்லாம்
வரமென்றெ நீ பாடு
வசந்தங்கள் வரவேற்கும்
வாலிபமே நீதானே !
வாழ்வை வளமாக்க
வலிமையுடன் எழுந்து நில்
வருந்துயரை மடைமாற்று
வளம்யாவும் உனதே!

அயல் நாட்டில் தங்கியதால்
அடைகாக்கிறேன்
நினைவுகளை


ஸ்வஸ்திக கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே