வசிகரன்க என்கிற சிவகுமார் க- கருத்துகள்

உங்கள் கருத்துக்கு நன்றி . என்னை பொறுத்தவரையில் சிவம் வைணவம் என்பது வேறல்ல ,ஒன்றே . அடுத்த முறை வைணவம் (நாலாயிரதிவ்விய பிரபந்தம் -- ஆழ்வார்கள்) பற்றியும் பாப்போம் . தகவல்களை திரட்டியவுடன் பதிவிடுகிறேன் . எனக்கு திருஞானசம்பந்தரையும் பிடிக்கும் , திருமங்கை ஆழ்வாரையும் பிடிக்கும் . இருவரது தமிழும் இனிமையானது . ஆழந்து துய்க்கத்தான் மக்களிடம் நேரமும் , மனமும் இல்லை .

ஐயா ,சிவ யோக கலைகள் பற்றிய முறையான வகுப்புகள் இருப்பதாக தெரியவில்லை . ஆனால் இவைகள் ஆதினங்களில் கற்றுத்தரப்படுகின்றன . மிகவும் பயனுள்ள உடலியல் முறை . சிவத்தோடு மெய்யும் (உண்மை மற்றும் உடல் ) ஊன்றி தழைக்க உதவும் . மனம் ஒரு நிலைப்படும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை .வரும் நாட்களில் நான் திருமந்திரத்திலிருந்து சில பாடலைகளையும் அவற்றின் எளிமையான செய்முறைகளை விளக்க உள்ளேன் . அப்போது சில நூல்களில் பெயர்களையும் அவற்றை எழுதிய ஆசிரியர் பற்றிய விவரங்களையும் தரவுள்ளேன் . அதன் மூலம் உங்களுக்கு மேலும் பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன் . நான் அறிந்தவரையில் திருமந்திரம் ஒரு அற்புதமான நூல் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை . நன்றி !

கருத்துக்கு நன்றி . பல மொழிகளை பயின்றால் தானே நம் மொழியின் அருமை பெருமையும் , மற்ற மொழியில் இருக்கும் நல்ல கருத்துகளை நம் மொழிக்கு கொண்டுவரவும் முடியும் . தமிழில் கவிதைகள் ஏராளம் , கருத்து செறிவும் அதிகம் . உலகத்தரமான சிறுகதைகள் , நாவல்கள் இலக்கியப்படைப்புகள் இருக்கின்றன . ஆனால் அவை ஆங்கில உலகின் உயரத்தை உச்சத்தை இன்னும் தொடவில்லை . அதற்கு காரணம் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் உலகத்தரமுள்ள எழுத்தாளர்கள் தமிழில் இல்லை . இது ஒரு வருத்தமான கவலைப்படவேண்டிய செய்தி . நல்ல மொழி பெயர்பாளர்கள் இருந்திருந்தால் கீதாஞ்சலிக்கி முன்பே தமிழ் நூல்கள் எத்தனையோ நோபல் பரிசையோ , புக்கர் பரிசையோ வென்று குவித்திருக்கும் எனபதில் எள்ளளவும் ஐயமில்லை .

உண்மை . வாசித்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி . நேரமிண்மை காரணமாக என்னால் மற்றவர்களின் படைப்புகளை குறைந்த அளவே படிக்கச் முடிகிறது . அதனால் நான் அதிக அளவில் கருத்து பகிர்வதில்லை , நன்றி

நன்றி . அடுத்த உரையாடலில் எல்லா பழமொழிகளையும் விளக்குகிறேன் நண்பரே .

நன்றி நண்பரே . தட்டச்சு கைதவறுதலே . விளம்பு என்பதே சரி யான பதம் . சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

நன்றி நண்பரே . என்னுடைய ஒரு சிறு முயற்சி . தெரிந்ததை படித்ததை பகிர்கிறேன் . தொடர்வேன் .

நடமாடும் நதிகள்
புடம் போட்ட
ஹைக்கூ வரிகள்
சிந்திக்க சிலாக்கிக்க
சில நொடிகள் .

நன்றி ! வசிகரன் .க

மரணத்தில் பறை , மனதின் கறை போக்கும் நல்ல அறை , திமிர் பிடித்த கன்னத்தில் ஒரு அறை . கவிதை நன்று .

ரௌத்திரம் சவுக்கடி
கோபம் கொப்பளிகிறது
குருதி கொதிக்கிறது தெரிகிறது
அருமை ..

அருமையா கருத்து ஓட்டம் ,சொல்லாடல் . ஆழ்ந்த சிந்தனை .உங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி .

ஏமாற்றி பிழைப்பவர்கள் மாறாதவரை எதுவும் நடக்காது .அரசியலில் மீனவனும் மாணவனும் . கவிதை அருமை .


வசிகரன்க என்கிற சிவகுமார் க கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே