சேர்த்தவர் : Rosichandra5f2e81d21fa4f, 17-Sep-20, 10:16 pm

கவிதைகளில் கலைச்சொற்கள்

போட்டி விவரங்கள்

*இனிய அறிவிப்பு*

*தேடல் களம் அறக்கட்டளை*

நடத்துகிற
ஒவ்வொரு திங்கள்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிற தொடர் நிகழ்வான,

*கவிதைகளில் கலைச்சொற்கள்*

எனும் பொருண்மையில், சங்க இலக்கியக் கலைச்சொற்களைக் களமாடவைக்கும்,

*காணொளி கவியரங்கம்*

வருகிற *27. 09 .2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி* அளவில் நடைபெற உள்ளது.

எங்குமே நடைபெறாத புதிய முயற்சியை, நமது தேடல்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருவது, தாங்கள் அறிந்ததே.

அவ்வகையிலான இத்தொடர் நிகழ்விவ், கீழே கொடுக்கப்பட்டுள்ள 12 இலக்கியக் கலைச்சொற்களை
24 - வரிகளுக்குள் பயன்படுத்தி, சுவையான கவிதையைப் படைத்திடப் பாவாணர்களை அன்போடு அழைக்கிறோம்.

*தலைப்புச் சுதந்திரம் உங்களுக்கு உண்டு.*

நமது அரிய தொடர் இலக்கியப் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள, கீழ்க்கண்ட இணைப்பினைச் சொடுக்கி, தங்களின் பெயரினைப் பதிவிட்டு, பங்கேற்பினை உறுதி செய்து கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

*பதிவு செய்துகொள்ள சொடுக்க வேண்டிய இணைப்பு*

https://forms.gle/m5Q1d2tDxUazu8N29

அறிவார்ந்த பாவாணர்களின் பாக்களிலே, கொஞ்சி விளையாட வேண்டியக் கலைச் சொற்கள், அதனதன் பொருட்களோடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. *கவ்வை* - பழிச்சொல்
2. *காழகம்* - ஆடை 3. *குரம்பை* - குடிசை 4. *சகடம்* - வண்டி
5. *சிற்றில்* -
விளையாட்டு வீடு
6. *ஓர்வு* - சிந்தனை 7. *கங்குல்* - இரவு
8. *அசும்பு* - சகதி
9. *அத்தம்* - வழி, காட்டுவழி, பாலைவழி
10. *அயில்* - உண், பருகு, குடி
11. *அல்கல்* - நாள்தோறும்
12. *உறவி* - எறும்பு

மேற்கண்டக் கலைச் சொற்களைக் கவிதைக்குள் செதுக்கி,
*வருகிற 25.9.2020-க்குள், அனுப்ப வேண்டும்

*முயன்றால் விண்ணை தொடலாம்.* *வரலாறு நமக்காகக் காத்திருக்கிறது.* *அதன் பக்கங்களில் இடம் பிடிப்போம்.* *தமிழ்ப்பற்றோடு நமது பாசத்தை உலகறியச் செய்வோம்.*
*சாதனை அரங்கில் சந்திப்போம்.*

பாசத்துடன்,

*நந்திவரம் பா.சம்பத்குமார்* நிறுவனர் / தலைவர், தேடல்களம் அறக்கட்டளை.

தங்கள் கவிதையை அனுப்ப வேண்டிய புலன எண்
9080513099
மேற்கண்ட இணைப்பில் பதிவு செய்து பின் கவிதை மற்றும் தங்கள் பெயர் சேர்த்து புலன எண்ணில் அனுப்பவும்

பரிசு விவரங்கள்

பங்கேற்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ் மின்னஞ்சல் மூலமாக கிடைக்கும்

ஆரம்ப நாள் : 17-Sep-2020
இறுதி நாள் : 25-Sep-2020  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 27-Sep-2020

கவிதைகளில் கலைச்சொற்கள் போட்டி | Competition at Eluthu.com



மேலே