எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆசிரியர் தினம்:: ் * ஆசிரியர் எனும் நண்பர்...

ஆசிரியர் தினம்::

* ஆசிரியர் எனும் நண்பர் *

*சிலேட்டுக்குச்சியில்
கைபிடித்து எழுதி
எழுத்தின் வடிவம் தந்த முதல்
வகுப்பு ஆசிரியர்!

*என் பெயர் இப்படி தான் இருக்கும்
என்ற
என்னிடம் காட்டிய
இரண்டாம் வகுப்பு ஆசிரியர்!

*இரண்டு வரி நோட்டில் மூன்றாம்
வகுப்பு ஆசிரியரும்

*கட்டம் போட்ட கணக்கு நோட்டில்
நான்காம் வகுப்ப்பு ஆசிரியரும

*நான்கு வரி ஆங்கில நோட்டில்
ஐந்தாம் வக்குப்பு ஆசிரியரும
்என்னை திருத்தாவிட்டால்
ஆங்கிலமும், கணக்கும்
தெரியாமலே போய் இருக்கும்!

அசோகர் மரம் நட்டதை கூறினார்
ஆறாம் வகுப்பு ஆசிரியர்!

*ஐசக் நீயூட்டனை அறிமுகம்
செய்தது ஏழாம்
வகுப்பு ஆசிரியயை தான்!

*தொல்காப்பியமும்,
சிலப்பதிகாரமும்
செய்யுள் என்பதை எட்டாம்,
ஒன்பதாம் வகுப்பில் படித்தேன்!

*சச்சின் டெண்டுல்கர் பத்தாம்
வகுப்பில் பெயில் என்பதும்
பத்தாம் வகுப்பு ஆசிரியர்
நடத்திதான்
தெரிந்து கொண்டேன்!

*அமோனியம் குளோரைடையும்,
காப்பர் சல்பேட்டையும்
பதினோன்று, பன்னிரண்டில் கண்
எதிரே காட்டிய
வேதியியல் ஆசிரியர்!

*கல்லூரி சென்றதும் ஆசிரியர்
சிலர் நண்பர்கள் ஆகினர்,
நண்பர்கள் பலர் ஆசிரியர்
ஆகினர்...

இப்பொழுதும் என்னிடம் என்ன
ஆக ஆசை என்றால்
ஆசிரியர் ஆவேன் என்று ஐந்தாம்
வகுப்பில் கூறிய விடை
தான் பதிலாய் உள்ளது!
யாரிடம் இருந்து எல்லாம்
கற்று கொண்டேனோ
அவர்கள் எல்லாம் ஆசிரியர்கள்
தான்!
யாரெல்லாம்
கற்று கொடுத்தீர்களோ
அவர்களுக்கெல்லாம் ஆசிரியர்
தின வாழ்த்துக்கள்!!

பதிவு : Karthi
நாள் : 5-Sep-14, 10:36 am

மேலே