பெண்ணை வர்ணிப்பது பெண்ணுக்குப் பிடிக்குமா ?
பெண்ணை வர்ணிப்பது பெண்ணுக்குப் பிடிக்குமா?
பற்பல யோசனைகளில் இருக்கும் ஆண் தன் உள்ளகிடைக்கையின் உணர்வுகளை ஐயத்தோடு எழுப்புகிறான் . அத்தனையும் கேட்டபின் பதில் சொல்கிறாள் பெண் இப்படி. இது ஒரு உரையாடல் கவிதை .
ஆண்: காற்றின் குரலோசை கேட்பதரிது
கடலின் அலையோசை கேட்கையில் இனிது
மொட்டுக்கள் பூப்பதை பார்பதரித்து
மெட்டுக்கள் கேக்காமல் இருக்கும் காதுகள் அரிது
வண்டுகளின் வருகையை வண்ணமலர் மறுக்குமோ
கண்டுகளிக்கும் கண்கள்தான்
காட்சிதனை வெறுக்குமோ
ஊடலில் பொங்குகின்ற
காதலும்தான் கசக்குமோ
ஆடலில் வருகின்ற வியர்வையும்தான்
மணக்குமோ - நீரை விட்டு மீனா
நிலவை விட்டு வானா
விரல் மீட்டா வீணை இசைக்குமோ
விரசமில்லா வர்ணனையைப்
பெண்ணினந்தாம் வெறுக்குமோ மறுக்குமோ ?
செப்படி சேல்விழியாலே
பெண்: காதல்ரசம் சொட்டும்
கவிஞனே - என் காதலனே
நீ வக்கணையாய் வாயுரைக்கும்
வார்த்தைகளை எக்கணை கொண்டு
தொடுத்தாலும் ஏகாந்தம் தானே எனக்கு..
இவன் மு.ஏழுமலை.
ரூபாய் 100
பெண்ணை வர்ணிப்பது பெண்ணுக்குப் பிடிக்குமா ? போட்டி | Competition at Eluthu.com