பிசாசு

Pisasu Tamil Cinema Vimarsanam


பிசாசு விமர்சனம்
(Pisasu Vimarsanam)

இயக்குனர் மிஸ்கின் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், பிசாசு.

இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நாகா, ஹரிஷ் உத்தமன், ராதாரவி, பிரயகா மார்டின், கல்யாணி நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நரம்பிசைக் கருவியை மீட்டும் இளைஞனாக நாகா, ஒருமுறை சாலையில் விபத்திற்குள்ளான நாயகி பிரயகா மார்டினை காப்பாற்ற முயன்று தோல்வி அடைகிறார். பிரயகா மார்டின் அழகில் மயங்கி அவளின் ஒரு கால் மிதியடியை மட்டும் தன்னுடன் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்கிறார்.வீட்டில் தனியே இருக்க சில நாட்களில் ஒரு வித பயத்தை உணர தன் நண்பனையும் தன்னுடன் தங்க அழைக்கிறார். மிரட்டும் விதத்தில் விறுவிறுப்பான நிகழ்வுகள் நிகழ அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கும் போது நாகாவின் அம்மாவும் இப்பிரச்சனையில் சிக்கிகொள்கிறார்.

இதன் பின் அம்மானுஷ்ய சக்தி செய்யும் வேலைகளில் நாகா என்ன ஆனார்? என்பதையும், நாகா தன்னை பயமுறுத்தும் அந்த அம்மானுஷ்ய சக்தி யார் என்று அறிந்து அதற்க்கு தீர்வு கண்டாரா? என்பதையும் திகிலுடன் விறுவிறுப்பாக இப்படத்தில் காணாலாம்.

மிஸ்கின் கதை மற்றும் இயக்கம் சிறப்பு. திகில் பட வரிசையில் தனக்கான இடத்தை இப்படம் தக்க வைத்திருக்கிறது. நடிகர்கள் நடிப்பு கதாப்பாத்திரங்களில் ஒன்றி இருந்தது. தனக்கான கதாப்பாத்திரங்களில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

பிசாசு - திகிலுடன் பார்க்கலாம்.

இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை எழுத்து உறுப்பினர்கள்கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-12-19 11:58:24
5 (5/1)
Close (X)

பிசாசு (Pisasu) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே