சேர்த்தவர் : Rudraah5fef5f69913a8, 19-Jan-21, 10:05 pm

கைகோர்க்கும் கவிஞர்கள்

போட்டி விவரங்கள்

வளரும் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு எங்களின் பொன்னான வணக்கங்கள்..🙏

ஒரு நிமிடம் ஒதுக்கி இதனைப் படியுங்கள். இது உங்களுக்காக எங்களின் முயற்சி. நமது தமிழ்நாட்டில் சினிமாத்துறைக்கு ஈர்ப்பு உண்டு. மற்ற பணித்துறைக்கும் ஈர்ப்பு உண்டு. எழுத்துத்துறைக்கு ஈர்ப்பு உண்டா? விரும்பிப் படிக்கும் வாசகர் உண்டா? வளரும் எழுத்தாளர்களுக்கு வீட்டிலும், நாட்டிலும் வரவேற்புண்டா?

இன்று பெரும்பாலான வளர்ந்து வரும் புது கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல், முன்னேயான பெயர்பெற்ற எழுத்தாளர்களுக்கே தமிழகத்தில் அங்கீகாரம் கிடைக்கிறது.. ஏன்?

புதுக்கவிஞர்கள் வெளியிடும் புத்தகங்கள் பெரும்பாலானோரை சென்றடைவதில்லை.. ஏன்?

இதழ்கள், செய்தித்தாள்கள் மற்றும் பெரும்பாலான பதிப்பகங்கள் நமது படைப்புகளை நிராகரிப்பது ஏன்?

வளரும் கவிஞர்கள் இன்று புத்தகம் போடுவது என்பதே அத்தி பூத்தாற்போல அரிதாகின்றது. இதிலும், அதன் விற்பனை ஓட்டத்தைப் பொருத்தே விற்போம் என்று உறுதியளிக்கின்ற பெரும்பாலான பதிப்பகத்தினர், அதனை விற்காமல், ₹6000 ரூபாய்க்கு ₹100 புத்தகத்தை நம் மீது கொடுத்துவிட்டு அடுத்த நபரை நோக்கி செல்கின்றனர்.. புத்தகங்கள் விற்பனையாக கொடுக்கப்படாமல், விசிட்டிங் கார்டு போலவே கொடுக்கப்படுகிறது என்பது வேதனையளிக்கும் விசியம்..

சரி.., இதழ்கள், பத்திரிக்கைகளில் இலக்கியப் பகுதியில் வெளியிடலாம் என்றாலும், அவர்களின் வரையறுக்கப்பட்ட தலைப்பிலும், பக்கத்திலும், ஆசிரியர் குழு திருத்தத்திலும் நமது இலக்கியங்கள் 60% சிதைக்கப்படுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை. அப்படியே ஆனாலும்,இதனையும் மீறி வெளியாவது குதிரைக்கொம்பாகவே உள்ளது..

ஆக, பதிப்பகத்தாரும்(சில பதிப்பகங்களை மட்டுமே குறிப்பிடுகின்றோம்), பத்திரிக்கைகளும் புதுக்கவிஞர்களுக்கும், வளரும் எழுத்தாளர்களுக்கும் உதவ முன்வரவில்லை..

இணையங்களிலும், செயலிகளிலும் வெளியிட்டாலும் அதுவும் பெரும்பாலானோர்க்கு சென்றடைவதில்லை.. எனவே இங்கேயும் நமது படைப்புகளின் பார்வை குறைகின்றது..

"தரமான படைப்புகள் மக்களால் வரவேற்கப்படும்" என்று எங்களிடம் பலர் கூறியிருந்தாலும், அதுவும் 70% நடைமுறைக்கு சாத்தியமற்றதாகவே உள்ளது.. அனுபவ உண்மை இது..

சரி... அப்போது நமது படைப்பை எங்கே, எப்படி வெளியிடுவது?

பரிசு விவரங்கள்

இதற்காக நாங்கள் சிந்தித்து, பல இதழ்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு கலந்து பேசினோம்.. இதன்மூலம் ஓர் தெளிவும், மகிழ்ச்சியான செய்தியும் கிட்டியது.. என்னவெனில், நம்மை போன்றோருக்கு ஏகப்பட்டோர் உதவ முன்வருகிறார்கள்.. ஆனால், அவர்களை அனைவராலும் தேடிப்பிடித்து பயன்பெற முடிவதில்லை.. குறிப்பாக வளரும் கவிஞர்களின் கரங்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.. இதனை மாற்ற வேண்டும்..

