ஒரு ஊர்ல, Oru Oorla

Tamil Cinema Vimarsanam


ஒரு ஊர்ல, Oru Oorla விமர்சனம்
( Vimarsanam)

நிறைய புதுமுகங்களின் படங்கள் வெளியானாலும், தனக்கென ஒரு சிறப்பான இடத்தை ஒரு சில படங்கள் தக்கவைத்துக்கொள்கின்றன.அந்த வரிசையில் இப்படமும் முதல் நிலையில் இருக்கிறது.படம் முழுவதையும் சரியான புது முகங்களை வைத்து உருக்கமாக படமாக்கியுள்ளார் வசந்தகுமார்.

நடுத்தர குடும்பப்பாங்கான, தரமான படம். உள்ளத்தை உருக்கும் கதை.

தேரி என்ற பெயரில் வெங்கடேஷ் புதுமுகநாயகனாக, அடுத்த பருத்திவீரனாகவே நடிப்பில் கலக்கியுள்ளார்.தன் அண்ணனுக்கு பிறந்த குழந்தை அம்மாவைப்போல் உள்ளது என்பதற்காக அதன் மீது பொழியும் பாசத்தில் பாசக்கடலாய் மாறுகிறார்.பேபி சௌந்தர்யா தேரியை தேரிப்பா என்று அழைப்பது அழகு.

தேரி வசிக்கும் ஊரில் நேதா டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக்கு வரும் போது தேரிக்கு நேதா மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.

பருத்திவீரன் குடியைவிடவில்லை ஆனால் இந்த தேரி பருத்திவீரன் தன் பாசக்கடலுகாக குடியைவிடுகிறான்.
வாழ்கை சுமூகமாக சென்றது ஒருநாள் பாசக்கடலின் சொந்தக்காரி பேபி சௌந்தர்யாவை காணவில்லை.
இதனால் தேரி என்ன ஆனான்? சௌந்தர்யா எங்கு போனால்? என்பதை மிகவும் உருக்கம் கலந்த பரபரப்புடன் மீதி படத்தில் காணலாம்.

ஒரு ஊர்ல..,- "தேரிப்பா-தேறிய அப்பா"

இப்படத்தை பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்து பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-04-02 17:02:00
2 (2/1)
Close (X)

ஒரு ஊர்ல, Oru Oorla தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே