எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

டாய்லெட் சுத்தமாக இருக்க... “அரை லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்...

டாய்லெட் சுத்தமாக இருக்க...

“அரை லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் ஓன்றை எடுத்துக்கங்க. கீழே இருந்து இரண்டு இன்ச் உயரத்தில் சின்னத் துளை ஒன்றைப் போடுங்க. அந்தப் பாட்டிலில் ‘ஃபினாயில்’ நிரப்பி, டாய்லெட் ஃப்ளஷ் டாங்க் உள்ளே வைங்க. ஒவ்வொரு முறையும் டாங்க் ஃப்ளஷ் ஆகும்போது, ஃபினாயில் பாட்டிலிலிருந்து டாங்க் உள்ளே கொஞ்சம் கொஞ்சமா விழும். பாட்டிலில் ஓட்டை போட்ட இடம்வரை டாங்க் நீர் நிரம்பினதும் பாட்டிலிலிருந்து ஃபினாயில் வெளியே வர்றது நின்னுடும்.

அதே நேரம், ஒவ்வொரு முறையும் ஃப்ளஷ் பண்ணும்போதும் கொஞ்சமாக ஃபினாயில் கலந்த தண்ணீர் டாய்லெட்டில் வரும். எப்பவும் டாய்லெட் ஃபினாயில் வாசத்தோட இருக்கும்; கிருமிகள் சேராது. அது மட்டுமா? இந்த அரை லிட்டர் பாட்டிலால், ஒவ்வொரு ஃப்ளஷ்ஷுக்கும் அரை லிட்டர் தண்ணி மிச்சமாகும். எப்படின்னா... அரை லிட்டர் தண்ணி இருக்க வேண்டிய இடத்தை, ஃபினாயில் பாட்டில் ஆக்கிரமிச்சுக்குதே’’ என்கிறார். சென்னை, பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார் த்ரவிதா.

பின்குறிப்பு : நம்மில் பலர் "ஹார்பிக்" அல்லது "செநிஃப்ரெஷ்" உபயோகிக்கிறோம். இந்த புது முறையையும் கையாண்டு பார்க்கலாமே ?

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 11-Dec-13, 3:43 pm

மேலே