மேலும், நம்மைப் போன்றோரிடம் ஒற்றுமை இல்லை.. இந்நிலை மாறி, பல செயலிகளில், இணையங்களில் படைப்புகளை வெளியிடும் நம்மைப்போன்ற கவிஞர்களை ஒன்றுதிரட்ட வேண்டும்.. அதன் பின்னர் நமது குழுவை அரசு அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்து அங்கீகாரம் பெறவேண்டும்.. அதை செய்து, நமது குறைகளை அங்கே ( அதாவது நமக்கு உதவும் அரசாங்கத்திடம்) சுட்ட வேண்டும்.. இதன் மூலம், கவிஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் எளிதாய் அவர் அவர் மாவட்டத்திலேயே கிடைக்கச்செய்ய முடியும்.. இதன் மூலம் வளரும் கவிஞர்கள் அவரவர் மாவட்டத்திலுள்ள உதவும் அரசாங்கத்தை நாடி பயன்பெற முடியும்.. மேலும், அங்கீகாரத்தை ஏற்படுத்தி தர முடியும்.. மாவட்ட வாரியாக இந்த குழு இருப்பின், அதனை சமூக ஊடகங்களிலேயே வெளிப்படுத்தவும் முடியும்..

மேலும், ஆங்காங்கே இன்னும் வாசகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்..அவர்களின் கவனத்தை நம் குழுமீது திருப்பி கவிஞர்கள் திரண்ட இடமான நமது குழுவின் நூல்களை வெளியிடும்போது, பல்வேறான இதழ்களிலும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் செய்தியாக இடம்பெறச் செய்வதன் மூலம் நமது புத்தகத்திற்கான விற்பனை கூடும்.. இதன்மூலம் வளரும் புது கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் நிலை மாறும்.. தமிழகத்தில் மீண்டும் எழுத்தின் நிலை மாறும்..

பேனாவின் மைந்தர்கள் எழுத்தாளர்கள் குழு என்று எழுத்தாளர்களுக்காக எழுத்தாளர்களே துவங்கப்பட்ட இக்குழு பல கவிஞர்களுடன் இணைந்து புத்தகமும் வெளியிட்டுள்ளது.. பல கவிஞர்கள்கள் ( வளரும் கவிஞர்கள், வளர்ந்த கவிஞர்கள்) மற்றும் பதிப்பகத்தார், இதழ்கள், ஆசிரியர்குழு, செயலிகள் முதலானோரை உள்ளடக்கி இக்குழு செயல்படுகிறது.. தங்களையும் இக்குழுவிற்கு வரவேற்கின்றோம்.. குறிப்பு.. நாங்கள் பணத்திற்காக ஏதும் செய்யவில்லை.. வளரும் கவிஞர்களுக்கும் ஓர் வாய்ப்பு வேண்டும் என்றே முயற்சிக்கின்றோம்.. ஓர் திரைப்படம் தமிழ்நாடு முழுக்க திரையரங்கில் ஓடினால்தான் இலாபமோ நட்டமோ தெரியவரும்.. அதே போல நமது புத்தகமும் வெளியிடப்பட்டால்தான் அதன் இலாப நட்டம் தெரியவரும்.. ஆனால், சொந்த பணத்தில் புத்தகம் போட்டு தெரிந்தவர்களுக்கெல்லாம் விசிட்டிங் கார்டு கொடுப்பது போல இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.. இதுதான் வளரும் கவிஞர்களின் நிலையா?

நமக்கு உதவ பலர் முன்நிற்கின்றனர்.. அவர்களை நாடி வளரும் கவிஞர்களுக்கு எளியவகையில் புத்தகம் வெளியிடச் செய்தும் அங்கீகாரம் பெறச்செய்வதுமே எங்கள் நோக்கம்.. பணம் எங்கள் நோக்கமல்ல...

வாருங்கள்‌‌... பேனாவின் மைந்தர்கள் குழுவில் இணைந்து செயல்படலாம்.. மாற்றம் கொண்டுவரலாம்..

🙏நன்றி🙏


-✍️பேனாவின் மைந்தர்கள் குழு✍️

மேலும் விவரங்களுக்கு,
தொடர்புக்கு;
6385518787
9585586188

ஆரம்ப நாள் : 19-Jan-2021
இறுதி நாள் : 24-Jan-2021  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 26-Jan-2021

கைகோர்க்கும் கவிஞர்கள் போட்டி | Competition at Eluthu.com



மேலே